பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/834

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

810 ஒளி விலகல்‌

810 ஒளி விலகல் தொலைவு. fஎன்பது வில்லையின் குவியத் தொலைவு. இரட்டைக் குழல் தொலைநோக்கிகள், தொலை நோக்கிகள். நுண்ணோக்கிகள், உருத்தோற்ற வீழ்த்திகள் (projectors) போன்ற உருப்பெருக்கம் செய்யும் கருவிகள் வில்லைகளாலும் பட்டகங்களா லும் ஏற்படும் ஒளி விலகலைப் பயன்படுத்துகின்றன. னால் சு கால்சைட், குவார்ட்ஸ் போன்ற திசையொவ்வாப் பண்புள்ள (anisotropic) ஒற்றைப் படிகங்களில் இரட்டை விலக்கம் (birefringence) தோன்றுகிறது. இத்தகைய ஒரு படிகத்தை ஓர் ஒளிப்புள்ளியின்மேல் வைத்துப் பார்த்தால் படிகத்தில் இரு உருத்தோற்றங் கள் தெரியும். படிகத்தைக் கிடைத்தளத்தில் சுழற்றி ஓர் உருத்தோற்றம் அசையாமலிருக்கும்; மற்றது அதைச் சுற்றி வரும். அத்தகைய படிகங் களில் ஒளிக்கதிர் புகும்போது கதிர் இரண்டாகப் பிரிகிறது. அவற்றில் ஒன்று சாதாரணக் கதிர் fordinary ray) எனவும் ஏனையது அசாதாரணக் கதிர் (extraordinary ray) எனவும் கூறப்படும். இக் கதிர்கள் ஒன்றுக்கொன்று செங்குத்தான தளங்களில் முனைவாக்கம் (polarized) செய்யப்பட்டிருக்கும். சாதாரணக் கதிர் ஸ்நெல் விதிக்குக் கட்டுப்படும். அசாதாரணக் கதிர் பொதுவாக ஸ்நெல் விதிக்கு உட்படுவதில்லை. அசாதாரணக்கதிர் அதன் அலை முகப்புக்களுக்குச் செங்குத்தான திசைகளில் பரவுவ தில்லை. இவ்விரு அலைகளின் திசைகளுக்கிடையில் உள்ள கோணம் படிகத்தின் ஒளி அச்சுக்கும் படிகத் திற்குள் ஒளி பரவும் திசைக்கும் இடையிலுள்ள கோணத்தைப் பொறுத்தது. ஒளி அச்சுக்கு இணை யாகப் பயணம் செய்யும் ஒளி, இரட்டை விலக்கம் அடைவதில்லை. இரட்டை விலக்கப் படிகங்கள் ஒற்றையான ஒளியச்சைக் கொண்டவையானால் அவை ஓரச்சுப் படிகங்கள் (uniaxial) என்றும், இரண்டு ஒளியச்சு களைக் கொண்டிருந்தால் ஈரச்சுப்படிகங்கள் (biaxial) என்றும் குறிப்பிடப்படும். படிகத்துக்குள் அசாதா ரணக்கதிரின் திசைவேகம், கதிரை சாதாரணக் மிகுதியாக இருந்தால் படிகம் நேரின மானது எனவும், அதற்கு மாறாக இருந்தால் எதிரின மானது எனவும் குறிப்பிடப்படும். கால்சைட் ஓர் எதிரின ஓரச்சுப் படிகம். குவார்ட்ஸ் நேரின ஓரச்சுப் படிகம். அபிரகம் ஈரச்சுப் படிகமாகும். இரட்டை விலக்கப் படிகங்கள் நைக்கல் பட்டகங்கள் போன்வை முனைவாக்கிகளாகப் (polarizers) பயன்படுகின்றன. விட ஒளி விலகல் எண்களை அளவிடுதல் விலகல் அளவி யல் (refractometry) எனப்படும். நிறமாலை அளவி களைப் பயன்படுத்திப் பட்டக வடிவிலுள்ள பொருள் களின் ஒளி விலகல் எண்களை