பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/802

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

778 ஒளியிய வானியல்‌

778 ஒளியிய வானியல் புதுத் துணைக் வந்தன. கருவிகளும் வழக்கத்துக்கு விண் வெற்றுக் கண்களால் நேராகக் காண்பதைவிடத் தொலைநோக்கிகளின் வழியே காண்பதால் காணும் புலம் மிகுதியாகிறது. துளை மிகுதி, உயர் உருப் பெருக்குத்திறன் காரணங்களால் ஆகிய வெளியை மேலும் விரிவாக ஆராய வாய்ப்பும் ஏற் பட்டது. வில்லியம் ஹெர்ஷல் என்னும் ஆங்கில நாட்டு வானியல் அறிஞர். உடுக்கண வானியல் (stellar astronomy) என்னும் துறைக்கு வித்திட்ட தால் புதிய அண்டத்தோற்றக் கொள்கைகள் வந்தன. நிறமாலை ஆய்வு முறைகள், ஒளிப்படவியல், ஒளி அளவியல் ஆகிய புதிய துறைகள் தோன்றின. இவற் றின் முறைகள் தொலைநோக்கி ஆய்வோடு இணைந்து ஒளியிய வானியல் துறையில் வியத்தகு கண்டுபிடிப்புகளுக்கு வழி வகுத்தன. ஒளியியத் தொலைநோக்கிக் (optical telescope) கண்மணி (pupil) மிகவும் சிறியது. அதன் வழியே செல்லும் ஒளி குறைவு. எனவே மிகத் தொலைவி லுள்ள பொருள்களின் ஒளியைத் திரட்டி அனுப்பு வதற்கும், நெருக்கமாக உள்ள விண்மீன்களைப் பிரித்து அறிவதற்கும் கண்களால் இயலாது. ஆனால் தொலைநோக்கிகளின் ஒளித்துளை பெரிதாகையால் ஒளியைத் திரட்டி அனுப்பும் திறனும் பிரித்தறியும் திறனும் மிகுதியாகும். தொலைநோக்கிகள் விண் வெளிப் பொருள்களில் இருந்து வரும் ஒளியைத் தொகுத்துக் குவித்து உருத்தோற்றத்தை உண்டாக்கு வதை நேராகப் பார்க்கலாம் அல்லது ஒளிப்பட மாகப் பதிவு செய்து கொள்ளலாம். பயன் பொதுவாக இருவகைத் தொலைநோக்கிகள் வழக்கத்தில் உள்ளன. முதலில், ஒளிவிலகுந் தொலைநோக்கிகள் (refracting telescopes ) பாட்டுக்கு வந்தன. இவை காணும் பொருளருகே (objective) ஒரு குவி வில்லையும் (convex lens), காணும் இடத்தின் முன் பகுதியில் சிறிய குவி வில்லையும் கொண்டு வடிவமைக்கப்பட்டன. இத்த தொலைநோக்கிகளில் வில்லை பெரியதாக கைய அமைய அமைய உருத்தோற்ற ஒளித்திறன் மிகுதியாகக் கிடைக்கும். இதனால் தொலைவில் உள்ள மங்கலான பொருள்கள் தெளிவாகத் தெரியவரும். ஆனால் உருத்தோற்றங்களின் நிற மாலை வண்ணங்கள் கலந்த நிறப்பிறழ்ச்சி தவிர்க்க முடியாததாகப் போய்விடும். இக்குறையைத் தவிர்க்க எதிரொளிர் தொலை நோக்கிகள் (reflecting telescopes) பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டன. இதில் விண்பொருள்களின் ஒளியைத் திரட்டுவதற்கு வில்லைக்குப் பதிலாகக் குழி ஆடி (concave) (mirror) பயன்படுகிறது. ஆடியின் விட்டம் அதிமாக, ஒளியைத் திரட்டும் திறன் அதிக ஆடிகளை மாகிறது. வில்லைகளைவிடப் பெரிய எளிதாகவும், நுட்பமாகவும் உருவாக்க முடியும். தொலைநோக்கியின் பயனை அளவிட அதன் உருப்பெருக்குத் திறனைவிட ஒளியைத் திரட்டும் திறனும் நுட்பமாகப் பிரித்துக் காட்டும் திறனும் (resolving power) சிறப்பாகக் சிறப்பாகக் கருதப்படுகின்றன. நிலவு, கோள்கள், தொலைவில்உள்ள விண்மீன்கள் முதலியவற்றைத் தொலைநோக்கி வழியாகப் பெரிது படுத்திக் காணலாம், விண்மீன்களை நோக்கித் தொலைநோக்கியை அமைக்கும்போது அவை அமைந் திருக்கும் திசையை அறியமுடிகிறது. தொலைநோக்கியை ஒளிப்படக் கருவியாகப்பயன் படுத்தி வான் காட்சியை ஒளிப்படமாகப் பதிவு செய் வதால் வானியல் ஆய்வு மேலும் தெளிவடைகிறது. கண்ணால் பார்க்கும் காட்சி மறைந்துவிட்டாலும் ஒளிப்படப் பதிவு மறையாததாகிவிடுகிறது. ஒளி மங்க லான வான் பொருளைத் தொடர்ந்து நீண்ட நேரம் பதிவுசெய்து ஒளிமிக்க உருத்தோற்றமாகப் பதிவு செய்யமுடிகிறது. விண் பொருள்களைத் தொடர்ச்சி ஒளிப்படமாகப் பதிவு செய்யும்போது அவற்றின் இயக்கம் முதலான செய்திகள் தெளிவுறு கின்றன. யாக தொலை ஒளிப்பட அளவி (photometer). இது நோக்கியோடு சேர்ந்து பயன்படும் கருவியாகும். இதன் துணை கொண்டு விண்மீன்களின் ஒளித்திறன் அல்லது ஒளிர்மை (brightness) பற்றி அறிய முடியும். தொலைநோக்கி வழியாகத் திரட்டப்பட்ட விண்மீனிலிருந்து வரும் ஒளி, வண்ண வடிகட்டிகள் (filters) தொடர் வழியே செலுத்தப்படுகின்றன. அங்கு ஒரு வண்ணம் மட்டுமே ஒளிப்பட அளவி வழிச் செல்லுமாறு செய்யப்படுகிறது. இக்கருவியுடன் இணைத்துள்ள மின் கருவிகள் ஒளியின் திறனை அளவிட்டுப் பதிவு செய்கின்றன. விண்மீன் வெளியிடும் ஒளியின் ஒவ்வொரு வண்ண ஒளித்திறனையும் அளவிடலாம். பல விண்மீன்களின் ஒளித்திறன்களை ஒப்பிடுவதற்கும், தன் ஒளியினை மாற்றிக் கொண்டேயிருக்கும் ஒளிர்மீன்களைப்பற்றி ஆராய் வதற்கும் ஒளிப்பட அளவி சிறந்த கருவியாகும். நிறமாலை வரைவி, விண்பொருள்களின் கூறுகளை ஆராய்வதற்காக அப்பொருள்களிலிருந்து வரும் ஒளியின் நிறமாலையைப் பிரித்தறிய முயல்கின்றனர். கண்ணாடிப் பட்டகத்தினுள் ஒளி ஊடுருவிச் செல்லும் போது அதன் பாதை கோட்டம் அடைகிறது. க் கோட்டம் ஒளியின் வண்ணத்தைப் பொறுத்தது. செந்நிற வண்ணம் குறைவான கோட்டத்தையும் செங்கரு நீலம் (violet) வண்ணம் மிகுதியான கோட்டத்தையும் உடையனவாக இருக்கும். வேறு பட்ட வண்ணங்கள் வேறுபட்ட திசைகளில் கோட்ட மடைவதால் பல வண்ணங்கள் கொண்ட நிறமாலை