பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/870

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

846 ஓசிப்போடா

846 ஓசிப்போடா இனத்தைச் சார்ந்த நண்டுகள் மணல் நண்டுகள் என்றும் கூறப்படுகின்றன. ஓசிப்போடாவில் மற்றோர் இன நண்டு உப்பங்கழிகளின் கரைப்பகுதிகளில் வாழ் கிறது. இந்த நண்டுகள் மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளையே விரும்புகின்றன. இந்தியக் கடற்கரைப் பகுதிகளில் ஓசிப்போடாவின் ஐந்து இனங்கள் வாழ் கின்றன. சு இரவில் நடமாடும் பழக்கமுடைய இந்த நண்டுகள் அனைத்துண்ணிகள் (omnivorous) ஆகும். ஒரு வகை ஓசிப்போடா கடல் உயர் ஓதத்தின்போது மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறது. கடல் ஓதம் இறங்கும்போது, மணலில் புதைந்து, கால்களைப் பக்கவாட்டில் பரப்பி மண்ணோடு தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது. ஓய்வு எடுத்துக்கொள்ளும் போது கால்களைப் பக்கவாட்டில் பரப்பிப் பணிவான நிலையில் காணப்படுகிறது. பகையினத்தைத் தாக்கும் சமயத்தில் உடம்பையும் கால்களையும் தரையிலிருந்து உயர்த்திக் கண்களைச் செங்குத்தாக வைத்துக் கொண்டு பகையினத்தை நோக்கிப் பாய்ந்து செல் கிறது. தன்னினத்தைக் கூட உண்ணும் பழக்கம் இவற்றிற்கிடையே காணப்படுகிறது. மாலை நேரத் திலும், இரவிலும் விடியற்காலையிலும் இரைதேடிச் செல்கின்றன. ஓதம் உயரும்போது வளைக்குள் சென்று வளை வாயிலை அடைத்துக்கொள்கின்றன. ஓதம் இறங்கும் வரை வளைக்குள்ளேயே கின்றன. வளை தோண்டுவது, அதைப் பேணுவது போன்ற செயல்கள் தாழ் ஓதத்தின்போது (low tide) ருக்