பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/858

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

834 ஒன்றிய புலக்கோட்பாடு

834 ஒன்றிய புலக்கோட்பாடு நியுக்ளியான், ஓர் எதிர் நியுக்ளியான் ஆகியவற்றின் கூட்டமைப்பாகக் கருத வேண்டியுள்ளது. i - தற்சுழற்சி களின் கீழான பையான் நிலை மாற்றங்களை விளக்கவே இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. பையான் உண்மையில் நியுக்ளியான், எதிர் நியுக்ளியான் ஆகிய வற்றின் கூட்டு அல்ல. Su, சமச்சீர்மை. அயல் துகள்கள் (strange par- ticles) இருப்பதிலிருந்து வலிய இடைவினைகளின் சமச்சீர்மைக் குழு மேலும் பெரிது என்று தெரிகிறது. அயல் தன்மை (strangeness) என்னும் வேறொரு குவாண்ட்டம் எண் மாறாமல் வைக்கப்படுகிறது. என்னும் அயல் தன்மையைச் சுமப்பதற்காக 14> மூன்றாம் அடிப்படைத்துகள் ஒன்றைக் கற்பித்துக் கொள்வதன் மூலம் இம்மாறாமை பெறப்படுகிறது. ஒரு i- தற்சுழற்சி ஒற்றைத்துகள் ஆகும். நியுக்ளியான், லாம்டா துகள் ஆகியவற்றின் கட்டங்களுக்கிடையில் சார்பியல் மாற்றம் ஏற்பட்டாலும் இக்கூடுதலான சமச்சீர்மை மாறாது. ஓரளவான எண்ணிக்கையில் அயல்துகள்களை ஆய்வு செய்த பிறகு அவை பழைய துகள்களுடன் பன்மைகளாகக் (multiplets) குழுமி யிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு குழுவிலுள்ள அனைத்துத் துகள்களுக்கும் கால-வெளி குவாண்ட்டம் எண்கள் சமமாக இருந்தன. ஆனால் அவற்றின் நிறைகள் ஒரே மாதிரியாக இருந்தும் சமமாக இல்லை. இதிலிருந்து மேலுமொரு பெரிய சமச்சீர்மை இருப்ப தாகத் தோன்றியது. இச்சமச்சீர்மை, அடிப்படைத் துகள்களின் ஒரு மும்மையின் ஒன்றிய மாற்றங்களின் குழு எனக் கண்டுபிடிக்கப்பட்டது. அது Sug எனக் குறிக்கப்படுகிறது. இதை ஒன்றிய சமச்சீர்மை எனவும் பொதுவாகக் குறிப்பிடுவதுண்டு. மேலே விளக்கப் பட்ட i தற்சுழற்சி, அயல் தன்மை ஆகியவற்றின் கூட்டுச் சமச்சீர்மை Su,இன் ஒரு துணைக் குழு வாகும். Su,இன் அனைத்து இயன்ற பன்மைகளும் (possible multiplets) இயற்கையில் காணப்படுகின்றன. ஆனால் மூன்றின் முழு எண் மடங்குகளுக்குச் சம மான எண்ணிக்கையில் அடிப்படைத் துகள்களைக் கொண்ட அடிப்படை மும்மைத் துகள் சேர்மங் களாகக் கருதப்படக்கூடிய பன்மைகள் மட்டுமே Su, இல் காணப்படும். குறிப்பாக அடிப்படை மும்மை யாகக் கருதக்கூடிய துகள் காணப்படுவதேயில்லை. இவ்வாறு இருப்பினும் ஹேட்ரான்கள் எனப்படும் வலிமையான இடைவினை செய்யும் துகள்களை மூன்று குவார்க்குகளின் சேர்மங்களாகக் கற்பித்துக் கொள்வதன் மூலம் ஹேட்ரான்களின் நடத்தை களைப் பண்பறுதியாகவும், விரிவாகவும் விளக்க முடிகிறது. SUN