பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/808

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

784 ஒளிர்ச்சி

〃 784 ஒளிர்ச்சி தற்சுழற்சிப் பரிமாற்றம். இரண்டு துகள்கள் மோதிக் கொள்ளும்போது ஒன்றினுடைய கோண உந்தம் மற்றொன்றிற்கு மாற்றப்படும் இம்முறை, ஒளியேற்ற இயலாத அணுக்கட்டமைப்பிற்கு இணைப் பொருமை அல்லது முகப்புநிலை அளிக்கப் பயன்படு கிறது. ஒளியேற்றப்பட்ட 'அ' வகை மாதிரிக் கூறு ஆ வகை மாதிரிக் கூறின் மீது மோத ஏற்பளிப் பதால் முகப்புநிலை 'ஆ' க்கு மாற்றப்படுகிறது. 'அ', 'ஆ' இரண்டும் ஆற்றல் மட்டங்களுக்கு இடையே விரவப்பட்ட சமநிலையை அடைகின்றன. 'ஆ' வின் முகப்புநிலையற்ற தன்மை மீண்டும் 'அ' விற்கு மாற்றப்படுகிறது. 'அ' வின் மாறுபாட்டை ஒளியியல் முறையில் கண்டுபிடிக்கலாம். தனித்த தற்சுழற்சி ஒத்ததிர்வையும் எலெக்ட்ரான்களின் காந்தத் திருப்புத்திறனையும் அளக்க இம்முறை பயன்படுகிறது. எலெக்ட்ரான்களின் ஆற்றல் குறைந்த காந்தப் புலத்திற்கு இணை யாக முன்னேறும் வட்ட முனைவாக்கமுடைய D என்னும் கதிர்வீச்சால், ஆவி செல்லில் உள்ள கீழ் மட்டச் சோடிய அணுக்கள் திசையமைக்கப்படு கின்றன. தொடர்ந்து வரும் குறுகிய ரேடியோ அதிர் வெண்கொண்ட துடிப்புகளால் செல்லில் எலெக்ட் ரான்கள் உருவாக்கப்படுகின்றன. ஒளியேற்றப்பட்ட சோடிய ஆவியுடன் தற்சுழற்சிப்பரிமாற்ற மோதலால் எலெக்ட்ரான்கள் காந்த ஒத்ததிர்வு இடப்பெயர்ச்சி யின் தெவிட்டுநிலைத் தற்சுழற்சியின் திருப்புதலில் முடிகிறது. இவ்வகைத் திசைத்திருப்பம் மீண்டும், தற்சுழற்சிப் பரிமாற்ற மோதலால் சோடிய ஆவிக்கு மீண்டும் அனுப்பப்படுகிறது. சோடிய ஆவியின் வட்ட முனைவாக்கமுடைய D. கதிர்வீச்சின் மிகுதியாகும் உட்கவர்தலால், எலக்ட்ரான்களின் ஒத்ததிர்வைக் கண்டுபிடிக்கலாம். ல் அணு அமைப்பு ஆய்வுக்கு ஒளியேற்றச் செய் முறைத் திறம் இயல்பாகப் பயன்படுத்தப்பட்டது. இதற்குக் காரணம், லேசர் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன் எளிதாகக் கிடைத்த ஒரு செறிவார்ந்த ஒற்றை நிற ஒளி மூல அணு நிறமாலை விளக்கேயாகும். அணுக்களில் வலிமையான ஒத்ததிர்வு ஒளிர்தல் இடப் பெயர்ச்சி, ஒளியேற்ற ஆய்வுகளால் எந்த நிலைபற்றி ஆய்வு செய்ய இயலும் என்பதை முடிவுசெய்கிறது. திண்மப்பொருள், மூலக்கூறுகளின் அமைப்பு ஆகி யவை பற்றிய ஆய்வு. தற்செயலாகக் கிடைக்கக் கூடிய சரியான செறிவார்ந்த ஒற்றை நிற ஒளி மூலத் தைப் பொறுத்தே அமையும். இதனால் ஆய்வு செய்ய வேண்டிய நிலை பொதுவாக முன்னதாகவே முடிவு செய்யப்பட்டு விடுகிறது. லேசர் நிறமாலையியலில் அடிப்படை ஒளியேற்றத் தத்துவம் பயன்படுகிறது. ஆனால் செறிவார்ந்த ஒற்றை நிற ஒளிமூலம் கிடைப் பதில் இருந்த தடைகள் பெரும்பாலும் நீக்கப்பட்டு விட்டன. சா.