ஒளிர்வு நுண்ணோக்கி 799
தோன்றும் கட்புலன் ஒளி, வேதி ஒளிர்வு எனப்படு கிறது. எ.கா : பாஸ்ஃபரஸ் பசுமை கலந்த மஞ்சள் நிற ஒளிர்வை ஏற்படுத்துதல். பாஸ்ஃபரஸ் ஆலி வளிமண்டல ஆக்சிஜனால் ஆக்சிஜனேற்றம் அடை தல் இதற்குக் காரணமாக இருக்கலாம். இருட்டில், நீர்த்த சல்ஃப்யூரிக் அமிலத்துடன் ஸ்ட்ரான்சியம் குளோரைடு கரைசல் சேர்க்கப்படும்போது மெல்லிய ஒளிர்வு தோன்றுகிறது. கிரிக்னார்டு காரணிகள் வேதி ஒளிர்வு தோற்றுவிக்கும் முக்கிய சேர்மங்களாகும். திண்மநிலை அல்லது ஈதர் கரைசலில் கிரிக்னார்டு காரணிகள், காற்று அல்லது ஆக்சிஜனால் ஆக்சிஜ னேற்றம் அடையும்போது வேதி ஒளிர்வு ஏற்படு கிறது. மட்கிய நிலையில் மரங்களும் சிலவகைப் பாக்டீரியாக்களின் செயலால் வேதி ஒளிர்வு தரு கின்றன. சோடிய உலோக ஆவி ஹாலஜன்களுடன் வினைபுரியும்போது வேதி ஒளிர்வு உண்டாகிறது. தனால் சோடியத்தில் மஞ்சள் நிறம் தோன்று கிறது. உயிரின ஒளிர்வு. லூசிஃபெரேஸ் எனும் நொதி யின் உதவியால் லூசிஃபெரின் புரதப் எனும் பொருளை மின்மினிப் பூச்சி வளிமண்டல ஆக்சிஜன் கொண்டு ஆக்சிஜனேற்றம் செய்யும்போது ஒளிர்வு தோன்றுதல் உயிரின ஒளிர்வு (bioluminiscence) எனப் படுகிறது. பட்டது. இது ஹார்வி என்பாரால் கண்டறியப் மின்னொளிர்வு. வளிமங்களின் மூலம் மின்னோட் டம் குறைந்த அழுத்தத்தில் செலுத்தப்படும்போது மின்னொளிர்வு (electro luminiscence) தோன்றுகிறது. மின்னோட்டத்தின்போது வளிமங்களில் ஏற்படும் எலெக்ட்ரான் அல்லது அயனிகள் மோதலால் மூலக் கூறுகள் கிளர்வு கொள்கின்றன. பின்னர் அவை தம் தரைமட்ட நிலைக்குத் திரும்பும்போது ஒளிர்வு தோன்றுகிறது. நிரல் ஆய்வுகளில் பயன்படும் கெய்ஸ்லர் குழாய்களில் வளிமங்கள் இவ்விதம் ஒளிர்வு கொள்ளச் செய்யப்படுகின்றன. -பி. சோமசுந்தரம் ஒளிர்வு நுண்ணோக்கி சாதாரணமாக ஆய்வகங்களில் பயன்படும் ஒளியியல் கூட்டு நுண்ணோக்கியை மாற்றியமைத்து, காண வேண்டிய பொருளின் மேல் புறஊதா. கருநீலம், நீலம் ஆகிய கதிர்களைப் பாய்ச்சும் வகையில் அமைத்தால் அது ஒளிர்வு நுண்ணோக்கி (fluoro scesnce microscope) எனப்படும். அத்தகைய ஒளி மாதிரிப் பொருளின் மேல்விழும்போது அது பலவித நிறங்களிலும் ஒளிரலாம். படும் பொருளில், எலெக்ட்ரான்களின் அமைப்பில் மாற்றம் ஒளிர்வு நுண்ணோக்கி 799 ஏற்படுவதன் காரணமாக ஒளிர்வு தோன்றுகிறது. புற ஊதாக் கதிர்களை மட்டுமே உட்கவரக்கூடிய மாதிரிகளை ஆய்வு செய்யும்போது நுண்ணோக்கி யின் குவிப்பு