பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/844

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

820 ஒற்றி

820 ஒற்றி ஒற்றி இது ஆறு அங்குல நீளமுள்ள அலுமினியம் அல்லது இரும்பால் ஆன சும்பியாக இருக்கலாம். இதன் ஒரு முனை அரை அங்குலத்திற்குச் சொர சொரப்பாகச் செய்யப்பட்டு முக்கால் அங்குல அளவு வரை பஞ்சால் அழுத்தமாகச் சுற்றப்பட்டிருக்கும். இந்த ஒற்றியை (swab) 5"x}" al உள்ள கண்ணாடி ஆய்வுச் குழாய்க்குள் வைத்து வாய்ப்புறத்தை இறுக்கமான பஞ்சால் அடைக்க வேண்டும். கண்ணாடிக்குழாய், ஒற்றி ஆகியவற்றை அழுத்த அனற்கலத்தில் (autoclave) வைத்துத் தூய்மைப் படுத்த வேண்டும். கம்பிகளுக்கு மாற்றாக மரக் குச்சியையும் பயன்படுத்தலாம். இவற்றை தேவைக் கேற்றவாறு உடைத்து நீளத்தைச் சரி செய்து கொள்ளலாம். எறிந்துவிடக்கூடிய ஒற்றிகள். இவ்வகை ஒற்றிகள் யல்பாகவே ஊனீரில் ( (serum) நனைக்கப்பட்ட தாகவோ, நிலக்கரி பூசப்பட்டதாகவோ இருக்கலாம். இவற்றைப் பயன்படுத்தியபீன் உறையோடு நெருப் பிலிட்டு அழித்து விடவேண்டும். தனிப்பட்ட ஒற்றிகள். இவை எளிதில் எட்டாத இடங்களிலிருந்தோ, உறுப்புகளிலிருந்தோ எடுக்கப் படுபவை ஆகும். குழந்தை ஒற்றிகள். குழந்தைகளுக்குக் காது போன்ற சிறிய துளைக்குள் ஒற்றியை நுழைக்கும் போது அவை வெளியிலிருந்து கிருமிகளை உள்ளே எடுத்துச் செல்லாமல் பாதுகாப்புடன் இருக்க மெல்லிய ஒற்றிகளைப் பயன்படுத்த வேண்டும். மூக்கு வழியாகப் பயன்படுத்தப்படும் ஒற்றிகள். இவை கக்குவான் இருமலைக் கண்டு தெளியப் பயன் படுத்தப்படுகின்றன, இந்த ஒற்றியை மூக்கின் அடிப் பகுதி வழியாகச் செலுத்தித் தொண்டையின் மூக்குப் பகுதியிலிருக்கும் சுரப்பு நீரை எடுத்து ஆய்வு செய்யப் பயன்படுத்தலாம். இதற்கு வளைந்து கொடுக்கக் கூடிய தன்மையுள்ள 7* நீளமுள்ள தாமிரக் கம்பியில் சுற்றிய ஒற்றிகளைப் பயன்படுத்த வேண்டும். மூக்கைத் தாண்டிச் செலுத்தப்பட வேண்டிய ஒற்றி கள். மெனிங்கோகாக்கை (Meningococci) என்னும் நுண்ணுயிர் தொண்டையின் மூக்குப் பகுதியில் தொடர்ந்து இருந்து வருகிறதா என்று அறிந்து கொள்ள இந்த ஒற்றிகள் பயன்படுகின்றன. இந்த ஒற்றியின் முனை 45°யில் வளைக்கப்பட்டிருப்பதால் தொண்டையைத் தாண்டி அதன் மூக்குப்பகுதியை அடைய முடிகிறது. குரல்வளை ஒற்றிகள். இது மூச்சுக்குழாயின் கிளை களிலிருக்கும் காச நோய்க்கிருமிகளைக் கண்டுபிடிக்க உதவுகிறது. கருப்பை வாய் ஒற்றிகளும்,யோனியின் மேல்புற ஒற்றிகளும். இவை வெட்டை நோயையும், குழந்தைப் பிறப்புத் தொடர்பான காய்ச்சலையும் கண்டறிய உதவுகின்றன. இத்தகைய ஒற்றிகளை வேறு இடத் திற்கு அனுப்பி வைக்க வேண்டிய நிலையில் காப்பு நீர்மத்தில் போட்டு அனுப்ப வேண்டும். முறையில் நிலக்கரி பூசப்பட்ட ஒற்றிகளில் கிருமிகள் காப்பு நீர்மத்தில் நீண்ட காலம் உயிர் வாழ்வதைக் சுவயம் ஜோதி காணலாம். ஒற்றைக்குளம்பி எண்ணிக்கை நடை இவை பெரிய உருவமுடைய தாவரவுண்ணிப் பாலூட்டிகளாகும். இவற்றில் கால் விரல் மற்ற பாலூட்டிகளிலுள்ளதைவிடக் குறைவு. விரல் நுனியில் குளம்புண்டு. புல், இலை, தழை ஆகிய உணவின் தன்மையைப் பொறுத்து உதடுகளும் பற்களும் மாறுபாடு அடைந்துள்ளன. பல வாய்பாடு. வெட்டும் பல். 3/3, கோரைப்பல் 1/1, முன்கடைவாய்ப்பல் 4/4, பின்கடைவாய்ப்பல் 3/3. தாடையின் மேல், கீழ்ப் பக்கங் களிலுள்ள பற்களின் எண்ணிக்கை மொத்தம் 44. 3:1:4:3 3:1:4:3 எளிய அமைப்புள்ள இரைப்பையும், பெரிய. சிக்கலான சீக்கமும் (caecum) உள்ளன. உடல் தோல் மிகவும் தடித்துள்ளது. அதில் மயிர் பரவலாகவோ அடர்த்தியாகவோ இருக்கும். இவ் வரிசையில் 3 குடும்பங்களும், 6 பேரினங்களும் (genera) 16 சிற்றினங்களும் (species) இட டம் பெற்றுள்ளன. குடும்பம்-1 ஈக்குவிடே (equidae). இக்குடும்பத்தில் ஒரு பேரினமும், 7 இனங்களும் அடங்கியுள்ளன. பேரினம் ஈகுவஸில் (equus) 4 துணைப் பேரினங்கள் உள்ளன. இவை கிழக்கு ஆப்பிரிக்கா. மங்கோலியா, அமெரிக்கா, இந்தியா ஆகிய நாடுகளில் காணப்படு கின்றன. . 1. துணைப்பேரினம் - ஈக்குவஸ். எ.கா. குதிரை. புல்வெளிகள், பாறை அல்லது மணற்பாங்கான பாலைவனங்களில் இவை வாழ்கின்றன. ஏறத்தாழ 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட பிளீஸ்டோசீன் காலத்தில் தற்காலக் குதிரையின் முன்னோடி படிமலர்ச்சியுற்றது. காலப்போக்கில் இவற்றின் காலின் முதல் விரல்கள் இணைந்து ஒரே