பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/794

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

770 ஒளியியல்‌ பட்டகம்‌

770 ஒளியியல் பட்டகம் செறிவு சார்ந்த விளைவு. படுகதிர் அலைகளுக்குச் சமமான அதிர்வெண்கள் கொண்ட ஆக்கக் கூறுகள் நேர்போக்கற்ற முனைவாக்கத்திலிருந்தால் அவை நேர்போக்கான ஒளியியல் கொள்கைப்படி மாறிலியாக உள்ள ஒளிவிலகல் எண் அல்லது உட்கவர் குணகம் ஆகியவற்றை மாற்றிவிடும் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். குறைந்த ஒளிச்செறிவுகளில் ஒளிபுகக் கூடிய பொருள்களின் உட்கவர் குணகங்கள் உயர் ஒளிச் செறிவுகளில் மிகுதியாகலாம். இவ்விளைவின்போது படுகற்றையிலுள்ள ஒன்று அல்லது அதற்கு மேற் பட்ட அலைகளிலிருந்து பல ஃபோட்டன்கள் ஒரே சமயத்தில் உட்கவரப்படும். அப்போது வளிமங்களில் உயர் ஆற்றல் மட்டங்களுக்குக் கிளர்வூட்டல் ஏற் பட்டாலோ. திண்மங்களில் கடத்தல் பட்டைகளுக்கு மாற்றம் ஏற்பட்டாலோ அது பன்மைப் ஃபோட்டான் உட்கவர்தல் எனப்படும். வளிமங்களில் தொடர் பத்திற்குக் கிளர்வூட்டல் தோன்றினால் அது பன்மைஃபோட்டான் அயனியாக்கம் எனப்படு கிறது. படுகதிர் அதிர்வெண்ணில் வலிவுடைய நேர் போக்கு உட்கவர்ச்சி கொண்ட பொருள்களில், செறிவு மிகும்போது உட்கவர்ச்சி குறையக்கூடும். இவ்விளைவு தெவிட்டிய உட்கவர்ச்சி (saturable absorption) எனப்படுகிறது. லேசர்கள் கண்டுபிடிக்கப் படுவதற்கு முன்பே இவ்விளைவு கண்டுபிடிக்கப்பட் டது. இத்தகைய பொருள்கள் Q-மாற்ற (Q-Switched வகை . பூட்டிய (mode locked) வேசர்களை இயக்க உ உதவுகின்றன. தானாகக் குவிதலும், குவிய நீக்கமும். ஒளி விலகல் எண்ணில் ஏற்படும் செறிவு சார்ந்த மாற்றங்கள் ஒரு லேசர் கற்றையின் பரவல் சிறப்பியல்புகளைத் தாக்கக் கூடும். பலவிதமான திண்ம, நீர்ம, வளிமப் பொருள் களில் ஒளிச் செறிவு மிகும்போது ஒளி விலகல் எண் மிகும். ஒரு லேசர் கற்றையின் மையப்பகுதி வெளிப் பகுதியை விட மிகு செறிவுடையதாக இருக்கு மானால். விலகு எண்ணில் ஏற்படும் மாற்றம் காரணமாகக் கற்றை குவிக்கப்படுகிறது. இவ் விளைவு தானாகக் குவிதல் (self focussing) எனப்படும். இதனால் தொடக்கத்தில் சீராக உள்ள லேசர் கற்றை உடைந்து பல சிறிய புள்ளிகளாக மாறிவிடும். அவை சில மைக்ரோ மீட்டர்கள் விட்ட முள்ளவையாகவும், பல திண்மங்களை அழிக்கும் அளவுக்கு உயர் செறிவுடையவையாகவும் இருக்கும். இவ்விளைவின் காரணமாகச் சில உயர் ஆற்றல் துடிப்பைத்தரும் திண்மநிலை லேசர்கருவிகளிலிருந்து வெளிப்படக்கூடிய ஆற்றலின் அளவுக்கு ஓர் உயர் வரம்பு விதிக்கப்பட்டுவிடுகிறது. லேசர் பிறபல பொருள்களில் ஒளிச் செறிவு மிகும்போது விலகல் எண் குறையும். இதன் காரணமாக கற்றை விரியும். இது குலிய நீக்கம் (defocussing) எனப்படும். குறைந்த அளவில் உட்கவரும் பொருள் களில் இது நிகழும்போது இவ்விளைவுக்கு வெப்ப மலர்ச்சி (therma! blooming) எனப் பெயர்.