ஒளிர்மை (வானியல்) 795
பல்வேறு உட்கவர் தொடர்ச்சிகள் இருப்பது, மேற் கூறிய நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடப்பதைக் காட்டு கிறது. மேலும் இது அடுத்தடுத்த உட்கவர் தொடர்ச்சியில் அதிகமான ஆரத் திசை களைக் காட்சிப் பதிவு செய்வது வேகங் என்பது, ஒளிர்மீன் செயல் முறைகளின் பிற்பட்ட படிநிலை களின்போது விரிவடைந்த அலைகள் உண்டாக்கிய தால் இந்த உயர் திசை வேகங்கள் ஏற்பட்டிருக் கின்றன என்ற கருத்தை உண்டாக்குகிறது. வெளித் தள்ளப்பட்ட மூலப்பொருள்கள் விண்மீனைச் சுற்றி யுள்ள ஒளிக் காற்றுப் போலத் தோன்றும் ஒண்முகிற் படலம் (nebula) கூட்டினுள் விரிவடைந்து இருக்கவும் கூடும். குறைந்தது எட்டு ஒளிர்மீன்களில் இதுபோன்ற வளிமக் கோள விரிவு ஒளியியலாகக் காட்சிப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒளிர்மீன்களின் பரவல். பால்வழி மண்டலத்தில் இதுவரை ஏறக்குறைய நூற்றைம்பது ஒளிர்மீன் களைக் காட்சிப் பதிவு செய்துள்ளனர். இவை அண்டத்தின் அகலாங்கிற்கு (galactic latitude) அருகிலேயே ஒரு குறிப்பிட்ட பகுதியில் அண்டத்தின் மையத்தை நோக்கியவாறு கூட்டமாக அமைந்துள் ளன. இரண்டாம் வகைக் குடியேற்ற (population [ விண்மீன்களாகவோ விண்மீன்களின் மையப் பகுதியி லுள்ளவற்றிற்கும் (இரண்டாம் வகைக் குடியேற்ற விண்மீன்களின் மையப் பகுதியிலுள்ளவற்றிற்கும்), சுருள் அமைப்பில் அமைந்துள்ள விண்மீன்களுக்கும் (முதல் வகைக் குடியேற்ற விண்மீன்கள் (population I) இடையே அமைந்துள்ளனவாகவோ கருதப்படு கின்றன. பெரும்பான்மையான ஒளிர்மீன்கள் விண்மீன் மேகங்களின் அடர்த்தியாலும், பால்வழி மண்டலத்தி லுள்ள வளிமங்களாலும் மறைக்கப்படுவதால் சரிவரத் தெரிவதில்லை. இருப்பினும் பால்வழி மண்டலத்தில் ஆண்டுக்கு ஏறத்தாழ ஐம்பது ஒளிர்மீன்கள் தோன்று கின்றன. அதாவது, அண்டத்தில் ஒவ்வொரு நூறு கோடி இரண்டாம் வகைக் குடியேற்ற விண்மீன்கள் கொண்ட குழுவிற்கு ஆண்டிற்கு ஒளிர்மீன் என்னும் கணக்கில் தோன்றுவதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. ஓர் ஒளிர்மை (வானியல்) 795 ஒளிர்மீன்கள் மிகப்பெரும் அளவிலும் உள்ளன. அவை மீஒளிர்மீன்கள் (supernovae) எனப்படுகின்றன. இவ்வொளிர்மீனின் ஒளி எதிர்பாராது ஆயிரம்கோடி (1019) மடங்கு என்னும் அளவிற்கு உயர்ந்து அண்டம் முழுமையும் ஒளிபெறச் செய்யும். இப்பொலிவு ஒளிர் மீனிலிருந்து பிரிந்தது முதல் பல ஆண்டுகளில் மெது வாகக் குறையும். இதுபோன்றுமீஒளிர்மீன் தோன்று வதை முதன் முதலில் 1934 ஆம் ஆண்டு வால்டர் பாடி, பிரிட்ஜ் ஜவிஸ்கி என்னும் அறிவியலார் கண்டறிந்தனர். மீஒளிர்மீன் தோன்றும்போது ஒரு நொடிக்கு ஆயிரக்கணக்கான கி.