ஒளிர்மீன் 793
220 ஓல்ட் மாறு மின் இணைப்பு அடைசுருள் உட்பூச்சுக் கொண்ட கண்ணாடிக்குழல் முனை வளிமம் கொண்மி முனை வளைதகடு தொடக்கி படம் 5. குழல் மின்விளக்கும் மின்சுற்றும் கொண்மி, வளைதகடுகள் தொட்டு விலகும்போது ஏற்படும் திடீர் மின்மாற்றத்தால் ஏற்படக்கூடிய விளைவுகளைச் சீர் செய்கிறது. மேலும் சுருளின் மின்தடை மிகவும் குறைவானதால், மின் னாற்றல் வீணாவதும் குறைகிறது. ஒளிர்மீன் அடை -ந.நித்தியானந்தம் விரைவாகவும் மிகுதியாகவும் ஒளியைக் கொடுக்கக் கூடிய அல்லது ஒளிரக்கூடிய விண்மீனுக்கு ஒளிர்மீன் (nova) என்று பெயர். ஒளிர்மீனின் ஒளிர்வு 10,000- 60,000 மடங்கிற்கும் மிகுதியாகும். கூடுதலாகும் ஒளி சிலமணி நேரங்களிலிருந்து பல நாள் வரையில் இருக் கும். மேலும் ஒளிர்வு சீராகவும் அதே நேரத்தில் எதிர் பாராமல் மிகுதியாகவும் தோன்றும். இவ்விண்மீன் நேரத்திற்கு நிலையான ஒளியைக் குறைவான கொடுத்து விட்டு, முன்பு தான் பெற்றிருந்த ஒளிக்கு ஒரு மாதம் அல்லது ஓராண்டுக் காலத்திற்குள் மெது வாகத் திரும்பும். இது போன்ற ஒளிர்மீன்கள் பல் அண்டங்களிலும் (galaxies) நூற்றுக்கணக்கில் உள்ளத்தைக் கண்டறிந்துள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் பல புதிய ஒளிர்மீன்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. தொடக்கக் காலத்தில் ஏற்பட்ட ஒளிர்சரிவைத் (decline) தொடர்ந்து பெரும்பான்மையான ஒளிர் ஒளிர்மீன் 793 மீன்கள் பின்வரும் வகையில் நிலைத்திரிபு நிலைக்கு (transmission stage)மாறும். இவற்றில்(அ)தொடர்ந்து மிகச்சீராக, மெதுவாக ஒளிர் சரிவு ஏற்படுதல் (ஆ) ஒன்று அல்லது இரண்டு பொலிவுப் பரிமாணம் (magnitude) வரை தொடர்ச்சியான, ஓரளவு ஒழுங் கான அதிர்வுகளுக்குச் செல்லுதல் (இ) முன்பிருந்த பொலிவை விடக் குறைந்து பின் அது முன்பிருந்த பொலிவுக்குத் திரும்புதல். நிகழும் நிலைத் திரிபு நிலை களின் இறுதியில் பெருமத்திற்கும் (maximum) ஏழு பொலிவுபபரிமாணத்திற்கும் கீழேஒளிர்மீன் இருக்கும். இறுதியான ஒளிர் சரிவு பல ஆண்டுக்காலத்தில் ஏற் பட்டாலும் இந்நிகழ்ச்சி சீராகவும் மெதுவாகவும் நடைபெற்ற ஒளிர்மீன் முன்பிருந்த ஒளி நிலைக்கு மீண்டும் திரும்புகிறது. நிறமாலைச் சிறப்பியல்புகள். ஒளிர் மீனில் ஒளிர்வு மட்டும் மாறுவது இல்லை. அவ்வாறு மாறும்போது, அதன் அதிகமான, வேறுபட்ட ஆரத்திசை வேகத் தின் (radial velocity) காரணமாக, ஒளிர்மீனின் நிற மாலையிலும் குறிப்பிட்ட அளவு மாற்றம் ஏற்படும். ஒளிர்மீன், வெடிப்பிற்கு முன்னரோ ஒளிர்வு தோன்றத் தொடங்கும் காலத்திலோ அவ்விண் மீனின் நிறமாலை பற்றிய செய்திகள் மிகவும் குறைவு. ஆனால் பெருமப் பொலிவிலோ அதற்கு அருகிலோ ஒளிர்மீன் வரும்போது இதன் நிற மாலையைக் கண்டறிந்துள்ளனர். அதைப் பிரிவு . அ' வரை படி நிலைகளாகப் பிரித் துள்ளனர். ஒளிர்மீன் வலிமையுடைய உட்கவர் கோடுகளைப் (absorbtion lines) பெற்றிருப்பதுடன், ஊதா வண்ணத்திற்கு அதிகமான விலக்கத்தையும் கொடுக்கின்றது. ஒளிர்வு அதிகமாகும்போது, அதிக மான ஆரத் திசை வேகங்களைக் கொண்டிருக்கிறது என்பதை இவ்விலக்கம் காட்டும். 4 ஊ அதேபோல் பெரும ஒளிர்வைத் தொடர்ந்து ஒளிர்மீனின் நிறமாலை எதிர்பாராமல் மாற்றம் அடையும். உட்கவர் கோடுகள் சிவப்பு நிற நிற மாலையை நோக்கியவாறு உமிழும் கோடுகள் (emission lines) அகலமாகவும், குறிப்பிடுமளவாகவும் தெரியும். மேலும், ஒளிர்மீன் பெரும ஒளிர்விலிருந்து குறையும்போது உட்கவர்தலின் பிற தொகுதிகள் தோன்றத் தொடங்கும். ஒவ்வொன்றும் ஊதா வண்ணத்தை நோக்கியவாறு மேலும் தொடர்ந்து விலகி, பின்னர் உமிழும் கோடுகள் அகலமாகவும், சீராகவும் தோன்றத்தொடங்கும். அப்போது முந்தைய உட்கவர் தொகுதிகளும், தொடரகமும் (continuum) மெதுவாக மறையும். ஹீலியம், நைட்ரஜன், ஆகியவற்றின் கோடுகள் தெளிவாகத் தெரியத் தொடங்கும்போது ஹைட்ரஜன், உலோகம் ஆகியவற்றின் சில தொடக்க உமிழும் கோடுகள் மறைந்துவிடுகின்றன. இதன் பின் அயனியாக்கப்பட்ட ஆக்சிஜன், நியான் போன்றவற்றின் கோடுகள் தோன்றுகின்றன.