ஓக்டன்ஸ் விண்மீன்குழு தென்துருவத்தைச் சுற்றியுள்ள மிகச் சாதாரணமான ஒரு விண்மீன்குழு ஓக்டன்ஸ் ஓக்டான்ட் (octans octant) ஆகும். வலஏற்றம் 24 மணி நேரமும், நடுவரை தென்விலக்கம் 80° உம் 291 சதுரப்பாகைப் பரப்புமுடையது. இதில் மிகவும் ஒளி மிகுந்த நான்கு விண்மீன்கள் நான்காம் பொலிவுப் பரிமாண முடையவை. ஐந்தாம் பொலிவுப் பரிமாணமுடைய சிக்மா ஓக்டான்டிஸ் (o- octantis) என்னும் விண்மீனைத் தென் துருவத்திற்கு மிக அருகில் நன்றாகக் காணலாம். ஓக்டன்ஸ் குழுவில் உள்ள விண்மீன்கள் அனைத்தும் தென்துருவத்தைச் சுற்றி யுள்ள மறையா விண்மீன்கள் (circunpolar stars) ஆகும். பங்கஜம் கணேசன் ஓக் மரம் இது தாவரவியலில் குவர்கஸ் (Quercus) என்ற இனத்தைக் குறிக்கும் ஃபேகேசி (Fagaceae) குடும்பத் தாவரமாகும். ஓக் மரம் சிந்தூர மரம் என்றும் குறிப்பிடப்படுகிறது. வேர். 450 மொத்தம் உள்ள இனங்களில் கி. மொண்டானா? வேர்கஸ் பிலாஸ் ரூப்ரா.
பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/867
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை