பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/869

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓசிப்போடா 845

(Leucobalanus) வெள்ளை ஓக், எரித் ரோபலானஸ் (Erythrobalanus) சிவப்பு ஓக், சைக்ளாபலானஸ் (Cyclohalanus) என்பன. முதல் வகைகளின் கப்யூல்களில் செதில்கள் சுழல மைப்பில் இருக்கும். மூன்றாம் வகையில் செதில்கள் வட்டமைப்பில் இருக்கும். மேலும் வெள்ளை ஓக் இலைகளின் நுனி முள்களற்றது. காய்கள் இனிக்கும். சிவப்பு, கறுப்பு ஓக் இலைகளின் நுனி முள்ளோடு கூடியது. காய்கள் துவர்க்கும். பயன். ஓக் மரத்தின் அடிப்பகுதியைக் கொண்டு தடி, பலகை, கடைசல் செய்யலாம். சில சிற்றினங் கள் விறகு, எரிகரி, கால்நடைத் தீவனங்களாகப் பயன்படுகின்றன. ஒக் நிழல்தரும் சிறந்த சாலை மரமாகும். பூச்சியோடு தொடர்பு கொண்ட ஓக் மரப்பகுதிகளைக் கால்கள் (galls) என்பர். காய்கள் போன்று காணப்படும் இவற்றை கால்கள் அல்லது ஓக் ஆப்பிள்கள் என்பர். க்கால்களில் டேனின் வேதிப்பொருள் உள்ளது. டேனினைக் கேலிக் அமிலம் அல்லது கேலக்டோனிக் அமிலம் என்பர். கேலிக் அமிலம் கால்களில் 50-70% உள்ளது. இதில் கேலிக் அமிலம் (gallic acid) எலாஜிக் அமிலம், பசை மாவுப்பொருள், ஓக் சர்க்கரை, நறுமண எண்ணெய் ஆகியவை உண்டு. இதை வயிற்றுப்போக்கு, மூலம் போன்ற நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்துவ துண்டு. மேலும் இம்மரத்தின் பட்டை, கட்டை, கால்களிலிருந்து எடுக்கப்படும் டேனின் தோல் பதனிடல், செருப்பு, வண்ணப்பொருள், மை தயாரிக்கப் பயன்படும். ஆசியாவில் வளரும் சிற்றினங் களின் இலைகள் பட்டுப்பூச்சிக்கு உணவாகின்றன. அமெரிக்க, ஐரோப்பிய ஓக் மரங்கள் மிகவும் உறுதியானவை. நீண்ட நாள் உழைக்கக்கூடியவை. பலகைகளை நீராவி மூலம் எவ்வகையிலும் வளைத்து அலங்காரப் பொருள்கள் செய்வதற்கும், கப்பல் கட்டு தல், கட்டிடங்கள் கட்டுதல், கூரை வேய்தல் போன்ற வேலைகளுக்கும் பயன்படுத்தலாம். வெளிநாடு களில் 40 மீ உயரமும் 520 செ.மீ. சுற்றளவும் கொண்ட பெரும் மரங்களும் உள்ளன. உலகிலேயே இங்கிலாந்து ஒக் மரங்களே சிறந்தவை. இம்மரத் தைக் கூரையாக்கி 1399 இல் கட்டப்பட்ட வெஸ்ட் மினிஸ்டர் ஹால் 1919 இல் தான் பழுதுபார்க்கப் பட்டது. 