ஒளிர்தல் 785
மூலத்தில் இருந்து வரும் ஒளிக் கற்றைக்குச் செங்குத் தாக இராமல் சாய்ந்திருந்தால், தளத்தின் ஒளிர்ச்சி ஒளிக்கற்றைக்கும், செங்குத்துத் தளத்திற்குமுள்ள கோணத்தின் கொசைன் மதிப்பிற்கு நேர்விகிதத்தில் இருக்கும். இது லாம்பர்ட்டின் கொசைன் விதி எனப் படும். ஒளிர்தல் கே.என். ராமச்சந்திரன் வெப்பத்தால் மட்டுமே ஒரு பொருளிலிருந்து வெளிப் படுவதாகச் சொல்ல முடியாத ஒளி, தன்னொளிர்வு (luminescence) எனப்படும். ஒளி உமிழ்வைத் தூண்டி விடுகிற ஆற்றல் தோன்றிய தன்மையைப் பொறுத்துத் தன்னொளிர்வுகள் வகைப்படுத்தப்படுகின்றன. ஒரு வேதி வினையின் காரணமாகத் தோன்றிய ஆற்ற லால் தூண்டப்படும் ஒளி உமிழ்வு வேதி ஒளிர்வு chemiluminescence) எனப்படும். சாதாரண வெப்ப நிலைகளில் பாஸ்ஃபரஸ் மெல்ல ஆக்சிஜனேற்றம் அடையும்போது இத்தகைய தன்னொளிர்வு தோன் றும். வேதி ஒளிர்வு ஓர் உயிரியில் உண்டாகும்போது அது உயிரி ஒளிர்வு (bioluminescence) எனப்படுகிறது. மின்மினிப்பூச்சிகளிலும் வேறு பல உயிரிகளிலும் தோன்றும் ஒளிர்வு இத்தகையது. வேதி ஒளிர்விலும் உயிரி ஒளிர்விலும் நிகழும் வேதி வினையின் ஆற்றலில் ஒரு பகுதி ஒளியாக மாற்றப்படுகிறது. சில வகைத் தன்னொளிர்வுகள், வெளியிலிருந்து ஏதாவது ஒரு வகை ஆற்றல் பொருளுக்குள் பாய்வ வதாலும் ஏற்படும். அந்த ஆற்றல் பிறக்கும் மூலத் தின் அடிப்படையில் இந்தத் தன்னொளிர்வுகளுக்குப் பெயர் சூட்டப்படுகிறது. எலெக்ட்ரான்கள் மோது வதால் ஏற்படும் ஆற்றலின் காரணமாகத் தோன்றும் ஒளிர்வு எதிர்மின் ஒளிர்வு (cathodoluminescence} எனப்படும். எக்ஸ் கதிர்களாலோ காமாக்கதிர் களாலோ உண்டாக்கப்படும் தன்னொளிர்வு கதிரியக்க ஒளிர்வு (radioluminescence) அல்லது ரான்ட்ஜன் ஒளிர்வு (roentgenoluminescence) எனப்படுகிறது. புறஊதா, கண்ணுக்குப் புலனாகும் ஒளி, கீழ்ச் சிவப்பு ஆகிய கதிர்களின் ஆற்றலால் தோன்றும் தன்னொளிர்வு ஒளிஒளிர்வு (photoluminescence) ஆகும். மின்புலத்தைச் செலுத்துவதால் தோன்றும் ஆற்றலால் நிகழும் தன்னொளிர்வு மின் ஒளிர்வு (electroluminescence) எனப்படும். பிற காரணங் களால் ஏற்படும் ஒளிர்வுகளுக்கு முன்னொட்டுச் சொற்களைச் சேர்த்துப் பெயர் சூட்டப்படுகிறது. பலசமயங்களில் ஒரே பொருளைப் பல்வேறு வெளிக் காரணிகளின் மூலம் கிளர்வூட்டி ஒளிர்வுறச் செய்ய லாம். எவ்வகையான கிளர்வூட்டலாயிருந்தாலும், ஒளிர்தல் 785 ஒளிர்வை உண்டாக்கும் அணு அல்லது மூலக்கூறு நிகழ்வுகள் அடிப்படையில் ஒரே தன்மையானவை. எனவே