பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/852

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

828 ஒற்றைத்‌ தலைவலி

828 ஒற்றைத் தலைவலி முதல்தர ஒற்றைத் தலைவலி கோடாக அலை போன்ற தோற்றம், ஆங்காங்கே இருண்ட புள்ளிகள் கண் முன் தோன்றுதல் ஆகிய அறிகுறிகள் ஏற்படலாம். இதன் பின் 10-20 நிமிடங் களுக்குப் பிறகு தலைவலி உண்டாகும். இது 1-6 மணி நேரம் வரை நீடிக்கும். சில சமயங்களில் 24 மணி நேரமும் தொடர்ந்து இருக்கும், வாந்தி, குமட் டல், கண் கூச்சம் முதலியன ஏற்படும். வலியின் தொடக்கத்திலோ முடிவிலோ குறிப்பிட்ட சில நரம்பு செயலிழந்து போய்விடும்; ஆனால் சிறிது நேரத்திற்குப் பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும். சில சமயங்களில் வலி சில நாள் தொடர்ந்து நீடிக்கும். கண்பார்வையில் மாற்றம், பேச்சுத் தடைப் படுதல், ஒரு பக்கக் கை-கால் வாதம் அல்லது உணர்வு மரத்துப் போதல் முதலிய பின்விளைவுகளும் ஏற்படு வதுண்டு. குறிப்பாக இந்நோய் 10 - 30 வயதுக்குள் முதன் முறையாக வரும். இந்நோய் 60% - 75% பெண்களுக்கு ஏற்படுகிறது, 25% க்கு சிறு வயதில் தலைவலி ஏற்படவில்லை என்றாலும் வாந்தி தலை சுற்றல் ஆகியவை குறிப்பிட்ட காலங்களில் வரும் இரண்டாம் வகை மாறுபட்ட ஒற்றைத் தலைவலி (nonclassical migraine) எனப்படும். இதுவே பொதுவாகப் பலருக்கு ஏற்படும் ஒற்றைத் தலைவலி யாகும். இவ்வகையில் வாந்தி முதலியன இல்லாமல் திடீரென ஒரு பக்கத் தலைவலி ஏற்பட்டு ஒரு சில மணி நேரத்திற்குப் பின் குறையும். இவைதவிரச் சிக்கலான பல ஒற்றைத் தலைவலி வகை உள்ளன. அவை பின்வருமாறு ஒருமுக ஒற்றைத் தலைவலி (racial migraine). இதில் வலி, தலையின் கீழ்ப்பகுதியில் முகப் பகுதியை யும் சேர்த்துப் பொறுக்க முடியாத வலி இருக்கும் (படம் 2) கண்குத்தல் ஒற்றைத்தலைவலி (ophthalmoplegic migraine). இதில் பொறுக்க முடியாத வலி கண் . ஒரு முக ஒற்றைத் தலைவலி கண் குத்தல் ஒற்றைத் தலைவலி கொத்துத் தலைவலி