786 ஒளிர்தல்
786 ஒளிர்தல் கொண்டதாக இருக்கலாம். விரைவான எலெக்ட் ரான் கற்றைகள் ஓர் உலோக இலக்கைத் தாக்கும் போது உண்டாகும் எக்ஸ் கதிர்வீச்சு தன்னொளிர்வு நிகழ்வேயாகும். கரும் ஒளிவிளக்குகள் (black light lamps) எனப்படும் சில ஒளிர்விளக்குகளில் ஓர் ஒளிர் வுத் தூள் பூசப்பட்டிருக்கும். அது ஏறத்தாழ 360 நானோமீட்டர் அலை நீளமுள்ள புறஊதாக் கதிர் களைவெளியிடக் கூடியதாக இருக்கும். இவ்விளக்குகள் மருத்துவத்திலும், கிருமிகளைக் கொல்லவும் பயன் படுகின்றன. கண்ணுக்குப் புலனாகும் ஒளி அல்லது எதிர்மின்முனைக் கதிர்கள் அல்லது மின்புலங்கள் படும் போது அண்மைக் கீழ்ச்சிவப்புக்கதிர்களை ஒளிர்வு மூலம் வெளியிடக்கூடிய பல திண்மங்கள் உருவாக்கப் பட்டுள்ளன. வளிமங்கள், நீர்மங்கள், படிகத்தன்மையுள்ள திண்மங்கள், படிகத்தன்மையற்ற திண்மங்கள் போன்ற அனைத்து வகைப் பொருள்களிலும் ஒளிர்வு தோன்ற முடியும். ஒரு வளிமத்தின் வழியாக ஒரு மின்னிறக்கத்தைச் செலுத்தும்போது சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் வளிமத்திலுள்ள அணுக்களும் மூலக் கூறுகளும் கிளர்வூட்டப்பட்டு ஒளிர்வு செய்யலாம். இதற்குப் பாதரச ஆவி விளக்கு ஓர் எடுத்துக்காட்டு ஆகும். அதில் பாதரச ஆவி மின்னிறக்கத்தால் கிளர்வூட்டப்பட்டுக் கண்ணுக்குத் தெரியும் ஒளியை யும் புறஊதாக் கதிர்களையும் வெளியிடுகின்றது. சில குறிப்பிட்ட வண்ணப் பொருள்களைப் பல வகை யான கரைப்பான்களில் கரைத்து உண்டாக்கப்படும் எண்ணெய்கள் அல்லது கரைசல்கள் புறஊதாக் கதிர் கள் படும்போது மிகுதியாக ஒளிர்வு செய்கின்றன. இயற்கையில் கிடைக்கும் பல கனிமங்கள், செயற்கையான கரிமங்கள், கனிமங்கள் போன்ற ஆயிரக்கான திண்மங்கள் பல வகையான கிளர்வூட்டல் களின் மூலம் ஒளிர்வுறுமாறு வைக்கப்படுகின்றன. வளிமங்களின் ஒளிர்வு, விளம்பரப் பலகைகளிலும் ஒளிர்வு விளக்குகளிலும் பயன்படுகிறது. லேசர் கண்டு பிடிக்கப்பட்டபிறகு வளிம ஒளிர்வின் பயன்பாடுகள் பன்மடங்கு பெருகிவிட்டன. பல அணு நிலை, மூலக் கூறு நிலைவளிமங்கள் லேசர்விளைவு காட்டும் பொருள்களாகப் பயன்படுகின்றன. வண்ணக்கரைசல் களும், கனிம வளிமங்களும்கூட லேசர்களை உண்டாக்கும். நெடுநேரம் பின்னொளிர்வு செய்யும் திண்மங்கள் பாஸ்ஃபோர்கள் (phosphors) எனப்படும். லூமினோ ஃபோர் (lumiaophor) ஃபுளுவோர் (fluor) ஃபுளூ வோர்ஃபோர் (fluor phor) என்றும் அவை குறிப் பிடப்படுகின்றன. சில தூய திண்மங்களே திறமை யுடன் ஒளிர்வுறுகின்றன. நாஃப்தலின், ஆந்த்ர சீன் போன்ற மணமுள்ள ஹைட்ரோகார்பன்கள் ஒளிரக் கூடியவை. அவற்றில் உறைந்த ஃபீனைல் வளையங்கள் மட்டுமே உள்ளன வேற்றணு வளைய மூடிய கரிமச் சேர்மங்களும் (heterocyclic