பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/851

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒற்றைத்‌ தலைவலி 827

ஊட்ட முன்னுயிரிகளில் ஆறுவகை உணவு முறைகள் காணப்படுகின்றன. விலங்கு போலுண் ணுதல் (holozoic), தாவரம் போலுண்ணுதல் (nolo- phytic). சாறு உண்ணுதல் (saprozoic or saprophytic) ஒட்டுண்ணி முறை (parasitic), கழிவுவுண்ணுதல் (coprozoic) பலவகைகளில் உண்ணுதல் (mixotrophic) ஆகியன குறிப்பிடத்தக்கவை. சில முன்னுயிரிகள் இந்த ஆறு ஊட்ட முறைகளைத் தவிர வேறு சில தனிப் பட்ட முறைகளிலும் உண்கின்றன; ஊட்டம் பெறு கின்றன. இணை வாழ்வு முறை (symbiosis) உடன் உண்ணுமுறை (commensalism) போன்ற உணவூட்டம் பெறும் முறைகளையும் முன்னுயிரிகளில் காணலாம். ஃபொராமினிஃபெரன்கள் (foraminiferans) எனப் ரைசோப்போடா படும் நுண்ணுயிரிகள், கடல் பரப்பில் வாழ்கின்றன. இவை சுண்ணாம்புப் பொருள். சிலிகா, கைட்டின் (chitin) போன்றவற்றால் ஆக்கப் பட்ட ஓட்டினுள் வாழ்பவையாகும், இவை இறந்த வுடன் இவற்றின் வெற்றுக் கூடுகள் கடலில் அமிழ்ந்து அடித்தளத்தை அடைகின்றன. இவை ஓரளவு கரைந்து மண்ணுடன் கலந்து ஃபொராமினிஃபரன் அசும்பு (foraminiferanooze) LT டாகிறது. கடல் தளத்தின் மூன்றில் ஒரு பகுதி இதனால் ஆனது. பல சுண்ணாம்புப் பாறைகள் இவற்றால் ஆனவை. ரைசோப்போடா முன்னுயிரிகளில் (ரேடியோ லேரியங்கள்) சிலிக்கானாலான உள்ளன. கூடுகள் கடலின் அடித் இவை இறந்தவுடன் இக்கூடுகள் தளத்தை அடைகின்றன. இக்கூடுகளும்,கடல் பஞ்சு களும், டையாட்டம்களும் (diatoms) சேர்ந்து உண்டான பொருளுக்கு ரேடியோலேரிய அசும்பு (radiolanian ooze) என்று பெயர். ஒற்றைச் செல் உயிரிகள் பொருளாதாரச் சிறப்பு வாய்ந்தவை. இவற்றுள் பல, பிற விலங்குகளுக்கு நன்மை பயக்கக் கூடியவையாகவும், வேறு சில தீமை பயக்கக்கூடியவையாகவும் உள்ளன. ஒற்றைச்செல் போன்ற உயிரிகள், நீரில் உள்ள பாக்டீரியாக்களை விழுங்கி உண்பதால் குடிநீர் தூய்மையாகிறது. புழுக்கள், நுண் ஒட்டுடலிகள், பூச்சி இளவுயிரிகள் ஆகியன மிதவை முன்னுயிரிகளை உணவாகக் கொள்கின்றன. இணைவாழ்வு முறை, உடன் உண்ணுதல் வழிகளில் பிற விலங்கு வகைகளுக்கு முன்னுயிரிகள் துணை செய்கின்றன. எடுத்துக்காட்டாகக் கறையான் களின் குடலில் வாழும் டிரைக்கோநிம்ஃபா என்னும் முன்னுயிரிகள் கறையானின் உணவிலுள்ள செல்லு லோஸைச் செரிக்கச் செய்கிறது, அதனால் கறையான் முன்னுயிரி ஆகிய இரண்டும் பயன் பெறுகின்றன. பல குற்றிழையிகள் தவளை, மீன் ஆகியவற்றின் உடலின் மேல் உடன்வாழ்உயிரிகளாக (commensals) வாழ்கின்றன.