ஒளியியல் நேரிலா 767
ஒளிக் சுழல் தளத்தைத் திருப்ப வேண்டும். வலக் கைப்புற மாகக் குறிப்பிட்ட கோணம் நகர்ந்ததும் கற்றை புலப்பட்டால் கரைசலில் உள்ளது வலஞ் சுழிச் சேர்மம் என்றும் இடக்கைப்புறமாக நகர நேர்ந்தால். அது இடஞ்சுழிச் சேர்மம் என்றும் அறியலாம். எந்த அளவுக்கு ஆய்வி நகர்த்தப்படு கிறதோ அந்தக் கோணம்தான் சேர்மத்தின் ஒளிச் சுழற்சிக் கோணம் ஆகும். இந்தக் கோண அளவைக் கொண்டு சேர்மத்தின் ஒப்புமைச் சுழற்சி (specif c rotation) கணக்கிடப்படுகிறது. ஒரு மில்லி லிட்டர் கரைப்பானுக்கு ஒரு கிராம் சேர்மம் என்ற அளவில் கரைசலின் பத்துச் செண்டி மீட்டர் படலத்தினூடே ஒற்றை- நிற ஒளியைச் செலுத்தினால் நிகழும் திசை மாற்றக் கோணம் அச்சேர்மத்தின் ஒப்புமைச் சுழற்சி எனப்படும். காட்டாக, அமைல் ஆல்கஹாலின் ஒப்புமைச் சுழற்சியைக் கூறலாம். 20 =1 5. 756° அதாவது, சோடிய D ஒளிக்கற்றையைத் திசைமுகப் படுத்தி அமைல் ஆல்கஹாலின் குறிப்பிட்ட செறிவுக் கரைசலோடு 20° C வெப்பநிலையில் செலுத்தியபோது 5.756° இடஞ்சுழி ஒளிச்சுழற்சி ஏற்பட்டமை புலனா கிறது. மூலக்கூறுகளில் அணுக்களும் அணுத்தொகுதி களும் அமைந்திருக்கும் வைப்பு முறையை அறிய ஒளிச்சுழற்சி வினை உதவுகிறது. சேர்மங்களின் மூலக் கூறுகளை ஒப்பிட்டறிய ஒப்புமைச் சுழற்சியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். சர்க்கரை ஆலைகளில் தயாரிக்கப்படும் சர்க்கரையின் தரத்தைக்காண ஒளிச் சுழற்சி வினை பயன்படுகிறது. . சமச்சீரிலாக் கார்பன் அணு இல்லாவிட்டாலும் ஒளிச்சுழற்சித் தன்மை கொண்ட சில மூலக்கூறுகளை அறிவியலார் ஆராய்ந்துள்ளனர். அளவில் பெரியதாக அமைந்து, அதன் இரு பகுதிகள் தளச்சீர்மை பெறா திருந்தால் அந்த மூலக்கூறு ஒளிச்சுழற்சித் திறன் கொள்கிறது. வெள்ளீயச் சேர்மங்கள், அல்லீன்கள், ஸ்பைரேன்கள் முதலியன இதற்கு எடுத்துக்காட்டு கள் : கரியைப் போலவே நைட்ரஜன். சிலிக்கான், வெள்ளீயம், ஜெர்மானியம் முதலிய தனிமங்கள் அடங்கிய சில ஒளிச்சுழற்சிச் சேர்மங்களும் ஆய்வுக் கூடங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒளியியல், நேரிலா ருத்ர. துளசிதாஸ் மின்காந்தக் கதிர்வீச்சும் பருப்பொருளும் இடை வினை செய்யும்போது பொருள் படுகதிர் வீச்சுப் ஒளியியல் நேரிலா 767 புலங்களுக்கு நேர்போக்கில்லாத முறையில் மறு விளைவு காட்டுவதை விளக்குவது நேரிலா ஒளியியல் (nonlinear optics) எனப்படும். இத்தகைய நேர்போக் கில்லாத மறுவிளைவு, கதிர்வீச்சுப் புலங்களின் பரவல் பண்புகளில் செறிவு