எக்ஸ் கதிர் தூள்முறை 63
180° எக்ஸ் கதிர் - தூள்முறை 63 விழுகதிர் நுண்படிகங்கள் எஞ்சிய கதிர் இடப்பக்கம் 90° பா 90° (வலப்பக்கம் 180 படம் 2. மாறு பொருத்தப்பட்டுள்ளது. ஒரு நீண்ட ஓலை வடிவப்புகைப்படச்சுருள், உருளை வடிவப் புகைப் படப்பெட்டியின் உட்சுவர் ஓரமாகப் பதிந்திருக்கு மாறு செய்து கொள்ளப்படுகின்றது. இதனால் 0° முதல் 180° கோணம் வரையில் விலகிச் செல்லும் அனைத்து எக்ஸ் கதிர்களையும் பதிவு செய்து கொள்ள முடியும். ஒரு குறிப்பிட்ட நேரம் வரைபுகைப் படச்சுருளை விலகு எக்ஸ் கதிர்களின் தாக்குதலுக்கு ஆளாக்கி, அவற்றை நன்கு பதிவு செய்து கொள்ளலாம். பின்னர் புகைப்படச் சுருளை வெளியே எடுத்துத் துலக்கினால், படம் 2 இல் காட்டப்பட்டது போன்ற மைய வட்டத்துண்டுக் கோடுகள் காணப்படுகின்றன. நுண்படிகங்களை ஊடுருவிச் செல்லும் எஞ்சிய எக்ஸ் கதிர்கள் வெளி யேறிச்செல்வதற்குவட்டத்தின் விட்ட மறுமுனையில் புகைப்படச் சுருளில் ஒரு துளை இடப்பட்டுள்ளது. இதனால் எஞ்சிய எக்ஸ் கதிர்கள் சிதறலுக்கு உள்ளாக்கப்பட்டுப் புகைப்படச் சுருள் மொத்த மாகக் கருமையூட்டஞ் செய்யப்படுவது தவிர்க்கப்படு கின்றது. படம் 2 இல் காட்டப்பட்டுள்ளதுபோல, வட்டப் பகுதியின் வளைவு ஆரம், விலகு கோணம் 90° ஐக் கடக்கும்போது குறி மாறுதலுக்கு உள்ளாகின்றது. என்பதைப் புகைப்படத்திலிருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது. விலகு கோணம் 90°ஐ எட்டிச் செல்லச் செல்ல வட்டப் பகுதியின் வளைவு ஆரமும் உயர் கிறது. சரியாக 90 டிகிரியில் நேர் கோடுகள் காணப் படுகின்றன. அதன் பிறகு வளைவு ஆரத்தின் குறி மாறுதலுக்கு உட்பட்டுக் காணப்படுகின்றது. அதா வது முன் பக்கத்தில் உள்ள விளிம்பு விளைவுப் வடிப்பான் R 20 நுண்படிகங்கள் உருளை வடிவப் புகைப் படப்பெட்டி படம் 3. பாங்கம். விடுகதிரை மையமாகக் கொண்ட வட்டங் களாகவும் பின் பக்கத்தில் உள்ள விளிம்பு விளைவுப் பாங்கம் விழுகதிரை மையமாகக் கொண்ட வட்டங் களாகவும் உள்ளன. இவ்விளிம்பு விளைவுப் பாங்கத்தின் அமைப்பி லிருந்தும், அவற்றின் ஒப்புமைச் செறிவுகளிலிருந்தும், அதற்குச் க் காரணமான படிகத்தின் கட்டமைப்புப் பற்றிய உண்மைகளை அறிந்துகொள்ள இயலும்.