உயர் ஆற்றல் கீழ்ச்சிவப்பு லேசர் கற்றைகள் வளிமண்டலத் தின் வழியாகப் பரவும்போது இது மேம்பட்டுத் தெரியும். துடிப்பு லேசர்புலங்கள் தொடர்புள்ளபோது நேர் போக்கற்ற ஒளி விலகல் எண் லேசர் நிற மாலையை அகலப்படுத்தக்கூடும். கே.என். ராமச்சந்திரன் ஒளியியல் பட்டகம் மூன்று சமதளப் பரப்புகளுக்குள் அடங்கிய ஒரு முக் கோணக் குறுக்குவெட்டுத் தோற்றமுள்ள ஊடகம் பட்டகம் எனப்படும். அது திண்மமாகவோ பட்டக வடிவில் அமைந்த கலத்தில் நிரப்பப்பட்ட நீர்ம மாகவோ இருக்கலாம். வழக்கமாகப் பட்டகங்கள் ஒளிக்கதிர்களைத் திசை திருப்பப் பயன்படுகின்றன. இத் திசைமாற்றத்தின் அளவு பட்டகப் பொருளின் ஒளி விலகல் எண்ணைப் பொறுத்துள்ளது. ஒளி விலகல் எண் கதிரின் அலை நீளத்தைப் பொறுத்து மாறுகிறது. எனவே பட்டகங்களின் உதவியால் நிறப் பிரிகையையும் ஏற்படுத்தலாம். பட்டகங்களைச் சமதள ஆடிகளைப்போல ஒளியின் திசையை மாற்றப் பயன்படுத்த முடியும். பல கருவிகளில் ஆடிகளுக்குப் பதிலாகப் பட்டகங்கள் பயன் படுகின்றன. எதிரொளிப்புப் பரப்பு அரிப்புக்குள்ளா வதில்லை என்பது பட்டகங்களின் நன்மையாகும். எதிரொளிப்புக் கருவிகளாகப் பட்டகங்கள் பணி யாற்றும்போது குறைந்தது ஒரு முறையாவது முழு உள் எதிரொளிப்பு நிகழ்கிறது. படுகோணமும் வெளி வரு கோணமும் சுழியாக இருக்கும்போது நிறப் பிரிகை நிகழாது. ஒளி படும் பரப்பில் ஏற்படும் நிறப் பிரிகையும் ஒளி வெளி வரும் பரப்பில் தோன்றும் நிறப்பிரிகையும் ஒன்றுக்கொன்று ஈடுசெய்யும் எதி ரான தன்மையில் அமையும் வகையில் பட்டகம் வடி வமைக்கப்பட்டிருந்தாலும் நிறப்பிரிகை ஏற்படாது. 4 நிறப்பிரிகை செய்யும் பட்டகங்கள் வெவ்வேறு அலைநீள ஒளிகளை வெவ்வேறு அளவுக்குத் திசை மாற்றம் செய்கின்றன. அவற்றின் உதவியால் வெள்ளை ஒளியை அதன் ஒற்றை நிற ஆக்கக்கூறு களாகப் பிரித்து விடலாம். ஒரு பட்டகத்தில் நுழை யும் இணையான ஒளிக்கற்றை அதிலிருந்து இணை யான கற்றையாகவே வெளியேறலாம். ஆனால் கற்றையின் விட்டம் மாறிவிடும். படுகற்றையின் விட்டத்திற்கும் வெளிவருகற்றையின் விட்டத்திற்கும் இடையுள்ள தகவு பட்டகத்தின் உருப்பெருக்கம் எனக் கொள்ளலாம். பட்டக விளிம்புக்கு இணையாக வரும் ஓர் ஒளிக்கற்றையின் உருப்பெருக்கம் எப்போ தும் ஒன்றுக்குச் சமமாக இருக்கும். ஆனால் கற்றை