நாகராசன் ஒளிர்ச்சி candle) ஒரு சதுர ஓர் ஒளி மூலம் ஒரு நொடியில் அனைத்துத் திசை களிலும் வீசக்கூடிய ஒளியாற்றல் அந்த மூலத்தின் மொத்த ஒளி விளக்கப் பாயம் (total luminous flux) எனப்படும். அது அனைத்துலகச் செந்தர மெழுகு வத்தித்திறன் (international standard என்னும் அலகால் அளக்கப்படுகிறது. செண்டிமீட்டர் பரப்பளவுள்ள கரும் பொருள் ஒன்று பிளாட்டினத்தின் உருகு நிலையான 1769°C வெப்ப நிலையில் இருக்கும்போது அதிலிருந்து வெளிப்படும் ஒளியாற்றலில் 60 இல் ஒரு பங்கு அனைத்துலகச் செந்தர மெழுகுவத்தித்திறன் எனப்படும். ஓர் ஒளி மூலத்தின் மொத்த ஒளி விளக்கப் பாயம் F எனலாம். ஒளி மூலத்தின் திண்மக் கோணம் கொண்ட ஒரு பரப்பின் மேல் இந்த ஒளி யாற்றல் விழுமாயின் F/n என்னும் தகவு அப்பரப் பின் ஒளி விளக்கச் செறிவு (luminous intensity } அல்லது ஒளி வீசு திறன் ஆகும். ஒளி விளக்கச் செறிவு L=F/ய அல்லது F= Lo . ஒளி மூலத்தின் மொத்தத் திண்மக் கோணம் 47 ஆதலால் மொத்த ஒளி விளக்கப் பாயம் F=4.L. ஒளி விளக்கச் செறி வின் அலகு லூமென் ஆகும். ஒரு நொடிக்கு ஒரு மெழுகுவத்தித்திறன் அளவு ஒளி வீசும் சீரான ஒரு புள்ளி மூலத்திலிருந்து ஓர் அலகுத் திண்மக் கோணம் கொண்ட (ஒரு செண்டி மீட்டர் தொலைவில் ஒரு சதுர செண்டிமீட்டர் பரப்பளவுள்ள) பரப்பின் மேல் விழும் ஒளியின் அளவு ஒரு லூமென் ஆகும். F என்னும் மொத்த ஒளி விளக்கப் பாயம் கொண்ட ஓர் ஒளி மூலத்திலிருந்து வரும் ஒளி A பரப்பளவுள்ள பரப்பின்மேல் விழுந்தால் அப்பரப் பின் ஒளிர்ச்சி (illuminance), I=F/A ஆகும். R ஆரம் கொண்ட ஒரு கோளத்தின் மையத் தில் F என்னும் மொத்த ஒளி விளக்கப் பாயம் உடைய ஒரு புள்ளி மூலம் வைக்கப்பட்டிருந்தால் அந்தக் கோளப் பரப்பில் ஒவ்வொரு சதுர செண்டி மீட்டர் பரப்பிலும் ஏற்படும் ஒளிர்ச்சி = F/4ØR? கோளம் அலகு ஆரம் கொண்டது ஆனால் ஒளிர்ச்சி =F[4.ஒரு லூமென்/சதுர செண்டி மீட்டர் என்பது ஒரு ஃபோட் (phct) எனவும் ஒரு லூமென்/சதுர அடி என்பது ஒரு அடி மெழுகுவத்தி (foot candic) எனவும் குறிக்கப்படும். லூமென் சதுர மீட்டர் ஒரு லக்ஸ் (lux) அல்லது மீட்டர் மெழுகுவத்தி எனப் படுகிறது. ஒரு புள்ளியில் ஏற்படும் ஒளிர்ச்சி அந்தப் புள்ளி ஒளி மூலத்திலிருந்து இருக்கும் தொலைவின் இரு மடிக்குத் தலைகீழ் விகிதத்தில் இருக்கும். இது லாம் பெர்டின் ஒளிர்ச்சி விதியாகும். ஒரு தளம் ஒளி