826 ஒற்றைச்செல் உயிரி
826 ஒற்றைச்செல் உயிரி சில முன்னுயிரிகளில் உயிர்வாழ் செயல்களான உண்ணுதல், நகர்தல், உணர்தல், இனப்பெருக்கம் செய்தல் போன்றவை வேறுபாடுறாத புரோட்டோப் பிளாசத்தால் செய்யப்படுகின்றன. ஆனால் வேறு சில முன்னுயிரிகளில் புரோட்டோப்பிளாசம் வேறு பாடுகளுற்று உருமாற்றங்கள் பெற்றுள்ளது. இவை உறுப்புகள் போலச் செயல்படும் தன்மை பெற் றுள்ளவை என்பதால் இத்தகைய வேறுபாடுகளுற்று உருப்பெற்ற புரோட்டோப்பிளாசப் பகுதிகளை நுண்ணுறுப்புகள் (organelles) அல்லது செல் நுண் ணுறுப்புகள் எனக் குறிப்பிடுவர். செல்படாவுயிரிகளின் நுண்ணுறுப்புகளான குற்றி ழைகள் (cilia), போலிக்கால்கள் (pseudopodia), கசை இழைகள் (flagella) முதலியன பொருள்களைப் பிடிக்கவும், இடம்விட்டு இடம் பெயரவும் பயன்படுகின்றன. இவை தவிர நகருவதற்காக நுண் சுருங்கு இழைகளும்; ஒட்டுண்ணிகள் ஓம்புயிரியைப் பற்றிக் கொள்ள நுண்பற்றுறுப்புகளும்; ஊடுகலப்பு ஒழுங்கு பாடு (osmoregulation) செய்யச் சுருங்கு நுண்குமிழிகளும் (vacuoles); உணவை விழுங்கவும். சேகரிக்கவும் செல் தொண்டையும், உணவு வரிப் பள்ளமும், ஒளி உணரும் கண்புள்ளிகளும், உணர்ச்சி நுண் முள்களும் முன்னுயிரிகளில் காணப்படுகின்றன. மேல் விலங்குகளில் ஒவ்வொரு வகை உடற் செயலையும் அதற்கென அமைந்த உறுப்புகள் செய் கின்றன. அவ்வாறே செல்படாத உயிரிகளின் உடற் செயல்களை அவற்றிற்கெனவுள்ள செல்பகுதிகள் செய்கின்றன. இப்பகுதிகள் கூர்முள்கள், இழைகள், அமீபா குமிழ்கள் என உருப்பெற்றிருக்கலாம் அல்லது வேறு பாடுறாத புரோட்டோப்பிளாசமாகவே இருக்கலாம். இவை கலவி முறை (sexual), கலவா முறை (non sexual) ஆகிய இரு முறைகளிலும் இனப்பெருக்கம் செய்கின்றன. கலவா இனப்பெருக்கத்தில் பிளவுறுதல் (fission), முகிழ்த்தல் (budding), பல் பிளவு முறை (multiple fission) என்னும் பல முறைகள் காணப்படு கின்றன. கலவி முறை இனப்பெருக்கம் பரவலாக அனைத்து முன்னுயிரிகளிலும் நடைபெறுகிறது. முன்னுயிரிகள் அனைத்தும் நுண்ணோக்கியின் உதவியின்றிக் காண முடியாத அளவிற்கு மிகச் சிறியன. சிலவற்றில் வெளியுறைகளும், கூடுகளும் (cysts) உள்ளன, சில முன்னுயிரிகள் கடல் நீரிலும், சில சதுப்புநிலங்களிலும், சில முன்னுயிரிகள் விலங்கு களில் அக ஒட்டுண்ணிகளாகவும் வாழ்க்கை நடத்து கின்றன. அவை 1. இடப்பெயர்ச்சி நுண்ணுறுப்புகளை அடிப்படை யாகக் கொண்டு முன்னுயிரிகள் நான்கு வகுப்பு களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. ரைசோப்போடா (rhizopoda) அல்லது சார்ப்கோ டைனா (sarcodina), எ.கா. அமீபா. எண்ட்டமீபா. 2. நீள் இழை உயிரிகள் (flagellata) அல்லது மாஸ்ட் டிகோஃபோரா (mastigophora), எ. கா. யூக்ளினா. டிரிப்பனோசோமா. 3. சிதல் உயிரிகள் (sporozoa) எ.கா. பிளாஸ்மோடியம், மானோசிஸ்டிஸ். 4. குற் றிழையுயிரிகள் (ciliophora) எ கா.பாரமீசியம், வார்ட்டிசெல்லா. 00 மலேரியா ஓட்டுண்ணி எண்ட்டமீபா ஹிஸ்ட்டாலிட்டிகா டிரிப்பனோசோமா காம்பியன்சி யூக்ளினா மைக்ராஸ்கோப்பில் காணப்படும் பாரமீசியம் பெரிதாக்கப் பட்ட பாரமீசியம்