பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/829

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளிவளைய வரையி 805

டமாறு வும் இருக்கும். எனவே, இடமாறு தோற்றப் பிழை யின் அளவு நிலப்பொருள்களின் உயரத்தோடு தொடர்பு கொண்டதாகும். இதனால் படத்தில் காணும் மலை உச்சியின் (A இன்) X தோற்றம் (PA ) மிகுதியாகவும் மலை அடிவாரத் தின் (B - இன் ) X இடமாறுதோற்றம் (PB ) குறை வாகவும் இருக்கும். இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு (PA - PB = Ap) எனப்படும். இது A, B இரண்டின் உயர வேறுபாட்டுடன் தொடர்பு கொண் டது. விமானத்திலிருந்து எடுக்கப்பட்ட நில - ஒளிப் படங்களிலிருந்து A- இன் X - இடமாறுதோற்றமும் B-இன் X- இடமாறுதோற்றமும் அளக்கப்படும். . இடமாறு தோற்றத்தை அளக்கும் முறை. விமானத்தி லிருந்து எடுக்கப்பட்ட அடுத்தடுத்த இரு நில -ஒளிப் படங்களில் பதிவான ஒரே பொருளின் இரு உருவ இடங்களை வைத்து, அவற்றின் இடமாற்ற வேறு பாட்டை, அளவுகோல் (Scale) மூலம் ஒவ்வோர் ஒளிப்படத்திலும் அளந்து இரண்டுக்கும் உள்ள வேறு பாட்டைச் (X- இடமாறு தோற்றம்) சரியாகக் கணக் கிடுவது கடினமாகையால், மிதக்கும் குறிக்கொள்கை உருவாக்கப்பட்ட இடமாறுதோற்றக் கருவி இதில் பயன்படுத்தப்படுகிறது. இதில் நேராக X- இடமாறு தோற்றத்தை அளக்கலாம். யால் ஒரே மாதிரி குறிகள் பொறிக்கப்பட்ட இரு கண்ணாடித் துண்டுகள் இடமாறு தோற்றக் கருவியில் உள்ளன. அவ்விரு கண்ணாடித் துண்டுகளும் இட மாறு தோற்றக் கருவித் தண்டின் இரு நுனியிலும் பொருத்தப்பட்டுள்ளன. அத்தண்டின் நீளம் தேவை யான அளவு இருப்பதால் ஆய்வுக்காகத் திட்பக் காட்சிக் கருவியின் அடியில் வைக்கப்பட்ட இரு ஒளிப் படங்களின் மேல் (விமானம் பறக்கும் நேர்கோட்டுத் திசையில்) இடமாறு தோற்றக் கருவியை வைக்க லாம். இரு கண்ணாடித் துண்டுகளையும் அவ்வாறு வைத்துத் திட்பக் காட்சிக் கருவியின் கண்ணாடி வில்லைகளின் மூலம் முன்கூறியவாறு திட்பக் காட்சி யைப் பார்ப்பதுபோல் பார்த்து, இரு கண்ணாடித் துண்டுகளுக்கும் இடையிலுள்ள தொலைவைக் குறைத்தோ, மிகுதியாக்கியோ சீர் செய்தால் ஒரு நிலையில் இரு கண்ணாடியிலும் உள்ள இரு குறிகள் ஒன்றாகி (coincide) உயரத்தே காட்சியளிக்கும். அதன் கீழ்த் தளத்திலிருந்து உயரத்தில் மிதப்பதால் இணைந்த இக்குறிக்கு மிதக்கும் குறி எனப் பெயர். பிறகு, அதே பக்கத்தின் ஒளிப்படங்களிலுள்ள ஒரே பொருளின் இரு உருவப் புள்ளி மேல் இருகுறி களையும் (கண்ணாடித் துண்டுகளையும்) வைத்துத் திட்பக்காட்சிக் கருவியிலுள்ள சுழலும் உருளை யினால் இரு கண்ணாடித் துண்டுகளுக்கும் இடை லுள்ள இடைவெளியைச் சீராக்கினால் மிதக்கும் குறியைத் திட்பக் காட்சியிலுள்ள உருவத்தின் ஒளிவளைய வரையி 805 உயரத்திற்குக் கொண்டு போகலாம். அவ்வாறு செய்தால் மிதக்கும் குறியின் X - இடமாறுதோற்றம் ஒன்றாகும். இந்த அளவை இடமாறுதோற்றக் கருவியிலிருந்து கண்டுபிடிக்கலாம். எடுத்துக்காட்டாக, படத்திலுள்ள மலை உச் சிக்கும் (A), அதன் அடிவாரத்திற்கும் (B), X- பெயர்ச்சிகளைக் கண்டுபிடிக்கலாம். பிறகு இரண்டுக் உள்ள வேறுபாட்டைக் (AP) கண்டு கும் பிடிக்கலாம். Ah ZR AP PR + AP என்னும் கணிதச் சமன்பாட்டில் A Pஇன் மதிப்பைப் பயன்படுத்தி A,B இவற்றின் உயரவேறுபாட்டைக் (Ah) கணக்கிடலாம். இச்சமன்பாட்டில், ZR = விமானம் பறந்த உயரம்; PR அடுத்தடுத்த இரு ஒளிப்படங்களின் நடுப்புள்ளிகளுக்கு இடையிலுள்ள தொலைவு. இவ்வாறே, tan Q C AP d PR + OP என்னும் சமன்பாட்டின் மூலம் அம்மலையின் சாய் வுக் கோணத்தையும் (Q) கண்டுபிடிக்கலாம். இச் சமன்பாட்டில்,C என்பது ஒளிப்படக் கருவியின் குவியத் தொலைவு. d என்பது Aக்கும், Bக்கும் உள்ள கிடைத்தொலைவு. c, dஇன் மதிப்புகள் நிழற்படத்தி லிருந்து அளக்கப்படும். இதே முறையில் பாறை களின் அடுக்கமைவையும், சாய்வையும் கணக்கிட லாம். களப்பணி இன்றியே விமானத்திலிருந்து எடுக் கப்பட்ட நில-ஒளிப்படத்தின் மூலம் மலையின் உயரத்தையும். அதன் சாய்வு கோணத்தையும், பாறைகளின் அடுக்கமைவு நிலையின் சாய்வையும் கோணத்தையும் கணக்கிட முடிவதால், நிலவியலில் ஒளிவரை அளவியலின் பயன் குறிப்பிடத்தக்கதாகும். சம உயரக்கோட்டு நிலப்படங்கள் தயாரிப்பிலும், ஒளிவரை அளவியல் பெரிதும் பயன்படுகிறது. வே. சீனிவாசன் ஒளிவளைய வரையி சூரியன் பரப்பில் உள்ள ஒளிர்மகுடம் (corona), விளிம் பில் உள்ள தீக்கொழுந்துகள் (prominance) போன்ற வற்றின் தகவல்களறியவும், ஆய்வுகள் நடத்தவும் முன்னர் முழுச்சூரிய மறைப்புக் காலத்தில் மட்டுமே முடிந்தது. ஆனால் முழுச்சூரிய மறைப்பு ஒருசில இடங்களில் மட்டும் மிகக் குறுகிய நேரத்திற்குத்