பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/860

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

836 ஒன்றுவிட்ட இரட்டைப்‌ பிணைப்பு

836 ஒன்றுவிட்ட இரட்டைப் பிணைப்பு மோதல்களைக் கண்டறிந்தனர். இவற்றில் 5 திசையன் போசான்கள் உ உருவாயின என நம்பப்படு கிறது. அத்துகள்கள் தோற்றத்திலும் மணத்திலும் பண்பிலும் திசையன் போசான்களே என அறிவித்தார். ரப்பையா திசையன் போசான்களின் எடை 81 + 5Gev|C2 என்ற செய்முறையால் கண்டுபிடிக்கப்பட்டது. அறி முறைக் கணக்கீட்டுப்படியும் அதன் எடை ஏறக்குறைய இம்மதிப்பையே தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுறைப்படி, 10 திசையன் போசான்களுக்கு ஒரு Z- போசான் என்னும் விகிதத்தில் Z - போசான்கள் உருவாகும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் துவரை ஒரே தொடர் நிகழ்ச்சியில் 5W - போசான் களே உருவாகியுள்ளன. எனவே Z -போசான்கள் இதுவரை உருவாக்கப்படவில்லை என்பதே வல்லுநர் கருத்து.Z-போசான்களும் கண்டுபிடிக்கப்பட்டுவிட் டால் மின்காந்தப்புலம், குறைந்த திறனுள்ள அணு வியல் அகச்செயல் ஆகியவற்றின் தோற்றம் பற்றிய ஐயம் அகன்றுவிடும். எனவே ஒன்றிய புலக்கோட் பாடு உருவாகலாம். ஒன்றுவிட்ட இரட்டைப் பிணைப்பு - ஜான் பாலஸ் நிறைவுறாச் சேர்மங்களில் ஒற்றைப் பிணைப்பும் இரட்டைப் பிணைப்பும் ஒன்றடுத்து ஒன்றாக அமைந் திருந்தால் அத்தகைய பிணைப்புகளுக்கு ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்புகள் (conjugated double bonds) என்று பெயர். ஒன்றுவிட்ட இரட்டைப் பிணைப்பு களைக் கொண்டிருக்கும் சேர்மங்களுக்கு ஒன்றுவிட்ட இரட்டைப் பிணைப்பு ஒலிஃபீன்கள் என்று பெயர். எடுத்துக்காட்டாக 1. 3- பியூட்டாடையீனையும் ஐசோப்ரீனையும் கூறலாம். H,C = CH - CH = CH, 1,3 பியுட்டாடையீன் H,C = C - CH = CH, ஐசோப்ரீன் CH3 இரட்டைப் அனைத்து டையீன் சேர்மங்களும் பிணைப்புக்குரிய வினைகளில் ஈடுபட்டாலும் ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்புச் சேர்மங்களுக்கெனச் சிறப்பு இயல்புகள் உள்ளன. இச்சேர்மங்கள் சேர்க்கை வினைகளில் ஈடுபடும்போது இவற்றின் 1.4 ஆகிய கார்பன் அணுக்களில் சேர்க்கை வினை நிகழ்கிறது. எடுக்துக்காட்டாக 1,3- பியுட்டாடையீன் புரோமினுடன் வினைபுரியும்போது 1, 2-கூட்டுச் சேர் மத்துடன் 1,4 சேர்மமும் கிடைக்கிறது. H,C=CH -CH=CH, + 2Br+ H,C--CH-CH=CH,+H,(-CH=CH-CH, 1 Br Br Br Br ஹைட்ரஜனுடன் வினை. இவ்வினையில் கிடைக் கும் விளைபொருள்களில் 1, 4- கூட்டுச் சேர்மத்தை (2-பியுட்டீன்) எதிர்பாராத துணை விளைபொருள் எனக் கூறலாம். H₁₁ H. H,C=CH-CH=CH, H,C-CH,-CH=CH,+H,C-CH=CH-CH, இவ்வினையை திலே என்பாரின் குறை பிணைப்புக் கொள்கையைக் கொண்டு விளக்கலாம். திலே கொள்கைப்படி இரு கார்பன் அணுக்களைப் பிணைக்க ஒற்றைப் பிணைப்பே போதுமானது. நிறைவுறாக் கார்பன் அணுக்களுக்கிடையே இருக்கும் இரட்டைப் பிணைப்பின் இணை திறன்கள் முழுதுமாகப் பயன் படுத்தப்படுவதில்லை. ஓர் இணை திறனே முழுதுமாகப் பயன்படுத்தப்பட மற்றொன்று எஞ்சி நிற்கிறது. இவ்வாறு எஞ்சியிருக்கும் இணைதிறன் எஞ்சிய அல்லது குறை இணைதிறன் எனப்படும். வை கீழே கொடுக்கப்பட்டுள்ளது போல் புள்ளிக் கோட்டால் குறிக்கப்படும். H.C CH-CH=CH, 1 மையத்தில் இருக்கும் இரு குறை இணைதிறன் களும் தனித்தனியே இருப்பதைவிடக் கீழே கொடுக்கப் பட்டுள்ளது போல் சமன் செய்து கொள்வதாகத் திலே கருதினார். H,C==CH--CH=CH, அல்லது HC-CH=CH=CH, எனவே இக்கொள்கைப்படி 1. 4 - சேர்க்கை களை நன்கு விளக்க முடிகிறது. ஆனால் சேர்க்கை வினைகளை விளக்க முடிவதில்லை. வினை 1,2- 1,3 - பியுட்டாடையீன் மூலக்கூறு போன்ற ஒன்று விட்ட இரட்டைப் பிணைப்புச் சேர்மங்களின் தனித் தன்மைக்கு உடனிசைவுக் கொள்கை மூலம் விளக்கம் தரலாம்.1.3-பியுட்டாடையினில் உள்ள ஒற்றைப் பிணைப்புகளும் இரட்டைப் பிணைப்புகளும் உண்மை யான ஒற்றை, இரட்டைப் பிணைப்புகள் அல்ல. ஏனெனில் 1.3 - பியுட்டாடையீனிலுள்ள ஒற்றைப் பிணைப்பின் நீளம் பிற சேர்மங்களிலுள்ள ஒற்றைப் பிணைப்பின் நீளத்தைவிடக் குறைந்தும், இரட்டைப் பிணைப்பின் நீளம் பிற சேர்மங்களிலுள்ள இரட்டைப் பிணைப்பின் நீளத்தைவிட மிகுந்தும் எனவே 1,3- பியுட்டானிடயீனில் உள்ளது என்று கண்டறியப்பட்டது. அதன் உடனி சைவு அமைப்புகள் கீழே தரப்பட்டுள்ளன. உள்ளன. உடனிசைவு