சார்ந்த மாற்றங்களை ஏற்படுத் தக்கூடும் அல்லது புதிய அதிர்வெண்களுள்ள கதிர் வீச்சுப் புலங்களை உண்டாக்கக்கூடும். நேர் போக் கில்லா விளைவுகள் திண்மங்களிலும், நீர்மங்களிலும், வளிமங்களிலும், பிளாஸ்மாக்களிலும் கூட உண்டாக லாம். அவற்றில் ஒன்று அதற்கு மேற்பட்ட மின்காந் தப் புலன்களும் ஊடகத்தின் உள்ளிடக் கிளர்வுகளும் கூடப் பங்கேற்கலாம். நேர்போக்கில்லா இடைவினை கள் தொலைக்கீழ்ச்சிவப்பு (farlR) முதல் வெற்றிடப் புற ஊ ஊதா வரையுள்ள அலை நீளங்களில் நிகழ்கின் றன. சில இடைவினைகள் எக்ஸ் கதிர் நெடுக்கத்தில் கூடக் காணப்பட்டன. நேர்போக்கில்லா ஒளியியல் லேசர்களுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்ட போதும், அத்துறையில் செய்யப்படும் பெரும்பாலான ஆய்வு களுக்கு உயர் ஆற்றல் கொண்ட லேசர் கற்றைகள் உதவி வருகின்றன. பலவகையான அனைத்துப் பொருள்களிலுமே நேர்போக்கில்லாத விளைவுகள் காணப்படுகின்றன. ஊடகத்தின் மறு விளைவைப் படுகதிரின் மின் மற்றும் காந்தப் புலங்களில் ஒரு வலிய தொடராக (power series) விரிப்பதன் மூலம் கணித அடிப்படையில் விவரிப்பது வசதியானதாக இருக்கும். இதில் நேர் போக்கான பதங்கள் (terms) நேர்போக்கான ஒளி விலகு எண், நேர் போக்கான உட்கவர்ச்சி, ஊடகத் தின் காந்த உட்புகு திறன் ஆகியவற்றை உண்டாக்க முடியும். உயர் வரிசைப் பதங்கள் நேர் போக்கில்வாத விளைவுகளை உண்டாக்குகின்றன. சில நேர் போக் கற்ற காந்த ஏற்புத்திறன்கள் (susceptibilities), விரிப் பில் நேர் போக்கற்ற இடைவினைகளின் வலிமையை விளக்கும். குணகங்கள் போன்ற அளவுகள் சில பொருள்களில் நேரடியாகக் கணக்கிடப்பட்டுள்ளன. குறிப்பாக அணுத் தன்மையிலும் மூலக்கூற்றுத் தன்மையிலுமுள்ள வளிமங்கள், சில படிகங்கள் ஆகிய வற்றில் பல்வேறு தத்துவங்களைப் பயன்படுத்தி இக் கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் பொது வாக நேர் போக்கற்ற குணகங்கள் ஆய்வு மூலமே அளவிடப்படும். பொதுவாகப் படுகதிரின் மின்புலத்துடன் தொடர்புள்ள நேர்போக்கற்ற விளைவுகள், காந்த டைவினைகளின் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றன. முனைவாக்கம் (polarisation) எனப்படும் ஊடகத் தின் மின் இருமுனை மறுவிளைவு தொடர்பான விளைவுகள், பொதுவாக மின்புல இடைவினைகளில் மிகுந்த சிறப்புப் பெற்றவை. சமச்சீர்மை மையம் இல்லாத ஊடகங்களைத் தவிரப் பிறவற்றில் இரட் டைப் படை வரிசை இரு முனைக்காந்த ஏற்புத் திறன்கள் சுழியாகும். சில குறிப்பிட்ட வகைப்