802 ஒளி வடிவ இயல்
802 ஒளி வடிவ இயல் தொலைநோக்கிகளில் பயன்படுகின்றன. நுட்பமான உருளைப் பரப்புகளைக் கொண்ட வில்லைகளு லகளும் ஆடிகளும் திரைப்படங்களில் விந்தையான உருத் தோற்றங்களைக் காட்ட உதவுகின்றன. அந்த உருத்தோற்றங்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தான திசைகளில் வேறுபட்ட உருப்பெருக்கங்களைக் கொண்டவையாயிருக்கும். உருளை வளைய (toric) வடிவமுள்ள வில்லைகள் மூக்குக் கண்ணாடிகளில் பயன்படுகின்றன. அவற்றுக்கு உயர் நுட்பத் தன்மை தேவைப்படு வதில்லை. பன்மைக் குவியமுள்ள மூக்குக் கண்ணாடி வில்லைகளில் சாணை பிடிப்பதன் மூலம் ஒரே கண்ணாடித் துண்டில் வெவ்வேறு வளைவு ஆரங்களுள்ள பரப்புகள் உண்டாக்கப்படுகின்றன அல்லது உயர் ஒளி விலகல் எண்ணுள்ள ஒரு சிறிய கண்ணாடித் துண்டைக் குறைந்த ஒளி விலகல் எண் கொண்ட ஒரு கண்ணாடி வில்லையில் ஒட்டிவிட்டு ரண்டையும் சேர்த்து ஒரே பரப்பாக மெருகேற்றி டுவதன் மூலமும் அவை உண்டாக்கபடுகின்றன. சில சிறப்பு வில்லைகள், நோக்க தட்டையான அல்லது வளைந்த பரப்புகள் கொண்ட முப்பட்டகத் துண்டுகளை அடுக்குவதன் மூலம் உருவாக்கப்படு கின்றன. இத்தகைய வில்லைகள் சாலைகளில் தேவை யான வகையில் ஒளியைப் பாய்ச்சுவதற்காக உந்து களின் முகப்பு விளக்குகளில் பொருத்தப்படுகின்றன. சமச்சீர்மையுள்ள சுழற்சி அச்சுக் கொண்ட இத்தகைய வில்லைகள் ஃபிரன்னல் வில்லைகள் (Fresnel lenses) அல்லது படியுள்ள (stepped) வில்லைகள் எனப்படும். வை கலங்கரை விளக்குகளிலும், போக்குவரத்துக் குறியீட்டு விளக்குகளிலும் பரவலாகப் பயன்படு கின்றன. ஒளிப்படக் கருவி அல்லது படவீழ்த்தி களிலுள்ள தேய்ப்புக் கண்ணாடித் திரைகளின் விளிம்புகளுக்குப் பொலிவூட்டவும் இவை பயன் படுகின்றன. கோளப் பரப்புள்ள எளிய வில்லைகளில் பல பிறழ்ச்சிகள் ஏற்படுகின்றன. கோளப்பிறழ்ச்சி (spherical aberration) என்பது வில்லையின் வெவ்வேறு பகுதிகள் வில்லையின் அச்சில் வெவ்வேறு தொலைவு களில் உருத்தோற்றங்களை உண்டாக்குவதால் ஏற்படுவது ஆகும். வில்லையின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு உருப்பெருக்கமுள்ள உருத்தோற்றங் களை உண்டாக்குவது கோமா (coma) எனப்படும். வில்லையின் அச்சில் வெவ்வேறு தொலைவுகளில் வெவ்வேறு நிற உருத்தோற்றங்கள் தோன்றுவது நிறப் பிறழ்ச்சி (chromatic aberration) எனப்படும். வெவ்வேறு நிறக் கதிர்களால் ஆன உருத்தோற்றங் கள் வெவ்வேறு உருப்பெருக்கங்களுடன் ஏற்படுவது பக்கவாட்டு நிறப்பிறழ்ச்சி (lateral colour aberration) எனப்படும். ஒரு வில்லையின் முன் வைக்கப்பட்ட பொரு ளின் வெவ்வேறு பகுதிகள் வெவ்வேறு