closed ring compounds) ஒளிர்கின்றன. ஆனால் மூடிய ஃபீனைல் வளையம் இருப்பதால் மட்டுமே பொருள் திறம்பட ஒளிரும் எனக் கூற முடியாது. ஏனெனில் அக்கட்ட மைப்பில் ஹைட்ரஜனுக்குப் பதிலாக அமையக்கூடிய சில அணுக்கள், குறிப்பாக ஹாலோஜன்கள் ஒளிர் வுறும் செயலுறு திறனைக் குறைக்கும். இவ்வாறு பயனுறுதிறன் தணிக்கப்படுவது உள்ளிட மாற்றம் (internal conversion) எனப்படும். டங்ஸ்டேட்டுகள், யுரானில் உப்புகள், பிளாட்டினோ சயனைடுகள், அருமண் (rare earth) தனிமங்களின் பல உப்புகள் போன்றவை அறை வெப்பநிலையில் திறம்பட ஒளிர்வு செய்யும் தூயநிலைப் பொருள்கள் ஆகும். தூண்டிகளும் நச்சுகளும், சில மாசுகளைக் கலப்ப தன் மூலம் பல கனிமப் பொருள்களுக்கு ஒளிர்திறனை ஏற்படுத்த முடிகிறது. அவை மில்லியனில் சில பங்குகள் என்னும் சிறிய அளவிலிருந்து பெருமளவு வீதம் வரை கலக்கப்படுகின்றன. இம்மாசுகள் தூண்டி கள் (activators) எனப்படுகின்றன. தூண்டியும் அதைச் சுற்றி அமைந்துள்ள கனிம அணுக்களும் ஒளிர்மையம் (luminescent centre) எனப்படும். அதே போல வேறு சில மாசுகள் ஒளிர்வைத் தணிக்கவோ தடுக்கவோ செய்கின்றன. அவை நச்சுகள் எனப்படும். பாஸ்ஃபோர்களுக்கு அளிக்கப்படும் கிளர்வு ஆற்றலை நச்சுகள் கதிர்வீசா முறையில் செலவழித்து விடுகின்றன அல்லது தமக்கு உரிய தனிச் சிறப்பு நீளக்கதிர்களாக வெளியிடுகின்றன. அது ஆய்வாளரின் நோக்கத்திற்கு ஒத்துவாராத நிற மாலைப் பகுதியில் அமைந்து விடலாம். பலவகை யான பொருள்களில் மாங்கனீஸ் திறம்பட ஒளிர் தலை ஏற்படுத்தும். மாங்கனீஸ் கலந்த பாஸ் ஃபோர்கள் பொதுவாகப் பச்சை, மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற ஒளிகளை வெளியிடும். அலை செம்பு, வெள்ளி, தாலியம், காரீயம், குரோமியம். டைட்டேனியம், ஆண்ட்டிமனி, வெள்ளீயம் அருமண் தனிமங்கள் ஆகியவையும் பலசமயங்களில் தூண்டி களாகப் பயன்படுகின்றன. கனிமப் பாஸ்ஃபோர் களுக்குப் பொதுவாக இரும்பு, நிக்கல், கோபால்ட் ஆகியவை நச்சுகளாகக் கலக்கப்படுகின்றன. சிலி கேட்டுகள், பாஸ்ஃபேட்டுகள், அலுமினேட்டுகள், சல்ஃபைடுகள், செலினைடுகள், கார ஹாலைடுகள். கால்சியம், மக்னீசியம், பேரியம், துத்தநாகம் ஆகிய வற்றின் ஆக்சைடுகள் தூண்டிகள் அல்லது நச்சுகளை ஏற்கும் பொருள்களாகப் பயன்படுகின்றன. ஏற்பி களும் தூண்டிகளும் நன்கு பொடி செய்யப்பட்டுக் கலக்கப்பட்டு உயர் வெப்பநிலைகளில் வினை ஆற்றப் பட்டும் பாஸ்ஃபோர்கள் உருவாக்கப்படுகின்றன. காலியம் பாஸ்ஃபைடு, காலியம் ஆர்செனைடு போன்ற அரைக் கடத்திப் பொருள்களை அவற்றில் மின் னூட்டங்களை உட்செலுத்தும் வகையில் தயாரித்து ஒளிரவும், லேசர் உண்டாக்கவும் செய்யலாம்.