பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/818

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

794 ஒளிர்மீன்‌

794 ஒளிர்மீன் அண்மைக்காலத்தில் தோன்றிய சில பொலிவு ஒளிர்மீன்கள் (டீன் பி. மெக்ளாக்லினால் உருவாக்கப்பட்ட அட்டவணையைப் பின்பற்றியது) விண்மீண் காட்சிப்பதிவு பொலிவுப் பரிமாணம் வகை சரிவின் கால அளவு நாள்களில் செய்யப்பட்ட சிறுமம் பெருமம் (type) 3பொலிவுப் பொலிவுப் ஆண்டு பரிமாணம் பரிமாணம் 1.ஒளிர்மீன் பர்சி 1901 13.5 0.2 மிகுவேகம் 13 300 ஒளிர்மீன் ஜெமினோரம் 1912 14.7 3.5 வேகம் 37 550 3. ஒளிர்மீன் அக்குலே 1918 10.8 -1.1 மிகுவேகம் 80 260 4. ஒளிர்மீன் சிக்னி 1920 15.5 2.0 மிகுவேகம் 16 170 5.ஒளிர்மீன் பிக்டோரிஸ் 1925 12.7 1.2 குறைவேகம் 150 1600 ஒளிர்மீன் ஹெர்க்குலிஸ் 1934 15.0 1.4 குறைவேகம் 100 1000 7.ஒளிர்மீன் சிபிலாசர்ட்டே 1936 15.3 2.1 மிகுவேகம் 10 154 8. ஒளிர்மீன் பப்பிஸ் 1942 17.0 0.4 மிகுவேகம் 7 140 9.ஒளிர்மீன் கரொனெ 1946 10.6 3.0 மீண்டும்மீண்டும் 7 300 பொரிலியஸ் (recurrent) 10. ஒளிர்மீன் டிகே லாசர்ட்டே 1950 15.5 5.0 வேகம் 29 500 ஒளிர்மீன் பொலிவில் இறுதிச் சரிவில் ஒளியுள்ள கோடுகள் வலிமை குன்றிவிடுகின்றன. தொடரகம் மேலும் ஆதிக்கம் செலுத்த முற்படுகிறது. சிறுமப் பொலிவுக்கு இவ்விண்மீன் திரும்பும்போது ஒளிர் மீனின் நிறமாலை தனிச் சிறப்புக் கூறுகளற்ற தொட ரகமாக மாறுகின்றது. இது புற ஊதாவில் வலிமை யுள்ளதாகத் தோன்றுகிறது. ஹைட்ரஜன், ஹீலியம் ஆகியவற்றில் வலிமை குன்றிய குறுகிய ஒளிர்ந்த அல்லது இருண்ட கோடுகளாகத் தோன்றுகின்றது. விண்மீன் மிக உயர்ந்த வெப்பநிலையுடையது என்பதை இது காட்டுகிறது. விண்மீனின் கதிர்வீச்சுப்புறப்பரப்பின் (radiating surface) எதிர்பாராத விரிவு, ஒளிர்மீன் வெடிப்பின் போது ஒளிர்வு விரைவாக உயர்வதைக் காட்டுகிறது. இது ஒளிர்மீனின் ஆழத்தில் பதிந்துள்ள அதிர்ச்சி அலைகள் முன்னேறுவதிலிருந்து விளைந்ததாகும். பெரும ஒளிர்வை அடையும்போது, விண்மீனின் ஆரம், தொடக்க ஆரத்தைப் போல் ஆயிரம் அல்லது அதற்கு மேலான மடங்கு விரிவடைகின்றது. கதிர்வீச்சுப் புறப்பரப்பின் வழியே செல்கின்ற மிகுவேக வளிமத் துகள்களால் ஏற்படும் நிறமாலை பெரும ஒளிர்வை யடுத்துத் தோன்றுவதாகும். மேலும் காட்சிப் பதி வாளருக்கும், கதிர்வீச்சுப்புறப்பரப்புக்கும் இடையே விரிவடைந்து வரும் வளிமம் உட்கவரும் நிறமாலை யின் அதிகமான ஆரத் திசை வேகங்களைக் கொண்ட தாகவும் புவியின் திசையில் இருந்து பார்க்கும்போது, கதிர்வீச்சுப்புறப்பரப்பின் இரு பக்கங்களிலிருந்தும் விரிவடைந்து வருகின்ற வளிமக் கூட்டின் (shell) பகுதியால் நிறமாலையில் உமிழும் கோடாகவும் அமைந்துள்ளன. இந்தக் கூட்டின் பகுதிகளிலுள்ள வளிமத்துக்கள்கள் வேறுபட்ட நேர்ம எதிர்ம ஆரத் திசை வேகங்களைக் கொண்டிருப்பதால், இவற்றால் உண்டாக்கப்பட்ட உமிழும் கோடுகள் அகலமாகவே உள்ளன. . கதிர்வீச்சுப்புறப்பரப்பையும், நிறமாலையையும் இந்த விரிவடையும் வளிமத் துகள்கள் அழித்துவிடு மானால் உடனே வேறொரு திறன்மிகு கதிர்வீச்சுப் புறப்பரப்பு, பதிலீடு செய்யும். நிறமாலையில்