சமச்சீர்மை. ஹேட்ரான்களுக்கு SUN என் னும் தோராயமான சமச்சீர்மை உள்ளதாகத் தெரி கிறது. இதில் N என்பது குவார்க் வகைகள் அதாவது சுவைகளின் (flavors) எண்ணிக்கை, ஐவகைச் சுவை யுள்ள குவார்க்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேல். கீழ், அயல், சார்ம் (charm), அடி (bottom ) என அவை குறிக்கப்படுகின்றன. அடிக் குவார்க்குக்கு இணையாக மேலும் ஒரு குவார்க்கு இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இயன்ற நிறை மிக்க குவார்க்குகளின் மொத்த எண்ணிக்கை தெரியவில்லை. ஆறு வகையான லெப்டான்களும் (leptons) இது வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தோன் றும் SU சமச்சீர்மை அவற்றின் வலிமையற்ற இடை வினைகளில் பங்கு வகிக்கிறது. 6 நிற SU;. குவார்க்குகளின் அடிப்படையில் ஹேட்ரான்களை விளக்க முனையும்போது, குவார்க்கு களுக்குத் தற்சுழற்சி, சுவை ஆகியவற்றுடன் நிற எண்ணும் குவாண்டம் எண்ணும் இருப்பதாகவைத்துக் கொண்டாலே பேரியான்களின் நடத்தைகளைச் சரி யாக விளக்க முடிகிறது. அதனால் ஏற்படும் SU நிறச்சமசீர்மை நுட்பமானதாகக் கருதப்படுகிறது. அதாவது ஒரு குறிப்பிட்ட சுவையும் வெவ்வேறு நிறங் களும் கொண்ட குவார்க்குகள் முற்றிலும் சமான மானவை எனக் கொள்ளப்படுகிறது. ஆனாலும் இச் சமச்சீர்மை வெளித் தெரிவதில்லை. அனைத்துத் தனித்துகள்களும் சமச்சீர்மையின் ஒற்றைக் குறியீட் டைச் சேர்ந்தவையாக இருப்பது இதற்குக் காரண மாக இருக்கலாம். ளன. லான சார்பியலற்ற சமச்சீர்மைகள். முற்றிலுமான உள் ளிடத் தன்மையற்ற ஒன்றிய சமச்சீர்மைகளும் உள் அவற்றில் அடிப்படைத் துகள்களுக்கிடையி இடைவினை தற்சுழற்சியைச் சார்ந்திராத தாகக் கொள்ளப்படுகிறது. எடை குறைவான அணுக்கருக்களில் இத்தகைய தோராயமான சமச் சீர்மை இருப்பதாக விக்னர் கருதினார். அங்குள்ள அடிப்படைத் துகள், நான்கு (quartat) நிலையுள்ளது. மேல் தற்சுழற்சியுள்ள புரோட்டான், கீழ்த் தற்சுழற்சி யுள்ள புரோட்டான், மேல் தற்சுழற்சியுள்ள நியுட் ரான், கீழ்த் தற்சுழற்சியுள்ள நியுட்ரான் ஆகிய வையே அந்த நிலைகள் ஆகும். எனவே அச் சமச்சீர் மைக்குழு SU, எனப்படும். இதே போல SU, குவார்க்கு களின் இடைவினைகள் தற்சுழற்சி சாராதவை என வைத்துக் கொண்டால், சமச்சீர்மைக் குழு SU¢ ஆகும். ஒரு சார்பியல் கொள்கையில் இத்தகைய ஒன்றிய சமச்சீர்மைகள் நுட்பமானவையாக இருக்க முடியாது. ஆனால் சிறும ஆற்றல் நிலைகளுக்காவது அவை தோராயமாகச் சரியாக இருக்க முடியும். ஒன்றிய புலக்கோட்பாடு கே.என். ராமச்சந்திரன் ஈர்ப்புக் கோட்பாடு (gravitational theory) மின் காந்தக் கோட்பாடு (electromagnetic theory) ஆகிய