பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 எக்ஸ்‌ கதிர்‌ குழாய்‌

58 எக்ஸ் கதிர் குழாய் குமிழும் அத்துடன் மூன்று பக்க இணைப்புக் குழாய் களும் இருக்கும். பக்கக் குழாய் ஒன்றில், குழியாடி eeeeeeee எதிர்மின் தேனை எக்ஸ்கதிர் படம் 1. 1000 தேர்மின் முனை தேர் | எதிரி மின்முனை வடிவில் அலுமினியத்தாலான மின்முனை பொருத்தப் பட்டிருக்கும். இது எதிர்மின்முனையாகச் செயல் படுகின்றது. இதிலிருந்து எலெக்ட்ரான்கள் வெளிப் படும்போது அவை, நேர் எதிராகவுள்ள பக்கக்குழா யில் வரும் எலெக்ட்ரான்களின் திசைக்கு 45° கோணத்தில் சாய்வாக இருக்குமாறு பொருத்தப் பட்டுள்ள, உலோகத்தாலான இலக்கில் குவிக்கப்படு கின்றன. நேர் எதிர்மின்முனை எனப்படும் இவை பொதுவாக உயர் அணுவெண், உயர் உருகுநிலை, உயர் கடத்தும் திறன் கொண்ட டங்ஸ்டன், பிளாட்டினம் போன்ற உலோகங்களால் செய்யப் பட்டிருக்கும். செம்பு அல்லது மாலிப்பிட்டினம் இவற்றால் ஆன உலோகத் தண்டின் முனையில், சிறிய செங்கல் வடிவில் டங்ஸ்டன் உலோகம் . உ மின்னழுத்த வேறுபாடு 40,000-50,000 வோல்ட் என்ற அளவிலும் இருக்கும். அப்போது மின்னிறக் கத்தின் காரணமாக வெளிப்படும் எலெக்ட்ரான்கள் முடுக்கப்பட்டு இலக்கின்மீது குவிக்கப்படுவதால், எக்ஸ் கதிர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தனி நேர் மின்முனையைப் பயன்படுத்துவதால், மின்னி றக்கம் மென்மையாக இருப்பதுடன், வெளிப்படும் எக்ஸ் கதிர்களின் செறிவும் சீராக இருக்கின்றது. உற்பத்தி செய்யப்படும் எக்ஸ் கதிர்களின் தன்மை, உண்மையில் குழாயினுள் இருக்கும் வளிம அழுத்தத் தின் அளவு, கொடுக்கப்படும் மின்னழுத்த வேறுபாடு இவற்றைப் பொறுத்திருக்கும். வெற்றிடம் குறை வரக இருக்கும்போது (10-3 மி.மீ. பாதரசம்), மின்னிறக்கத்தை ஏற்படுத்த ஓரளவு தாழ்ந்த மின்னழுத்த வேறுபாடு போதுமானது. அப்போது வெளிப்படும் எக்ஸ் கதிர்கள் ஓரளவு ஊடுருவுந்திறன் குறைந்தனவாக இருக்கின்றன. இந்த எக்ஸ் கதிர் களை மென் எக்ஸ் கதிர்கள் (soft x-rays ) என்பர். வெற்றிடம் அதிகமாகும்போது (104 மி.மீ. பாதரசம்) வளிமக் குழாயைச் செயலூட்ட உயரளவு மின்னழுத்த வேறுபாடு தேவைப்படுகின்றது. அப்போது உற்பத்தி செய்யப்படும் எக்ஸ் கதிர்கள் ஊடுருவுந்திறன் மிக்கனவாக இருப்பதால், அவற்றை வன் எக்ஸ் கதிர்கள் (hard x-rays) என்பர். பொருத்தப்பட்ட அமைப்பு நேர் எதிர் மின்முனை யாகப் பயன்படுகின்றது. எலெக்ட்ரானின் ஆற்றலில் சிறிய பகுதி மட்டுமே எக்ஸ் கதிர்களாக மாறுவதால், எஞ்சிய பெரும் பகுதி வீணாகின்றது. இது இலக்கை விரைவில் சூடுபடுத்தி விடுகின்றது. இதனால், இலக்கைத் தக்க வழிமுறைகளால் குளிர்வூட்ட வேண்டியுள்ளது. கதிர்வீசும் ஊசி முனைகளைக் (radiating fins) கொண்டும், குளிர்நீரை, நேர் எதிர் மின் முனையைச் சுற்றியுள்ள உறையொன்றின் வழியாகத் தொடர்ந்து எடுத்துச் சென்றும் இலக்கை ஓரளவு குளிர்வூட்ட முடியும். மூன்றாம் பக்கக் குழாயில் நேர்மின்முனை பொருத்தப்பட்டிருக்கும். இது இலக்குடன் மின் னிணைப்புச் செய்யப்பட்டிருக்கும். குழாயினுள் வளிம அழுத்தம் ஏறக்குறைய 10-2 மி. மீ. பாதரசம் என்ற அளவிலும், மின்முனைகளுக்கிடையே செயல்படும் ஒரு வளிமக் குழாயைப் பயன்படுத்தும்போது, வளிமம் அயனியாக்கத்திற்கு உள்ளாவதால், அதனால் உண்டாகும் நேர்மின் அயனிகள் தொடர்ந்து வெளி யிலிருந்து நீக்கப்படுகின்றன. இது அழுத்தம் தாழ் வுறக் காரணமாக இருப்பதால், வளிமக் குழாயைத் தொடர்ந்து செயல்படுத்தக் கூடுதலான மின்னழுத்த வேறுபாட்டைப் பயன்படுத்த வேண்டியுள்ளது. குழாயினுள் அழுத்தம் படிப்படியாகக் குறைந்து மிகவும் தாழ்வுற்ற பிறகு, வளிமக் குழாயில் மின் னிறக்கத்தை நிலைப்படுத்த முடியாமற்போவதால் குழாய் பயனற்றுவிடுகின்றது. குழாயை மென்மைப் படுத்தி மீண்டும் பயன்படுத்தலாம். ஒருசில வளி மத்தைத் தன்னுள் அடக்கிக் கொண்டுள்ள பிளாட் டினமூட்டப்பட்ட கல்நாரை (platinised asbestos), மற்றொரு பக்கக் குழாயினுள் வைத்துச் சூடுபடுத்த, பொதிந்துள்ள வளிமம் வெளிப்படுத்தப்பட்டு வளிமக் குழாயை அடைகின்றது. இதனால், இதனால், குழாயினுள் வளிம அழுத்தம் ஓரளவு அதிகரிக்கின்றது என்ப தால், அக்குழாயை மீண்டும் பயன்படுத்திக்கொள்ள முடிகின்றது. செயல்படும் மின்னழுத்தத்தை அதிகரிக்கும் போது, அயனியாக்கம் அதிகரிப்பதால் எக்ஸ் கதிரின் செறிவும் அதிகரிக்கின்றது. அதேசமயத்தில், இலக் கைத் தாக்கும் எலெக்ட்ரான்களின் ஆற்றலும் அதிகரிப்பதால், எக்ஸ்கதிர்கள் ஊடுருவுந்திறன் மிக்கனவாக இருக்கின்றன. இதனால் வளிமக்