பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/796

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

772 ஒளியியல்‌ பரப்பு

772 ஒளியியல் பரப்பு மதிப்புக்குச் சமமாக இருக்கும். இவை கண்மருத்து வத்தில் பயன்படுகின்றன. அவற்றின் திறன்கள் பட்டக டயாப்டர் (prismdiopter) என்னும் அலகில் அளக்கப்படும். படம் 3இல் காட்டப்பட்டுள்ள ரிஸ்லி பட்டக அமைப்பு, பார்வை குவிதலை (ocular convergence) ஆய்வு செய்யப் பயன்படுகிறது. அதில் இரு மெலிந்த பட்டகங்கள் ஒன்றுக்கொன்று எதிரான திசைகளில் சுழலும் வகையில் பொருத்தப்பட்டுள்ளன. அவை இடப் பக்கத்திலுள்ளதைப்போல அமைந்திருக்கும் போது அவற்றின் கூட்டுத் திசைமாற்றம் சுழியாகும். அவை இரண்டையும் வலப் பக்கத்திலுள்ளதைப் போல எதிர் எதிரான திசைகளில் 90 சுழற்றிய பிறகு அவற்றின் கூட்டுத் திசைமாற்றம் பெருமமாகி விடும். இவ்வாறு திசை மாற்றத்தைச் சுழிக்கும் பெருமத்திற்கும் இடையில் எந்த அளவிலும் அமைத் துக் கொள்ளலாம். ஆனால் திசைமாற்றத் தளம் மாறாது. இத்தகைய சுழலும் பட்டக இரட்டைகள் சில வகைத் தொலைவு கண்டுபிடிக்கும் கருவிகளில் பயன்படுகின்றன. - கே. என். ராமச்சந்திரன். நூலோதி. F. Jenkins, and H. White, Funda mentals of Optics, McGraw Hill Book Company, New York, 1976. ஒளியியல் பரப்பு பல சாதாரணமான ஒளிக்கருவிகளில் வில்லைகளும் ஆடிகளும் உள்ளன. அவற்றின் மேற்பரப்பு பலவகை வளைவு ஆரங்களுடன் இருக்கும். அவற்றில் கோளப் பரப்புகளும் கோளமற்ற பரப்புகளும் இருக்கும். சுழற்சிச் சமச்சீர்மையுடன் கூடிய நீள்கோளப் பரப்புகள், மிகுபர வளையப் பரப்புகள், பர வளையப் பரப்புகள் ஆகியவை கோளமற்ற பரப்பு களாகும். செங்குத்துத் திசைகளில் மாறுபட்ட உருப் பெருக்கம் காட்டும் (anamorphotic) அமைப்புகளில் உருளை வில்லைகளும், உருளை வளையவில்லை களும் பயன்படுகின்றன. கோளமற்ற பரப்புகளை விடக் கோளப் பரப்புகளில் சாணை பிடிப்பதும் மெரு கேற்றுவதும் எளிது. எனவே பெரும்பாலான ஒளியியல் அமைப்புகளில் இருபுறமும் கோளப்பரப்புகளைக் கொண்ட வில்லைகளையே பயன்படுத்துகின்றனர். இப்பரப்புகளின் வளைவு மையங்கள் ஒரு நேர்கோட் டில் அமைந்திருக்கும். அந்த நேர்கோடு ஒளியியல் அமைப்பின் அச்சு எனப்படும். அச்சுக்கோளப்பரப் பைச் சந்திக்கும் புள்ளி, கோணமுனை (vertex) எனப்படுகிறது. ஒரு சமதளப்பரப்பு வரம்பிலியான வளைவு ஆரம் (radius of curvature) கொண்ட ஒரு கோளப்பரப்பாகவே கருதப்படுகிறது. அதன் வளைவு மையம் வரம்பிலியில் அமைந்திருக்கும். . ஒரு குறிப்பிட்ட அலைப் பரப்புக்குச் செங்குத் தான கதிர்களை ஒரு கோளமற்ற பரப்பில் ஒளி விலக்கம் அல்லது எதிரொளிப்பு அடையச்செய்து வேறு ஒரு தேவையான அலைப் பரப்புக்குச் செங் குத்தாக இருக்கும்படிச் செய்யலாம். ஓர் அமைப்பின் துளைப் பிழைகளைக் குறைப்பதற்காகப் பல சமயங் களில் இந்த உத்தி கையாளப்படுகிறது. உருத்தோற்ற மடைய வேண்டிய புலம் சிறியதாயிருக்கும்போது இது நல்ல பயனளிக்கிறது. எடுத்துக்காட்டாகப் பெரிய தொலைநோக்கிகள் கோளமற்ற பரப்புள்ள ஆடிகளைப் பயன்படுத்துகின்றன. அடிப்படை அமைப்பு பிழையற்றதாக இருந்தால், கோளமற்ற தன்மை பிற திருத்தங்களைக் குலைத்து விடாம லிருக்கக் கூடும். கோளமற்ற பரப்புகளைப் பயன் படுத்தித் துளைமையத்தின் வழியே வரும் முதன்மைக் கதிர்களின் பிழைகளையும் நீக்கலாம். கோளமற்ற பரப்புகளை உருவாக்குவது கடினம். ஒரே மாதிரியான பல கோளமற்ற பரப்புள்ள உறுப்பு களை உண்டாக்கும்போது சாணை பிடிக்கவும் மெரு கேற்றவும் தனிவகையான முறைகளைப் பயன்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக மூக்குக்கண்ணாடி வில்லைகள், பரவளைய அல்லது நீள்வட்டப்பரப் புள்ள ஆடிகள் ஆகியவற்றை உருவாக்க அச்சுப் பலகைகள் (templates) பயன்படுகின்றன. வானி யல் தொலை நோக்கிகளின் வில்லைகளைப் போன்று நுட்பமானதிருத்தங்கள் தேவைப்படும்போது தேவையான மாற்றங்கள் கையால் செய்யப்படுகின் றன. அவ்வளவு நுட்பம் தேவைப்படாத குவி வில்லை கள் போன்றவற்றை அச்சுகளிலிட்டு உருவாக்க லாம். தேடு விளக்குகளில் (search lights) பயன்படும் பெரிய பரவளைய ஆடிகள், திரைப்பட வீழ்த்திகளின் வில் விளக்குகளில் பயன்படும் நீள்வட்ட ஆடிகள் ஆகியவற்றை உண்டாக்கும்போது பெரிய கண்ணாடிப் பலகைகளைத் தக்க அச்சுகளில் வைத்துச் சூடாக்கு கின்றனர். அவை இளகி அச்சுகளில் பொருந்திப் படிகின்றன. அனைத்துப் பரப்புகளுக்கும் பொருந்தும் வகை யில் கதிர்ப் பாதை வரைவுச் சமன்பாடுகளைப் பெற ஆய அச்சுகளின் தொடக்கப்புள்ளியைப் பரப்பின் கோண முனையில் பொருந்துமாறு செய்வது வசதி யாயிருக்கும். ஆயினும் ஒளிவிலகல் பரப்புகளுக்கு வளைவு மையத்தில் தொடக்கப்புள்ளியை வைத்துக் கொள்வது மேலும் எளிமையான சமன்பாடுகளை அளிக்கும். 7 அச்சு ஒளியியல் அமைப்பின் அச்சுக்கு இணையாகவும், x,y அச்சுகள் அதற்குச் செங்குத்தா கவும் இருக்கும்போது பரப்புக்குப் பின்வரும் சமன் பாடுகள் கிடைக்கும். சமதளப்பரப்புக்கு =O