768 ஒளியியல் நேரிலா
768 ஒளியியல் நேரிலா படிகங்கள், வெளி விசைகள் செலுத்தப்பட்ட சமச் சீர்மை ஊடகங்கள், சில குறிப்பிட்ட வெவ்வேறு பொருள்கள் சந்திக்கும் பரப்புகள் ஆகியவை சமச் சீர்மை மையமில்லாதவை. சமச்சீர்மை இருந்தாலும் இல்லாவிட்டாலும் அனைத்துப் பொருள்களிலும் ஒற்றைப்படை வரிசைப் பதங்கள் சுழியாக இல்லாமலிருக்கலாம். இடைவினை யின் வரிசை மிகும்போது, நேர் போக்கற்ற காந்த ஏற்புத்திறன்களின் எண்மதிப்பு விரைந்து குறைகிறது. நேர்போக்கற்ற இடை டவினைகளில், இரண்டாம் வரிசை மூன்றாம் வரிசை விளைவுகள் விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. 29ஆம் வரிசை வரை விளைவுகள் காணப்பட்டுள்ளன. மின்கடவாத்தன்மை முறிவு, உட்கவர்ச்சிப் பூரிதம் போன்ற சூழ்நிலை களில் வெவ்வேறு வரிசை விளைவுகளைப் பிரித்தறிய முடியாது. மறு விளைவில் அனைத்து வரிசைகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இரண்டாம் வரிசை விளைவு. இவற்றில் dE என்னும் அளவைச் சார்ந்த ஒரு முனைவாக்கம் தொடர்புடையதாகும். இதில் E என்பது ஒளி அலை களின் மின்புலம். d என்பது நேர் போக்கற்ற ஏற்புத் திறன். இரண்டாம் வரிசை முனைவாக்கத்தில் படு கதிர் அதிர்வெண்களின் கூட்டுத்தொகைக்கும் வேறு பாட்டிற்கும் சமமான அதிர்வெண்களுடன் அதிர்வு செய்யும் ஆக்கக்கூறுகளும், அதிர்வு செய்யாத ஓர் ஆக்கக்கூறும் அடங்கியுள்ளன. அதிர்வுசெய்யும் ஆக்க கூறுகள் ஊடகத்தில் ஒரு பரவும் முனைவாக்க அலையை உண்டாக்குகின்றன. அதில் படுஅலைகளின் பரவல்திசையன்களின் கூட்டுத்தொகையாகவோ வேறு பாடாகவோ உள்ள ஒரு பரவல் திசையன் உள்ளது. மூவலைத் (three அலகுக்கலப்பு துணை parametric mixing) என்னும் செயல் முறையில், நேர் போக்கற்ற முனைவாக்க அலை நேரிணையான அதிர் வெண்ணுள்ள ஓர் ஒளி அலையைத் தோற்றுவிக்கும் மூலமாகச் செயல்படும். wave கட்டப்பொருத்தம். முனைவாக்க அலையின் கட் டத்திசைவேகம், அதே அதிர்வெண்ணுள்ள தன்னிச்சையாகப் பரவும் அலையின் கட்டத் திசை வேகத்திற்குச் சமமாக இருக்கும்போது பெரும வலியுள்ள இடை வினை நிகழ்கிறது. அத்தகைய செயல்முறை, கட்டப்பொருத்தம் (phase matching) உள்ளதாகச் சொல்லப்படும். அனைத்துப் பொருள் களிலும் ஏற்படும் ஒளிவிலகல் எண்ணில் பிரிகை வழக்கமாகக் கட்டப்பொருத்தம் ஏற்படுவதைத் தடுத்துவிடும். இதைத் தவிர்க்கத் தனிச் செயல் முறைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு நேர் கோட்டில் அமையாத கற்றைகளையும், கால முடிவில் மாறும் சுட்டமைப்புள்ள