பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/837

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒளி வினை 813

மாறும்போது வேறோர் அமைப்பையும் பெறுகின்றன. இவ்விரு கட்டமைப்புகளுமே மூலக்கூறுகளின் ஆடிப் பிம்ப வடிவங்களாக அமைகின்றன.இத்தகைய ஆடிப் பிம்ப வடிவங்கள் ஒன்றன் மீதொன்று பொருந்தாத வகையிலிருக்கும். இவ்வொன்றன் மேலொன்று கவ்விப் பொருந்தாத்தன்மைக்கு (nonsuper imposabi- lity) மூலக்கூறுகளின் மாறுபட்ட அமைப்புகளே காரணமாகின்றன. கட்டமைப்பில் அதாவது மூலக்கூறுகளிலுள்ள தொகுதிகளின் இடச்சார்ப மைப்பில் உள்ள வேறுபாட்டின் காரணமாகத் தோன்றும் மாற்றியம் (isomer) முப்பரிமாணமாற்றி யம் (stereoisomerism) என்பதால் ஒளியியல் மாற்றி யமும் ஒரு முப்பரிமாண மாற்றியமே. கொள்ளா ஒரு மூலக்கூறின் வடிவம் அதன் ஆடிப் பிம்ப வடிவத்துடன் கவ்விப் பொருத்தம் திருக்க அம்மூலக்கூறின் சீரிலாமை (chirality) காரணமாகிறது. இதுவே மூலக்கூறுகள் ஆடிப் பிம்ப மாற்றியங்களாயிருக்கத் தேவையான நிபந்தனை யாகும். சமச்சீரில்லா மூலக்கூறுகள் (chital molecules) சீர்மைப் பண்புகளைப் (elements of symmetry) பெற்றிருப்பதில்லை. நான்கு வேறுபட்ட தொகுதி களுடன் இணைந்துள்ள ஒருகார்பன் சேர்ம மூலக்கூறு சீர்மைப் பண்பு எதுவும் பெற்றிருக்கவில்லையாதலால், இம்மூலக்கூறுகள் சீரில்லா மூலக்கூறு எனவும், நான்கு வேறுபட்ட தொகுதிகளுடன் இணைந்துள்ள கார்பன் அணு சீரில்லா மையம் எனவும் கூறப்படும். இதைப்போலவே சீரிலாக்கார்பன் அணுப் பெற்று ஒளிவினை நிகழ்த்தும் சேர்மங்கள் எண்ணற்றவை யாக விளங். கு கின்றன. எடுத்துக்காட்டாக மாலிக் அமிலம், மாண்டலிக் அமிலம் போன்ற ஹைட்ராக்சி அமிலங்களையும், 2-பியூட்டனால் மீத்தைல் ஃபீனைல் - கார்பினால் போன்ற கார்பினால்களையும், அலனின் டிரிப்ட்டஃபேன் போன்ற அமினோ அமிலங் களையும் 2- புரோமா- ஆக்ட்டேன் போன்ற ஹாலைடுகளையும் குறிப்பிடலாம். சமச்சீரில்லாக் கார்பன் அணுவுடன் இணைந்துள்ள தொகுதிகள் யா வும் ஃபுளூரோ ளோரோ புரோமோமீத்தேனில் உள்ளது போன்று அணுக்களேயாயினும் அல்லது சமச்சீரில்லாக் கரியணுவில் இணைந்துள்ள நான்கு தொகுதிகளில் இரண்டு ஒரே தனிமத்தின் ஐசோ டோப்புகளாயினும் சேர்மம் ஒளிவினை நிகழ்த்தும். CH - H D CH, [x] =-0.30° ஒளிவினைக்குச் சமச்சீரிலாமை காரணமாயினும், சமச்சீரில்லா மூலக்கூறுகள் எப்போதும் ஒளிவினை நிகழ்த்தவேண்டுமென்பதில்லை. ஒளியியல் மாற்றியங் ஒளி வினை 813 . கள் சம அளவில் கலந்துள்ள கலவை. அதிலுள்ள மூலக் கூறுகள் யாவும் சமசீரில்லா மூலக்கூறுகளாயிருப்பினும் ஒளிவினை