மேற்காணும் பாகுபாடுகள் வசதியை முன்னிட்டுச் செய்யப்பட்டவையே அன்றி அடிப்படை யில் வேறுபட்டவையல்ல. ஒரு குறிப்பிட்ட வடிவமைப்புள்ள ஒளிர்வு அமைப்பில் போதுமான செறிவுள்ள கிளர் ஆற்ற லைச் செலுத்திக் கிளர்வுற்ற அணுக்களின் எண்ணிக் கையைக் கிளர்வூட்டப்படாத அணுக்களின் எண்ணிக் கையைவிட உயர்த்தும்போது லேசர் செயல் தோன் றும். லேசர் என்பது ஓரிய ஓரியல்பான கதிர்களைக் கொண்டு தூண்டப்பட்ட ஒளிர்வு ஆகும். பிறவகை ஒளிர்வு அமைப்புகளைக் கிளர்வூட்டும்போது ஓரியல் பற்ற ஒளிர்வு தானாகவே தோன்றுவதிலிருந்து லேசர் செயல் முற்றிலும் வேறுபட்ட நிகழ்வு ஆகும். கிளர்வூட்டும் ஆற்றல் பாய்வது நின்ற பிறகும் பொருளின் ஒளிர்வு நீடிக்கும் தன்மையைப் பொறுத் துத் தன்னொளிர்வு வகைப்படுத்தப்படுவதும் உண்டு. கிளர்வூட்டும் ஆற்றலைச் செலுத்துவதை நிறுத்திய பிறகும் பல பொருள்களில் தொடர்ந்து ஒளிர்வு வெளிப்பட்டுக்கொண்டேயுள்ளது. இந்தத் தாமதித்த ஒளிர்வு பொதுவாகப் பின்னொளிர்வு (phosphores- cence) எனப்படுகிறது. கிளர்வூட்டப்படும் நேரத்தில் வெளியிடப்படும் ஒளிர்வு நின்றொளிர்வு (fluores- cence) எனப்படுகிறது. ஒளிர்வு நீடிப்பதன் அடிப் படையில் இடப்பட்ட இப்பெயர்கள் முழுமையான பொருளில் அமையவில்லை. ஏனெனில் ஒளிர்வு நீடிப் பது என்பது ஒளிதுலக்கிக் கருவிகளின் தன்மை யைப் பொறுத்து உள்ளது. தக்க கருவிகளைப் பயன்படுத்தி ஒரு மைக்ரோ விநாடியில் ஆயிரத்தில் சிலபங்கு நேரமே நீடிக்கும் பின்னொளிர்வுகளைக் கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால் வெறும் கண்ணால் அவற்றைக் கண்டுபிடிக்க முடியாது. எனவே ஒளிர் கண்ணால் கண்டுபிடிக்கப் படுவதா அல்லது வேறு கருவிகளால் கண்டுபிடிக்கப் படுவதா என்பதைப் பொறுத்து அந்த ஒளிர்வு நின்றொளிர்வாகவோ பின்னொளிர்வாகவோ குறிப் பிடப்படுகிறது. இவற்றைத் தெளிவாகப் பிரித்தறிவ தற்காக வெப்பநிலையைச் சார்ந்திராத வகையில் ஏற்படும் தாமதித்த ஒளிர்வு நின்றொளிர்வு எனவும், தாமதித்த ஒளிர்வு நேரம் வெப்பநிலை உயரும்போது குறைவதாசு அமைந்துள்ள தாமதித்த ஒளிர்வு பின்னொளிர்வு எனவும் குறிப்பிடப்படுகின்றன. கண்ணுக்குத் தெரியும் ஒளிர்வை வெளியிடும் பொருள்கள் பல துறைகளில் பயன்படுகின்றன. எனவே பிற கதிர்களை வெளியிடும் பொருள்களை விடக் கண்ணுக்குத் தெரியும் ஒளியை வெளியிடும் பொருள்கள் பெருமளவிலும் விரிவாகவும் ஆராயப் பட்டுள்ளன. ஆனால் தன்னொளிர்வு மின்காந்த நிறமாலையின் எப்பகுதியிலும் உள்ள கதிர்களைக்