மீ வேகத்தில் அங்குள்ள பெரும் பான்மையான வளிமங்கள் வீசியெறியப்படுகின்றன. இத்தன்மையை நிறமாலையாகக் கண்டறிந்துள்ளனர். விண்வெளி வழியே பயணம் செய்யும் இந்த மிகுவேக வளிம விண்மீன்களுக்கிடையேயான வளிமங்களின் வழியே முழுதும் பரந்தகன்று செல்கிறது. மேலும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு ஒளி மிகுந்த ஒண் முற்படலம்போலத் தோன்றிக் கொண்டே இருக்கும். இது. போன்ற மீஒளிர்மீன் எச்சங்கள் (remnants) கதிர்வீச்சு, எக்ஸ் கதிர்கள் இவற்றிற்கான தனிச் சிறப்பு மூலங்களாக அமைந்து விடுகின்றன. இவை காந்தப் புலங்கள் (magnetic fields) சார்பியல் எலெக்ட்ரான்களின் (relativistic electrons) அதிர்ச்சி அலைகளைக் கொண்டிருக்கும். இந்த அண்டத்தில் இது போன்று மீஒளிர்மீன்கள் இருப்பதாகக் கண்டறிந் துள்ளனர். பால்வழி மண்டலத்தைப் போன்ற மிகப்பெரும் அண்டங்களில் ஒவ்வொரு முப்பது ஆண்டுக் காலத் திற்கும் ஏறத்தாழஒரு மீஒளிர்மீன் வெடிப்புத் தோன்று கின்றது. ஆனால் அண்ட வெளியில் உள்ள தூசித் துகள்கள் இந்த மீஒளிர்மீன்களை மறைத்துவிடுவ தால் கடந்த ஆயிரம் ஆண்டுகளில் ஆறு மீஒளிர் மீன்கள் மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1885 ஆண்டிலிருந்து இதுவரை செய்யப்பட்ட ஆய்வின்படி பிற அண்டங்களில் ஏறத்தாழ நூறு மீஒளிர்மீன்கள் தோன்றியுள்ளதாகக் கண்டுபிடித்துள்ளனர். சா.கு.நாராயண்தாஸ் காட்சிப் பதிவு செய்யப்பட்ட ஏறக்குறைய பன்னிரண்டு ஒளிர்மீன்கள் தங்கள் தொடக்ககால வெடிப்பைத் தொடர்ந்து மீண்டும் சிறுமத்திற்கு வரு வதற்குள் ஒளிர்வு சிறிதளவு மாறுகிறது. 18-80 ஆண்டிற்குள் பிற ஆறு விண்மீன்களின் வகையில் மீண்டும் மீண்டும் ஒளிர்மீன் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அடிக்கடி தோன்றும் ஒவ்வொரு வெடிப்பி லும் ஏறத்தாழ 7-10 பொலிவுப் பரிமாணம் வரை ஒளிர்மீனின் ஒளிர்வு மாறுகிறது. இது சாதாரண பொலிவுப் ஒளிர்மீனின் பரிமாணங்களைவிடக் குறைந்ததுதான். அட்டவணையில் ஒளிர்மீன்களைப் பற்றிய செய்திகள் தரப்பட்டுள்ளன. ஒளிர்மை (வானியல்) விண்மீனின் புறப்பரப்பிலிருந்து ஒரு நொடியில், கதிரியக்கத்தால் வெளிப்படும் ஆற்றலின் மொத்த அளவு ஒளிர்மை (luminosity) எனப்படும். இது விண் மீனின் வெப்பம், ஆரம், புறப்பரப்பு ஆகியவற்றைப் பொறுத்து அமையும். ஸ்டீபன் என்பார், L=4 R'T⭑ என்னும் வாய்பாட்டின் மூலம் ஒளிர்மையைக் கண்டுபிடிக்க முடியும் என