1635 இல் கட்டப்பட்ட கடலின் தங்கம் என்னும் கப்பல் 47 ஆண்டுகள் கழித்து உடைந்த போது அதிலிருந்த ஓக் மரப்பலகைகள் நல்ல நிலை யிலேயே இருந்தன. ஸ்பெயின். போர்ச்சுகல் ஆகிய இடங்களில் உள்ள ஓக் மரங்களிலிருந்து தக்கைகள் (corks) செய்யப்படுகின்றன. இந்தியாவில் ஏறத்தாழ 40 வகையான ஓக் மரங்கள் உள்ளன. பெரும்பாலானவை அசாம். மணிப்பூர், சிட்டகாங், இமயமலைத்தொடர் போன்ற உயரமான் பகுதிகளில் வளர்கின்றன. கிழக்கு ஓசிப்போடா 845 இமயத்தில் 10 வகை ஓக் மரங்களும் மேற்கு இமயத் தில் 5 வகைகளும் வளர்கின்றன. கூட்டங்கூட்ட மாகவோ. பைன் ஃபிர், ஸ்ப்ரூஸ் போன்ற மரங் களுடன் கலந்தோ காணப்படுகின்றன. ஆனால் வை மேனாட்டம் ஓக் மரங்களைப் போல் உறுதி யானவையல்ல. இவை பக்குவப்படுத்தும்போதே வளைந்தோ. விரிசல் அடைந்தோ காணப்படும். மரங்கள் பெரிய அளவிற்கு வளர்வதில்லை. பெரும் பாலும் இம்மரங்கள் பயன்படு எரிபொருளாகப் கின்றன. இலைகள் கால்நடைகளுக்குச் சிறந்த தீவனமாகும். சிலவகை மரங்கள் மரக்கூழ் தயாரிக் கவும் பயன்படுகின்றன. இந்திய ஓக் மரங்கள். இந்தியாவில் இமயமலை யின் கீழ்ப்பகுதியில் கடல் மட்டத்திற்கு மேல் 2000மீ உயரம் வரையுள்ள டங்களில் பான்ஒக் (Ban oak) 2800 மீ மரங்களும் வரை பச்சை ஓக் அல்லது மொரு ஒக் (moru oak) மரங்களும், அதற்கு மேல் 3700 மீ வரை கர்ஷு ஓக் (Kharshu Oak) மரங் களும் காணப்படும். மேலும் கம்பள ஓக் (woolly oak) ஹாம் ஓக் (halm oak) திங்கியின் ஓக், காசியா (kasia), பானி (bani), பக் (buk), அர்காலா (arkaola, போன்ற பல இன ஓக் மரங்களும் இந்தியாவில் வளர்கின்றன. நாற்று மூலமாகவோ, விதைத்தல் மூலமாகவோ ஒக் மரங்களை வளர்க்கலாம். டார்ஜிலிங், நைனிடால், டேராடூன், முசௌரி போன்ற மலைப் பகுதிகளில் அழகு தரும் மரங்களாக இவை நடப் பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உதகமண்டலம். குன்னூர் ஆகிய இடங்களில் உள்ள தாவரத் தோட்டங்களில் இம்மரங்களைக் காணலாம். ஓசிப்போடா . தி. ஸ்ரீகணேசன் -சா. விஸ்வநாதன் பேய் நண்டுகள் எனப்படும் இந்த நண்டுகள் ஓட்டுடலிகள் வகுப்பைச் சார்ந்த ஓசிப்போடிடே (ocypodidae) குடும்பத்தைச் சார்ந்தவை. கடற்கரை களிலும் உப்பளங்களின் கரைகளிலும் இவை வாழ் கின்றன. இதில் ஏறத்தாழ 4,500 க்கும் மேலான இனங்கள் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். வளை களில் வாழும் பேய் நண்டுகள் ஓதஇடைப் பகுதியின் (intertidal zone) உயர்ஒதப் பகுதியான மணற்பாங் கான கடற்கரைப் பகுதிகளில் காணப்படுகின்றன. இவ்விடங்களில் காணப்படும் வை மணற்குன்று களில் வளை தோண்டி வாழ்கின்றன. பேய் நண்டுகள் ஏறத்தாழ 1-2 மீட்டர் ஆழம் வரையுள்ள வளைகளில் வாழ்கின்றன. ஓசிப்போடா