அளவில் உருப் பெருக்கம் அடைவதால் அதன்உருத்தோற்றத்தில் ஏற் படும்குறைபாடு உருக்குலைவு (distortion) எனப்படும். வில்லையின் முதன்மை அச்சிலிருந்து சற்றே தள்ளி ஒரு பொருள் வைக்கப்பட்டிருந்தால் அப் பொருளிலிருந்து புறப்படும் ஓரக் கதிர்களுக்கான குவியத்தொலைவு அச்சருகுக் கதிர்களுக்கான குவியத் தொலைவைவிடக் குறைந்து விடுவதன் காரணமாக உருட்சிப்பிழை (astigmatism) ஏற்படுகிறது. நீட்சி யுள்ள பொருள்களின் உருத்தோற்றங்கள் வில்லை மூலமாக உண்டாக்கப்படும்போது வளைவுக்குறை (field curvature) தோன்றும். பொருளின் விளிம்புகளி லிருந்து வரும் கதிர்கள் குவிதளத்துக்கு முன்னரே குவிந்துவிடுவதால் உருத்தோற்றத்தளம் தட்டையாக இல்லாமல் வளைந்திருக்கும். உள்ளன. வில்லையின் ஒளி அச்சிலிருந்து சற்றே தள்ளியுள்ள கதிர்களைக் கவனிக்கும்போது பிறழ்ச்சிகள் தோன்று கின்றன. இப்பிறழ்ச்சிகளை வில்லைத்துளை, கோணப் புலம் (angular field) ஆகியவற்றின் அடிப்படையில் திசை அலை குறுக்குத் இடப்பெயர்ச்சிகளாகக் குறிப்பிடும்போது மூன்றாம் படிகளாக எனவே அவை மூன்றாம் படி (third order) அல்லது முதன்மைப் (primary) பிறழ்ச்சிகள் எனப்படும். இப் பிறழ்ச்சிகளின் எண்மதிப்புகளுக்கான கணிதக் கோவைகள் எளியவை. அவற்றை விரைவாகக் கணக்கிட முடியும். ஒளி ஒரு சீரான ஊடகத்தின் வழியாகச் செல்லும் போது நேர்கோட்டுப் பாதைகளில் செல்கிறது. இரு வெவ்வேறு ஊடகங்களின் பிரிதளத்தில் ஒளியின் திசை மாறும். காற்றிலிருந்து கண்ணாடிக்குள் ஒளி புகும்போது திசை விலக்கம் அடைவதை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். பிரிதளத்தில் படும் கதிரில் ஒரு பகுதி எதிரொளித்து முதல் ஊடகத்துக்கே மீண்டும் சென்று விடும். எஞ்சிய பகுதி திசைமாற்ற மடைந்து இரண்டாம் ஊடகத்திற்குள் பாயும். படுகதிர், எதிரொளித்த கதிர், விலக்கமடைந்த கதிர் ஆகிய மூன்றும் பிரிதளத்திற்குச் செங்குத்தான ஒரே தளத்தில் அமையும். படுகதிரின் திசைக்கும் படு புள்ளியில் வரையப்படும் செங்குத்திற்கும் இடையி லுள்ள கோணம் படுகோணம் (angle of incidence) எனப்படும். . எதிரொளித்த கதிருக்கும் செங்குத்திற்கும் இடையிலுள்ளது எதிரொளிப்புக் கோணம் (angle of reflction) என்றும், திசைமாறிய கதிருக்கும் செங்குத் திற்கும் இடையிலுள்ள கோணம் ஒளி விலகல் கோணம் (angle of refraction) என்றும் குறிப்பிடப் படும். படுகோணமும் எதிரொளித்த கோணமும் சமமாயிருக்கும். பி.,பி. ஆகியவை முறையே முதல், இரண்டாம் ஊடகங்களில் ஒளி விலகல் எண்களாகவும், i படுகோணமாகவும் r ஒளிவிலகல் கோணமாகவும் இருந்தால் n, Sin i = n, Sin r. இக்கோட்பாடுகள் n,Sin Sinr.