பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/827

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிவரை அளவியல்‌ 803

ஓர் ஒளியியல் அமைப்பின் வழியாகச் செல்லும் ஒளிக்கதிர்களின் பாதைகளை வரைய உதவுகின்றன. இரண்டாவதாகக் கூறப்பட்ட விதிமுறை ஸ்நெல் விதி எனப்படும். பொருளின் திசையிருந்து வரும் ணைக்கதிர் களின் கற்றை, வரையறையிலுள்ள ஓர் ஒளிப்புள்ளியி லிருந்து வருவதாயிருக்கும். ஒளியியல் அமைப்பிலிருந்து வெளிப்படும் இணைக்கதிர்களின் கற்றை, வரையறை யிலுள்ள ஒரு புள்ளியில் குவிந்து ஓர் உருத்தோற்றப் புள்ளியை உண்டாக்குவதாகும். இதன் அடிப்படையில் ஒளியியல் அமைப்புகளை நான்கு வகைகளாகப் பிரிக்கலாம். உருப்பெருக்கும் அமைப்புகளில் பொருளும் உருத்தோற்றமும் குறிப்பிட்ட தொலைவு களில் இருக்கும். அவை தம் இருப்பிடங்களைத் தமக்குள் மாற்றிக் கொள்ளக் கூடியவை. பொருளின் தொலைவு u உருத்தோற்றத்தின் தொலைவு எனில் ஒளியியல் அமைப்பின் குவியத் தொலைவு f = uv/u+v. ஒரு V மெய் பொருளின் உருத்தோற்றத்தை வில்லையின் மூலம் உண்டாக்க வேண்டுமானால் பொருளுக்கும் மெய்யுருத்தோற்றத்திற்கும் இடைப் பட்ட தொலைவு வில்லையின் குவியத் தொலைவைப் போல நான்கு மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட தாக இருக்க வேண்டும். ஒளிப்படப் பொருளருகு கருவிகள் (photographic objectives) பெருந்தொலைவி லுள்ள ஒரு பொருளின் மெய்யுருத்தோற்றத்தைத் கண்ணருகு தம் குவியத்தளத்தில் உண்டாக்கும். கருவிகள் (eye pieces) அல்லது நுண்ணோக்கிப் பொருளருகு கருவிகள் என்பனவற்றில் அண்மையி லுள்ள ஒரு பொருளின் மாய உருத்தோற்றம் வரம்பிலியில் உருவாக்கப்பட்டுக் கண் முயற்சியின்றிப் பார்க்கக் கூடியதாக அமையும். தொலைநோக்கிகள். தொலைவில் உள்ள ஒரு பொருளின் மாய உருத் தோற்றம் வரம்பிலியில் கண் முயற்சியின்றிக் காணும் வகையில் அமையும். ஒளிவலி கே. என். ராமச்சந்திரன் கதிரொளியாலோ, செயற்கை ஒளியாலோ தோலில் அழற்சியும், வலியும் உண்டாகலாம். புற ஊதாக் கதிரையும் கட்புலன் ஒளியையும் உள்ளடக்கிய ஒளி அலையின் நீளம் 250-800 nm இருக்கும்போது கதி ரொளியில் வேண்டா விளைவுகள் தோன்றலாம். ஏனெனில் தோலில் உள்ள மெலானின், ஒளியைப் பிரதிபலிக்கவும், உள்ளேற்கவும், சிதறவும் செய்யும். குழந்தைகளில் மிகுகதிர்த்தீப்புண்ணின் எதிர்வினை தான் வலிமை உண்டாக்குவதில் குறிப்பிடத்தக்கது. 290-320 nm எல்லையில் ஒளிக்கதிர்கள் மேற்கூறிய அ. க. 6-51 அ ஒளிவரை அளவியல் 803 எதிர்வினையை உண்டாக்குகின்றன. ஒளிபட்ட 6-12 மணி நேரங்களில் தோலில் செந்தடிப்புத் தோன்று கிறது. 24 மணி நேரத்தில் விளைவுகள் மிகை யாகின்றன. கடுமையான சிவப்பு நிறம், தாங்க முடி யாத தொடுவலி, வீக்கம், கொப்புளம் ஆகியவை தோன்றுகின்றன. தோல் கருமையடைகிறது. குளிர் நீர் ஒற்றடம் பயனளிக்கும். வலி எதிர் மருந்தும் பயனளிக்கும். ஸ்டீராய்டுகள் அழற்சியையும், வலியை யும் குறைக்கின்றன. ஆகவே இத்தகையோர் நீண்ட நேரம் சூரிய ஒளியில் நிற்கக்கூடாது. கதிரொளியால் பாதிக்கப்பட்ட தோல் விரைவாக மூப்படைவது. மூப்படைவதால் தோலின் நெகிழ்வு தோலின் நெகிழ்வு குறைவது, கரணைகள், ஸ்குவாமஸ் செல்கார்சினோமா ஆகிய நோய்கள் உண்டாவது போன்ற விளைவுகள் தோன்ற லாம். தோல் புற்றும் உண்டாகலாம். தோல் அழற்சியும், ஒளி நச்சு எதிர்வினைகளும் உண்டாகலாம். கதிரொளியால் உண்டாகும் தோல் எதிர்வினைகள் வருமாறு: கதிரொளித் தீப்புண், மருந்துகளால் (டெட்ராசைக்ளின், குளோர்தயசைடு, சல்ஃபா, பார்பிச்சுரேட்) உண்டாகும் வலியுடன்கூடிய அழற்சி, தோலழற்சி, தோலின் கடினத் தன்மை, பார்ண்டை பைரியாக்கள், லைகன்பிளேன்ஸ், சார்காய்டு, போன்றவையாகும். Twelfth மு.கி. பழனியப்பன் நூலோதி. Richard E. Behrman, Neison Text Book of Paediatrics, Edition, W.B. Saunders Company. Philadelphia, 1983. ஒளிவரை அளவியல் விமானத்திலிருந்து எடுக்கப்படும் ஒளிப்படங்களி லிருந்து தேவையான நில அளவுகளை அளந்து கணக்கிட்டு அறிய உதவும் இயல் ஒளிவரை அளவியல் (photogrammetry) ஆகும். விமானத்திலிருந்து ஒளிப்படம் எடுத்தல். விமானத் தில் ஒளிப்படக் கருவியின் அச்சு (axis) செங்குத்து நிலையில் பொருத்தப்பட்டு நில ஒளிப்படங்கள் எடுக்கப்படுகின்றன. விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு சமதள நிலபரப்பின் ஒளிப்படம், ஏறக்குறைய அதன் நிலப்படத்திற்குச் (map) சமமாகும். ஆனால், விமானம் பறக்கும்போது அதன் நிலையில் ஏற்படும் சாய்வு, சுழற்சி, நிலத்தின் புடைப்பு (relief) மாற்றங் கள் ஆகியவற்றால் விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு நில-நிழற்படம் நிலப்படத்திலிருந்தும் வேறு படும். நிலப்படத்திற்கும்,நில-ஒளிப்படத்திற்கும் இடை திரிபுகளைக் கண்டு திருத்தித் யிலுள்ள அளவின்