844 ஓக் மரம்
844 ஓக் மரம் இந்தியாவில் மட்டும் 23 சிற்றினங்கள் உண்டு. வடகண்ட மிதவெப்ப நாடுகளைத் தாயகமாகக் கொண்ட இவ்வினம், மலேசியா வரை பரவியுள்ளது. இவ்வினத்தைச் சேர்ந்த தாவரங்கள் பெரும்பாலும் மரமாகவோ செடியாகவோ வளரும் தன்மை பெற்றவை. பெருத்த அடிமரத்தையும், பரந்த கிளைகளையும் 150 அடி உயரம் வளரும் தன்மை யையும் பெற்றுள்ளன. மேலும் ஓக் மரம் ஐரோப்பியர் களால் நீண்ட ஆயுளுக்கும் வலிமைக்கும் யாகச் சொல்லப்படுவதுண்டு. உவமை ஒக்கின் பெரும்பாலான சிற்றினங்கள் இலையுதிர் வகையைச் (deciduous) சேர்ந்திருந்தாலும், சில என்றும் பசுமைத் தன்மை பெற்றுள்ளன. இவ் வகையை உயிர் ஒக் (live oak) என்று கூறுவர். இலை. தனித்தவை முழுமையானவை அல்லது பிளவுபட்டவை. இலையடிச் செதில்கள் சிறுத்துக் குருத்துப்பாதுகாப்புக்காக மட்டும் செயல்படுகின்றன. மாற்றிலையடுக்கு அமைப்புண்டு. மலர். ஒருபால் பூக்கள். ஆண் பெண் பூக்கள் ஒரே மரத்தில் காணப்படுவதால், இது ஓரில்ல வகையாகும். மஞ்சரியில் மலர்கள் தனித்தவை, பூக் காம்புச் செதில்களுடன் இருக்கும். ஆண், பெண் மலர்களில் புல்லி வட்டம் மட்டுமே காணப்படுகிறது. ஆண் மலரில் புல்லி வட்டம் 6, இணைந்த இதழ் களைப் பெற்றிருக்கும். மகரந்தத் கொண்டவை. தாள்கள் 6-8. நீண்ட காம்பு காற்று மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறும். பெண் பூக்களின் அடியில் எண்ணி லடங்காச் சிறிய செதில்கள் காணப்படும். 1.ஆண் பூ. 2. பெண் பூ. சூலகம். கீழ்மட்டத்தில் 3 சூலிலை கொண்டது. ஒவ்வொரு சூலறையிலும் இரு சூல்கள் உண்டு. சூல் முடி மூன்றாகப் பிளவுபட்டு வெளியே நீண்டிருக்கும். காய், அக்கின் வகையைச் (achene) சேர்ந்தது. நிலைத்த செதில்கள் கெட்டியாக மாறி ஒன்றோ டொன்று இணைந்த கிண்ணம்போல் மாறிவிடும். இதைக் கப்யூல் (cupule) என்பர். இலையின் உரு மாற்றம் என்றும் கருதுவர். கப்யூலோடு கூடிய காயை ஏகார்ன் (acorn) என்ற பொதுப் பெயரால் குறிப்பிடுவர். காயில் ஒரே ஒரு விதைதான் உண்டு. விதைகள் முளைசூழ்தசை (endosperm) அற்றவை. வகைப்பாடு. ஓக் சிற்றினங்களை மூன்று குழுக்க ளாகப் பிரித்துள்ளனர். அவை, அ. ல்யூகோபலாவஸ் . 4. குவர்கஸ் கிளை, 2. ஆண்மஞ்சரி. காய் - எகார்ன்