மனிதனின் குடலில் வாழும் பேலண்ட் டிடியம் கோலை (Balantidium coli) என்னும் குற்றிழை உயிரி அங்குள்ள கேடு செய்யும் பாக்டீரி யாக்களை உணவாக கின்றன. ஒற்றைத் தலைவலி 827 ட்கொண்டு நன்மை செய் முன்னுயிரிஒட்டுண்ணிகள். ஓம்புயிரிகளின் (hosts) திசுக்களையும், இரத்தத்தையும் உண்டு ஓம்புயிரிக்குக் கேடு செய்து நோய்களை உண்டாக்குகின்றன. மனித இனத்திற்குத் தொடக்க காலத்திலிருந்தே கேடு விளைவிக்கும் நோயான மலேரியாக் காய்ச்சல் மலேரியா ஒட்டுண்ணியால் உண்டாகிறது. மலேரியா ஒட்டுண்ணி ஒர் ஒற்றைச் செல் உயிரியாகும். ஆப்பிரிக்காவின் வெப்பப்பகுதிகளில் வாழும் மனிதர் களைத் தாக்கும் காம்பியாக் காய்ச்சலும் உறக்க நோயும் ட்டிரிப்பனோசோமா காம்பியன்சி என்னும் செல் இரத்தக் கசையிழையுயிரியாகிய ஒற்றைச் உயிரியால் உண்டாகின்றன. எண்ட்டாமீபா ஹிஸ் டாலிட்டிக்கா என்னும் ஒற்றைச் செல் ஓட்டுண்ணி அமீபச் சீதபேதி நோய்க்குக் காரணமாகும். உடற் கட்டமைப்பில் வேறுபாடுகள் இருந்த போதும் அமீபா, பாரமீசியம், பிளாஸ்மோடியம், யூக்ளினா ஆகியவற்றுக்குப் பொதுவான ஒரு சிறப்புத் தன்மை உண்டு. இவ்விலங்குகளின் உடல் ஒரு தனிச் செல்லைப் போலவுள்ளது. இவற்றின் எளிய கட்டமைப்பு ஒற்றைச் செல் உயிரிகளின் தொன்மையைக் காட்டுகிறது. முன்னுயிரிகள் ஏறத் தாழ நூற்றைம்பது கோடி ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றின என்று உயிரியல் அறிஞர்கள் கின்றனர். ஒற்றைத் தலைவலி கூறு செ. இராஜசேகரன் இது ஒரு பக்கத் தலைவலி, ஒருக்கட்டை வலி. மண்டைக் குத்தல் என்று பலவாறாகக் குறிப்பிடப்படு கிறது. இந்நோய் தலையின் ஒரு பக்கம் மட்டுமே வலியை தாங்க முடியாத அளவு உண்டாக்கும். வாந்தி, குமட்டல், கண்களில் மின்மினிப் பூச்சி பறப் பதுபோல் தோற்றம் ஆகியவை முதலில் ஏற்படும். குறித்த காலங்களில் வந்து வந்து போகும். ஒவ்வொரு முறையும் வரும் விதத்திலும் வலியின் அளவிலும் இடைவெளியிலும் வேறுபாடு காணப்படும். ஒரே பக்கத்தில் மட்டுமே தொடர்ச்சியாக வர வேண்டும் என்பதில்லை. ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு பக்க மாக மாறி மாறி வரலாம். சில சமயங்களில் இரண்டு பக்கமும் வலி இருக்கும். ஆனால் ஒரு பக்கம் வலியின் கடுமை கூடுதலாக இருக்கும். இது ஒரு குடும்பத்தைச் சேர்ந்த பலருக்கும் பரம்பரையாக வரும். முதல்தர ஒற்றைத் தலைவலி (classical migraine). இவ் வகையில் தலைவலி வருவதை முன் அறிவிப்புச் செய்வது போல் கண்பார்வை மங்கல், கோடு