ஒளிர் மின்னிறக்கம் 791
彎 உண்மையைக் கண்டார். து அவர் பெயரால் பாஸ்ச்சன் விதி எனப்படுகிறது. மேலும் ஒவ்வொரு வளிமத்திற்கும், ஒரு குறித்த அழுத்த- இடைவெளிப் பெருக்கத்தில் தகர் எல்லை மின்னழுத்தம் மிகக் குறைவாக உள்ளது என்பதையும் கண்டறிந்தார். ஒளிர் மின்னிறக்கப் பகுதிகள். ஒளிர் மின்னிறக்கம் ஏற்பட்டதும் கண்ணாடிக் குழலின் உட்புறம் முழுதும் ஒரே சீராக ஒளிர்வதில்லை. இருளும் ஒளியும் மாறி மாறிக் கலந்த ஓரு ஒளிர்கிறது. கலவையாக ஒவ் வொரு பகுதிக்கும் தனிப் பெயர்கள் இடப்பட்டுள் ளன. இவை யாவும் படம் 2இல் முறையாகக் காட்டப் பட்டுள்ளன. மேலும் ஒளிர் மின்னிறக்கம் ஏற்படும் முன்பு குழலில் மின்னழுத்தம் ஒரே சீராக உள்ளது. ஆனால், மின்னிறக்கம் ஏற்பட்டதும் எதிர் முனைக் கருகில் மின்னழுத்த ஏற்றம் மிகுதியாகவும், பிற இடங்களில் குறைவாகவும் உள்ளதைப் படம் 3இல் காணலாம். எழுத்தம் மின்ன ஒளிர் மின்னிறக்கம் மின்னிறக்கம் இல்லை எதிர்முனை தூரம் நேர்முனை படம் 3. மின்னழுத்தமாற்றம் ஒளிர் மின்னிறக்கத்தின் நிலைகள். படம் 1 இல் வளிமத்தில் மின்னோட்டம் காண்பதற்கான அமைப் புக் காட்டப்பட்டுள்ளது. இவ் வளிம மின்னோட்டம் பல நிலைகளைக் கொண்டது. மின்கலத்தின் அழுத் தத்தைத் தொடக்கத்திலிருந்து சிறிது உயர்த்தினால், முதலில் விளைவது டவுன்சென்ட் ஒளிர்வு ஆகும். இந்நிலையில் மிகக்குறைந்த அளவிலான மின்னோட் டமே உள்ளது. எவ்வித ஒளிர்வும் கண்ணுக்குப் புலனாவதில்லை. இதையே தன்னிலைப்படா ஒளிர்வு (non-self maintaining discharge) என்பர். மின்ன ஒளிர் மின்னிறக்கம் 791 ழுத்தம் தகர் எல்லை அளவை எட்டியதும், கண் ணுக்குப் புலப்படும் தன்னிலைப்பட்ட ஒளிர்வு ஏற் படுகிறது. இவ்வொளிர்வின் நிறம் வளிமத்தைப் பொறுத்துள்ளது. பாதரச வளிமம் நீலமாகவும், சோடிய வளிமம் மஞ்சளாகவும், நியான் வளிமம் சிவப்பாகவும் ஒளிரும். இவ்வித ஒளிர்வு உண்டா னதும், அதை நிலைநிறுத்தத் தேவையான மின் னழுத்தம் தகர்வெல்லை அழுத்தத்தைவிடக் குறைவே ஆகும். எனவே மீதமுள்ள அழுத்தம் மின்தடையில் பயன்படுகிறது. இந்நிலையில் மின்கல அழுத்தத்தை மேலும் உயர்த்தினால், மின்னோட்டம் கூடுகிறது. ஆனால் நிலை நிறுத்த அழுத்தம் மிகக் குறைந்த வளிமக் அளவிற்கு உயர்கிறது. இதுவே சீர்செய் குழலின் (regulating gas tube) அடிப்படை ஆகும். மின்தடையே பெரும்பகுதி உயர் அழுத்தத்தைத் தாங்கிக் கொள்கிறது. மின்கல அழுத்தம் மேலும் உயர்ந்தால், திடீரெனக் குழலில் அசாதாரண ஒளிர்வு (abnormal glow) ஏற்படுகிறது. அத்துடன் மிகு ஒளிர்வின் நிலைநிறுத்த அழுத்தம் முன்பைவிடக் குறைகிறது. . தொடர்ந்து மின்கல அமுத்தத்தை மேலும் உயர்த்தினால் குழல் முழுதும் நிறைந்திருந்த ஒளிர்வு மிகு ஒளிப்பிழம்பாக மாறி ஒரு கோடு போல உலோகத்தகடுகளை இணைக்கிறது. இந்நிலையில் மிக உயர் மின்னோட்டமும், மேலும் குறைந்த நிலை நிறுத்த அழுத்தமும் ஏற்படுகின்றன. மின்கல அழுத் தம் மேலும் மிகுதியானால் ஒளிப்பிழம்பு மாறி, மின்னலைப் போன்ற சிதரொளி மின்னிறக்கம் (corona discharge) ஏற்படும். இதன் மின்னோட்டம் மிகுதி. ஆனால் நிலைநிறுத்த அழுத்தம் மிகமிகக் குறைவு. எந்நிலையிலும் மின்கல அழுத்தத்திற்கும் நிலைநிறுத்த அழுத்தத்திற்கும் உள்ள வேறுபாட்டை மின்தடை ஏற்றுக் கொள்கிறது. எனவே அனைத்து ஒளிர் மின்னிறக்க மின்சுற்றிலும், மின்தடை பயன் படுகிறது. வளிமக் நடைமுறைக் கருவிகள். எந்த ஒரு கருவியின் ஒளிர் மின்னிறக்கத் திறனும் அனைத்து நிலைகளி லும் இயங்குவதில்லை. நேர் மின்னழுத்தத்தை ஒரு நிலையில் சீர்செய்யும் குழல்கள் சாதாரண ஒளிர்வுநிலையிலும், மின்குழல் விளக்குகள், அறிவிப்புக் குழல் விளக்குகள் சாலை, விளக்குகள் போன்றவை மிகு ஒளிர்வு நிலையிலும், மாறு மின்னோட்டத்தை நேர்படுத்தும் பல முனைப் பாதரச நேர்படுத்திகள் ஒளிப்பிழம்பு நிலையிலும் இயங்குகின்றன. குழல் விளக்குகளில் மாறு மின் னோட்டம் பாய்வதால், இருமுனைகளுமே மாறி மாறி எதிர்முனை, நேர்முனை ஆகின்றன. மேலும் உலோகத் தகடுகளுக்குப் பதிலாக, மின்னோட் டத்தால் சூடேறும் கம்பிச்சுருள்கள் பயன்படுகின்றன. இதனால் ஒளிர் மின்னிறக்கம் எளிதாக உண்டா கிறது. இது படம் 5 இல் காட்டப்பட்டுள்ளது,