நுட்பமாகக் கண்டுபிடிக் கலாம். மெல்லிய சுவர்களுள்ள உள்ளீடற்ற பட்டக வடிவக் கலங்களில் நீர்மங்களை நிரப்பி இம்முறையில் அவற்றின் ஒளி விலகல் எண்களையும் கண்டுபிடிக் கலாம். பட்டக வடிவப் பொருள்களில் மாறுநிலைக் கோணங்களைக் கண்டுபிடிப்பதன் மூலமும் ஒளி விலகல் எண்களைக் கணக்கிடலாம். கண் சதுரக் கலங்களில் வைக்கப்பட்டுள்ள நீர்மங்கள், செவ்வகப் பாளங்கள் ஆகியவற்றில் செங்குத்தாகப் பார்க்கும் போது தெரியும் தோற்றத் தடிமனால் உண்மையான தடிமனை வகுத்து ஒளி விலகல் எண்ணைக் கணக்கிடலாம். வளிமங்களின் ஒளிவிலகல் எண்களைக் கண்டு பிடிக்க ஒளிக்குறுக்கீடு அளவு முறைகள் ஏற்றவை யாகும். ஜாமீன் ஒளி விலகல் அளவியில் ஒரு வெற்றிட மாக்கப்பட்ட குழாயினுள் வளிமத்தை மெல்லப் புகுத்தும்போது பார்வைப்புலத்தின் குறுக்கே செல்லும் வரிகளின் எண்ணிக்கையைக் கண்டுபிடிப்பதன் மூலம் ஒளி விலகல் எண் கணக்கிடப்படுகிறது. மெல்லிய படலங்களாகக் கிடைக்கக்கூடிய திண்மங்களின் ஒளிவிலகல் எண்ணையும் இம்முறையில் கண்டு பிடிக்கலாம். ஒளி விலகல் அளவிகள் வேதிப் பகுப்பாய்வில் குறிப்பிடத்தக்க சுருவிகள் ஆகும். எடுத்துக்காட்டாக தெரியாத ஒரு நீர்மத்தின் ஒளி விலகல் எண்ணை அளவிடுவதன் மூலம் பல சமயங்களில் அதன் கூட்ட மைப்பைக் கண்டுபிடிக்க முடிகிறது. வளிமண்டலத்தில் ஒளி விலகல். வளிமங்கள் சற்றே மிகுதியான விலகு எண்களைப் பெற்றுள்ளன. பொது வாக n-1 என்னும் அளவு, வளிம அடர்த்தி அல்லது அழுத்தத்திற்கும் தனி வெப்பநிலைக்கும் இடையி லான தகவுக்கு நேர் விகிதத்தில் இருக்கும். புவியின் வளிமண்டலத்தின் ஒளி விலகல் எண் 0 வெப்ப நிலையிலும் மி.மீ. பாதரச அழுத்த த்திலும் மஞ்சள் ஒளிக்கு 1.000293 ஆகவும், மேலே செல்லச் செல்லக் குறைந்து வளி மண்டலத்தின் மேல் விளிம்பில் ஒன்றாகவும் இருக்கும். எனவே விண்ணி லுள்ள பொருள்களைப் பார்க்கும்போது அவை அடி வானத்திலிருந்து உண்மையிலிருப்பதைவிட மிகு 760 . தொலைவிலிருப்பதுபோலத் தோற்றமளிக்கின்றன. இவ்வேறுபாடு அடிவானத்தில் 35' கோணவில்லாக உள்ளது. உச்சி வானத்தை நோக்கிச் செல்லச் செல்ல வேறுபாடு குறைந்து. உச்சி வானில் சுழியாகி விடுகிறது. உச்சி வானில் ஒளி செங்குத்தாக வளிமண்டலத் தில் நுழைகிறது. இவ்வாறு சூரியனும் பிற வான் பொருள்களும் உண்மையில் தோன்றுவதற்கு முன்னரே கண்ணுக்குத் தெரியத் தொடங்குகின்றன. ஓரிடத்தின் குறுக்குக் கோட்டளவைப் (latitude) பொறுத்து இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மணித்துளிக்கு முன்னரே அவை எழுந்தவையாகத் தோன்றும். அதே போல அவை மறையும்போதும் அதே அளவு காலம் தாழ்த்தி மறைவதைப் போலத்