நிகழ்த்துவதில்லை. ஒரு மாற்றியம் ஒளியை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வலப்பக்கமாகத் திருப்பும்போது, இன்னொரு மாற்றியம் ஒளியை அதே அளவுக்கு இடப்பக்கமாகத் திருப்புகிறது. இதனால், முடிவில் ஒளி எத்திசைக்கும் திருப்பப்படாமல் சம மாக்கப்பட்டு வெளியேறுகின்றது. இதைப் புறச்சம விளைவு (external compensation ) எனக் குறிப்பிட லாம். இத்தகைய ஒளிவினை நிகழ்த்தாத ஒளியில் மாற்றியங்களின் கலவை இடவலம்புரி நடுநிலைக் கலவை (racemic mixture) அல்லது அழிமாய்க் கலவை எனப்படும். ஒரே ஒரு சமச்சீரில்லா மையத்தைப் பெற்றுள்ள மூலக்கூறு ஆடிப் பிம்ப வடிவங்களாயிருக்க, ஒன்றுக்கு மேற்பட்ட சீரிலா மையங்களைப் பெற்றுள்ள மூலக் கூறுகள் சீருடைய மூலக்கூறுகளாயிருக்கவும் வாய்ப் புண்டு. காட்டாக, இரண்டு ஒரே மாதிரியான சமச் சீரில்லாக் கார்பன் அணுக்களைப் பெற்றுள்ள டார் டாரிக் அமில மூலக்கூறுகள் ஒன்றின்மேலொன்று கவிந்து பொருந்தாத இரு ஆடிப் பிம்ப வடிவங்களி லும், ஒரு சீருடைய வடிவத்திலும் ஆக மூன்று மாற்றிய வடிவங்களைப் பெற்றிருக்கின்றன. சீருடைய வடிவம் பெற்றுள்ள டார்டாரிக் அமிலம் அதன் ஆடிப் பிம்ப வடிவத்துடன் பொருந்தும்; ஒளிவினை நிகழ்த்து வதில்லை. இவ்வாறு சமச்சீரில்லா மையங்களைப் பெற்றிருந்தும் ஒன்றின்மேலொன்று கவிந்து பொருந் தக் கூடிய ஆடிப்பிம்ப வடிவங்களைப் பெற்றுள்ள மூலக்கூறுகள் இடையுறு (meso) மூலக்கூறுகள் எனப்படும். இடையுறு மூலக்கூறுகளில் சீர்மைத் தளம் காணப்படும். சீர்மைத் தளம் இம்மூலக்கூறை இரு சமபகுதிகளாகப் பிரிக்கும். இப்பகுதிகளில் ஒன்று மற்றதன் ஆடிப் பிம்பமாக அமையும். இம்மூலகூறின் ஒரு பகுதி ஒளியை வலப்பக்கம் சுழற் றும்போதும் மற்றது ஒளியை இடப்பக்கமாகச் சுழற்று வதாலும் சமமடைந்து முடிவில் ஒளிவினை நிகழாதிருக்கும். இதை அகச்சமன விளைவு (internal compensation) எனக் குறிப்பிடலாம். கார்போஹைட்ரேட்டு, பெப்டைடு, ஸ்டிராய்டு. டெர்பீன், அல்க்கலாய்டு போன்ற இயற்கையில் காணப்படும் சேர்மங்கள் பலவற்றில், ஒன்றுக்கு மேற் பட்ட சமச்சீரிலா மையங்கள் காணப்படுகின்றன. ஒவ்வொரு சீரிலா மையமும் இரு அமைப்புகளைப் பெறவியலுமாதலால் ஒரு மூலக்கூறிலுள்ள சீரிலா மையங்களில் எண்ணிக்கைக்கேற்ப மாற்றியங்களின் எண்ணிக்கை அமையும். பொதுவாக 'n' சீரிலா மையங்களைப் பெற்றுள்ள மூலக்கூறு 24 மாற்றியங் களைப் பெற்றிருக்கும். இவ்வாறு இரு சீரிலா மையங்களுடைய மூலக்கூறு நான்கு (21) மாற்றி யங்களைப் பெற்றிருக்கும். இதில் ஒன்றுக்கொன்று ஆடிப் பிம்பமாகவுள்ள ஈரிணைகள் (pairs) அடங்கும்.