பொருள்களையும் பயன் படுத்துவதன் மூலமும், ஓர் உட்கவர் விளிம்பின் அருகில் முரணிய பிரிகையை ஏற்படுத்தியும், ஒரு காந்தப் புலத்தில் தன்னிச்சையான ஊர்திகளைப் பயன்படுத்தி ஈடு செய்வதன் மூலமும், அல்லது சில படிகங்களின் இரட்டை ஒளி விலக்கத் தன்மையைப் பயன்படுத்தியும் படிகங்களில் கட்டப் பொருத்தம் உண்டாக்கப்படுகிறது. ரண்டாம் வரிசை இடைவினைகளுக்கு இரட்டை ஒளி விலக்க முறை பரவலாகப் பயன் படுகிறது. அதில் இடைவினை செய்யும் அலைகளில் ஒன்று அல்லது இரண்டு அலைகள் படிகத்திற்குள் அசாதாரணக் கதிராகப் பரவுகின்றன. வெப்பநிலை யையும் பரவல் திசையையும் தக்கவாறு அமைத்துக் கட்டப் பொருத்தவிதி முறைகள் ஏற்படுத்தப் படுகின்றன. வழக்கமாக இவ்விதிமுறைகள் தொடர் புடைய தனி அலைகளின் அலை நீளங்களைப் பொறுத் திருக்கும். கட்டப்பொருத்தம் செய்யப்பட்ட மூவலைத் துணை அலகுக்கலப்புக்கான விதிமுறைகள் பின்வருமாறு: yg = vs + v,, K, = K, + K, இங்கு என்பவை அவைகளின் அதிர்வெண்கள்: K என்பவை பரவல் மாறிலிகள் (propagation constants), கட்டப்பொருத்தம் ஏற்பட்டபோது உரு வாக்கப்பட்ட அலையின் திறன், கட்டப் பொருத்த மில்லாத இடைவினைகளில் உண்டாக்கப்படும் அலை களின் திறனைவிடப் பன்மடங்கு மிகுதியாகயிருக் கும். அதிர்வெண் கலப்பு. மூவலை அதிர்வெண் கூட்டல், கழித்தல் கலப்பில், VI. V, என்னும் அதிர்வெண் களுள்ள இரண்டு அலைகள் V என்னும் அதிர்வெண் ணுள்ள மூன்றாம் அலையாக மாற்றப்படுகின்றன. இங்கு v, = 1, + v,. இவ் வகையில் எளிய இடைவினை, இரண்டாம் அடுக்குச் சுர உருவாக்கம் (second harmonic generation) ஆகும். அதில் மிக Vs = 2 11 ஆகும். இந்த இடைவினையில் கட்டப் என ஆகி = பொருத்த நிபந்தனை n, - ' + ' விடுகிறது. இங்கு n என்பது மேற்சுர அலை நீளத் தில் ஒளிவிலகல் எண். மy, ng, ஆகியவை அடிப்படை அதிர்வெண்ணில் படுஅலைகளின் எண்கள். ஒளி விலகல் துடிப்பு லேசர் கதிர்களைப் பயன்படுத்தி இரண்டாம் அடுக்குச் சுர உருவாக்கத்தில் 90%க்கு மேற்பட்ட மாற்றத்திறன் பெறப்பட்டுள்ளது. தொடர் லேசர் கதிர்களைப் பயன்படுத்தும்போது நேர்போக்கற்ற படிகத்தை லேசர் குழியில் வைத் தால் செயலுறுதிறன் மிகுதியாகிறது. இம்முறை யில் தொடர் லேசர் கதிர்களுக்கு உள்ளிட, லேசர் திறனில் 80%க்கு மேற்பட்ட அளவு இரண்டாம் அடுக்குச் சுரமாக மாற்றப்பட்டுள்ளது. நேர்போக்கற்ற படிகங்களின் ஒளி புகும் தன் மைக்கு ஒத்த வகையில் கீழ்ச்சிவப்பிலிருந்து புற ஊதா வரை அலை நீளங்களில் இரண்டாம் மேற்சுர உருவாக்கமும், இரண்டாம் வரிசை அதிர்வெண்