வில்லை கண்ணாடியாலானதாக இருக் கக்கூடாது. அதற்குப் பதிலாகக் குவார்ட்ஸ் குவிப்பு வில்லைகளைப் பயன்படுத்த வேண்டும். அதிலுள்ள ஆடி முன்பக்கத்தில் அலுமினியப் பூச்சுள்ளதாயிருக்க வேண்டும். வெள்ளிப் பூச்சுகள் புற ஊதாக் கதிர் நன்கு எதிரொளிப்பதில்லை. ஒளிரும் பொருளின் உருவம் பொலிவு மிக்கதாகவும் நன் முறையில் ஒளி-நிழல் வேறுபாட்டைக் காட்டுவ தாகவும் உள்ளது. ஒளிர்வு குறைவாயிருக்கும்போது ஓர் ஒற்றைக் குழல் நுண்ணோக்கியை இருண்ட சூழலிலேயே பயன்படுத்த வேண்டும். ஒளிர்வு பெரு மளவிலிருக்கும்போது இரட்டைக்குழல் நுண்ணோக்கி யைப் பயன்படுத்தலாம். களை நுண்ணோக்கியில் காற்றுப்படும் கண்ணாடிப் பரப்புகள் நிறமூட்டப்பட்டவையாக இருந்தால் ஒளி இழப்புக் குறையும். ஒளிர்வு காட்டாத அனைத்து வகைப் பொருளருகு கருவிகளையும் நுண்ணோக்கி யில் பயன்படுத்தலாம். எனினும் 8 மி.மீ. குவியத் தொலைவும் 20 மடங்கு உருப்பெருக்கம் செய்வது மான கூட்டமைப்பு மிகு பயன்தரும். எண்ணியல் துளையளவு (numerical aperture) 1. 4 உள்ளதோர் அபே குளிப்பு அமைப்பு (abbe condenser ) பிற சிறிய துளையளவு கொண்ட குவிப்பு வில்லைகளைவிடப் பெருமளவில் பொருளின்மேல் கதிர்களைக் குவிக் கிறது. பொலிவுப்புலக் குறுக்கு வடித்தல் (bright field cross filter) முறையில் அது பயன்படுகிறது. நிறப்பிறழ்ச்சி நீக்கப்பட்ட குவிப்பு வில்லைகளில் ஒட்டுப்பசைகள் ஒளிர்வு செய்வதால் கூசொளி (glare) ஏற்படலாம். எனவே அவற்றைப் பயன்படுத்துவ தில்லை. அவ்வாறே ஃபுளோரைட்டால் ஆன பொரு ளருகு கருவிகளும் தவிர்க்கப்படுகின்ற றன. பல் ஆய்வர்கள் சுரிய பின்புலங்களைப் பயன்படுத்து வதையே விரும்புகின்றனர். அவர்கள் இரட்டைக் கோள (bisphere) அல்லது பரவளைய வடிவக் கரியப் பின்புலக் குவிப்பு வில்லைகளைப் பயன்படுத்து கின்றனர். உட்கவர் வடிகட்டி வழக்கமாக நுண்ணோக்கியின் கண்ணருகு கருவிக்கும் பார்ப்பவரின் கண்ணுக்கும் இடையில் வைக்கப்படும். இதன் மூலம் மாதிரிப் பொருளால் உட்கவரப்படாத கிளர்வூட்டும் கதிர்கள் நீக்கப்படுகின்றன. மாதிரிப் பொருள் தன் முழுமையான நிற அமைப்புடன் காட்சியளிக்க வேண்டிய தேவை ஏற்படும்போது இத்தகைய வடி கட்டி ஏறக்குறைய நிறமற்றதாகப் புற ஊதாக் கதிர் களை மட்டுமே உட்கவருவதாக இருக்கலாம் அல்லது கதிர்வீச்சின் நிறத்தை இட்டு நிரப்பக்கூடிய ஒரு நிறத்துடனிருக்கலாம். எடுத்துக்காட்டாக நீல நிற ஒளியையும், புறஊதாக் கதிர்களையும் உட்கவரும்