பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/863

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒனக்ரேசி 837

அல்விகள். 2-5 இதழ்கள், புல்லிகளுக்கு மாறாக அமைந்திருக்கும். அல்லிகள் முழுமையாகவோ நுனி பிளவுபட்டோ காணப்படும். ஃபுக்ஷயா எபெடேலா (F. op tala) லுட்விக்யா பாலிஸ்டரிஸ் (L, Palustris) முதலியவை அல்லிகளற்றவை; திருகு அமைப்புக் கொண்டவை. மகரந்தத்தாள் வட்டம். மகரந்தத்தாள்கள் அல்லி களின் எண்ணிக்கைக்கு ஒத்தோ இரு மடங்காகவோ இருக்கும்; தனித்தவை. இரு சுற்றில் இருந்தால், அல்லிகளுக்கு எதிரில், உள்சுற்றின் மகரந்தக் காம்புகள் குட்டையாக இருக்கும். சிர்சியாவில் 2 மகரந்தத்தாள்கள் உண்டு. ஒழுங்கற்ற லோஃபீரி யாவில் இரு மகரந்தத்தாள்களில் ஒன்று மலடாகி அல்லி போல் உருமாறிவிடும். மகரந்தப்பை குறுக்குத் தடுப்புச் சுவர்கள் மூலம் பல அறைகள் கொண்டது. மகரந்தத்தூள்கள் பெரிய. உருண்டை மூடிகளுடனும் மூன்று துளைகளோடும் யான காணப்படுகின்றன. சூலகம். பொதுவாகக் கீழ்மட்டம். ஆனால் ட்ராபாவில் அறை கீழ் மட்டமாகும். 4 சூலிலைகள் சிர்சியாவில் 1 அல்லது 2 சூலறைகளுண்டு. ஒவ் வொரு சூலறையிலும் 1 அல்லது பல சூல்கள் அச் சொட்டு அல்லதுதொங்கு முறையில் அமைந்திருக்கும். சூல்தண்டு நீண்டிருக்கும். சூல்முடி தலைவடிவ மாகவோ பிளவுபட்டோ இருக்கும். கனி. பலவகைப்படும். பொதுவாகக் காப்சூல் வகை. ஃபுக்ஷயாவில் சதைக்கனியாக(berry) உள்ளது. ட்ராபா கனியில் நிலைத்த புல்லிகள் முள்களாக மாறிய போலிக்கனி (false drupe) அல்லது கொட்டை (nut) வகையைச் சேர்ந்தவை. விதைகள், எண்டோஸ்பர்மற்றவை. எபிலோபியம் விதைகள் காற்று மூலம் பரவுவதற்கு ஏற்றவாறு தூவிகளைப் பெற்றிருக்கும். ட்ராபா காய்கள் முள் களின் உதவியால் விலங்குகள் மூலம் பரவுகின்றன. விதைகள் இருவித்திலைகள் கொண்டிருந்தாலும் அவை ஒத்தவையல்ல. விதை முளைக்கும்போது விதையிலை சிறுத்து விதையுள்ளே இருக்கப் பெரிய வித்திலை ஹைபோகாட்டின் வளர்ச்சியால் லுள்ள துளை மூலம் வெளிக்கொணரப்படுகிறது. வாயி இக்குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய இனங்களாக ஃபுக்ஷயா, லொபீஸியா. சிர்சியா, ஹௌயா ஈனோத்தீரா, க்ளார்க்கியா, கௌரா லுட்விக்யா (ஐஸ்ஸியா) எபிலோபியம் ட்ராபா ஆகியவை உள்ளன. 30 சிற்றினங்களைக் கொண்ட ட்ராபா என்னும் தனிக்குடும்பத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. தென் இந்தியாவில் காணப்படும் ஒனக்ரேசி இனங்கள் லுட்விக்யா. இந்த இனத்தில் ஜஸ்ஸியா என்று குறிப்பிடப்பட்டு வந்த இனத்தின் சிற்றினங்கள் ஒனக்ரேசி 839 அண்மைக்காலத் தாவரப்பெயர் ஆய்வு காரணமாகச் சேர்க்கப்பட்டுள்ளன. லு. அட்சென்டென்ஸ். இதன் மறுபெயர் ஐஸ் ஸியா ரீபன்ஸ். இது குளங்களில் மிதக்கும் செடி யாகும். வெளிர் மஞ்சள் பூக்களைக் கொண்டது. இதை நீர்க் கிராம்பு என்றும் கூறுவர். 3 . ட்ராபாகரு 1. வேர்க்குருத்து 2. தண்டின் குருத்து யிலை 4. பெரிய விதையிலை. 3. சிறிய விதை லு. பெர்ன்னிஸ் (L, perennis). இதன் மறுபெயர் ஐ.பார்விஃப்ளோரா (J. Paroiflora) ஆகும். பொது வாக நெல்வயல்களில் காணப்படும், சிர்சியா. இது சிறிய மென்மையான செடி. மேற்குத் தொடர்ச்சிமலை நீலகிரி, பழநி மலைகளில் 7000 அடி உயரத்தில் வளர்கிறது. ட்ராபா. இது ஒரு தொன்மையான தாவர மாகும். இத்தாவர இனத்தின் காய்கள் சினோஸோ யிக் காலத்தின் டெர்ஷியரி (tertiary) பாறைகளில் எடுக்கப்பட்டன. மேலும் தொல் தாவரவியலிலிருந்து இந்த இனம் வட, மத்திய ஐரோப்பா நாடுகளில் பரவியிருந்ததாகத் தெரிய வருகிறது. ட். நேடன்ஸ் வகை பைஸ்ஃபைனோஸா. (T.Natans Var bippinosa). இதன் மறுபெயர் ட் பைஸ்ஃ னோஸா; இதைத் தமிழில் சிங்காரக் கொட்டை என்று கூறுவர். திருநெல்வேலி, கேரளப் பகுதிகளின் குளங்களில் இதைக் காணலாம். ஈனோத்தீரா. இது மாலைப் பிரிம்ரோஸ் எனப் படும். டிவ்ரிஸ் (Devries) மரபியல் ஆராய்ச்சியின் மூலம் ஈனோத்தீரா லூமார்க்கியா என்னும் தாவரம்