பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/871

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓசிப்போடா 847

நடைபெறும். பேய் நண்டு, நிலம் நீர் இரண்டிலும் நன்கு இயங்கும் தன்மை கொண்ட நண்டினத்திற்கும், நிலத்தில் மட்டும் வாழும் நண்டினத்திற்கும் இடைப் பட்ட ஆனால் மாறுபட்ட தன்மையைக் கொண்ட இனமாகும். பல் நண்டினங்கள் கடலிலும், சில சேற்றுப் பகுதிகளிலும், சில உப்பங்கழிகளிலும், சில நன்னீர் நிலைகளிலும் காணப்படுகின்றன. இவற்றில், சில நிலம் நீர் ஆகிய இரு சூழலிலும் இயங்கவல்லன வாகவும், சில நீர்நிலைகளை விட்டு மிகு தொலைவில் உள்ள தரைப்பகுதிகளிலும் வாழும் தன்மையுடையன வாகவும் உள்ளன. தரைப்பகுதிகளில் வாழும் நண்டினங்கள், அவற்றின் முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வெளிவரும்போது உப்பங்கழி அல்லது -லுக்குச் சென்று குஞ்சுகளை நீரில் வெளியேற்றி விட்டு உறைவிடங்களுக்குத் திரும்பிச் செல்கின்றன. கட பேய்நண்டுகள் சிறு பூச்சிகளையும், மட்கிய உணவுப் பொருள்களையும் உண்கின்றன. இந்தியக் கடற்பகுதி, பசுபிக் கடற்பகுதிகளில் காணப்படும் ஓசிப்போடா செராட்டாப்தால்மஸ் (Ocypode ceratoph thalmus) அவற்றின் பாதங்களின் உதவியால் சிறு ஈக்களைப் பிடித்து உண்கின்றன. உடலை மூடி யிருக்கும் மேல்தோடு (carapace) குறுக்குவாக்கில் நீள்வட்ட வடிவம் அல்லது ஏறத்தாழச் செவ்வக வடிவத்தைக் கொண்டது. சில இனங்களின் மேல் தோடு சிறு துகள்கள் போன்றும், சில இனங்களில் பழுப்பு திறத்தோடும், சில வற்றில் அடர் சிவப்பு நிறத்தோடும் காணப்படும். ஐந்து இணைக்கால்கள் காணப்படுகின்றன. ஓசிப்போடாவின் மேல்தோட்டின் குறுக்களவு ஏறத்தாழ 3.75-5 செ.மீ காணப்படு கிறது. முதல் இணைக்கால்கள் இடுக்கிக் கால்களாக (chelipeds) உள்ளன. அடிவயிற்றுப்பகுதி பரந்த மேல் தோட்டிற்குக் கிழேயுள்ள கிழேயுள்ள தாழ்வான ஒரு குழிந்த பகுதியில் மடித்து வைக்கப்பட்டுள்ளது. மேலிருந்து பார்க்கும்போது அடிவயிற்றுப்பகுதி மடித்து வைக்கப்பட்டுள்ளதால், இரால் மீனில் காணப்படுவது போன்று வயிற்றுப்பகுதி நீண்டு காணப் படுவதில்லை. பெண் இப்பகுதி ஆண் இனங்களில் ஒடுங்கியும் னங்களில் அகன்றும் காணப்படுகின்றது. ஆண், பெண் இன நண்டுகளை அடையாளங்காண து உதவும். பெண்ணினத்தின் அடிவயிற்று உட்பகுதியில் நான்கு இணை வயிற்றுக்கால்கள் காணப்படுகின்றன. இவ்வுறுப்புகள் முட்டைகளைத் தாங்கிக் கொள்ளவே பயன்படுகின்றன. வயிற்றுக்கால்கள் ஒருவித நீர்மத் தால் ஒட்டப்பெற்றுக் கொத்தாகக் காணப்படுகின் றன. முட்டையிலிருந்து இளம் உயிரிகள் (larvae) வெளிவரும்வரை முட்டைகளை இவ்வுறுப்புகள் தாங்குகின்றன. வயிற்றுப்பகுதி மடித்துவைக்கப் பட்டுள்ளமையால் இந்த உறுப்புகள் மேல்தோட்டால் மூடப்பட்டுப் பாதுகாப்பாக உள்ளன. ஓசிப்போடா 847 ஆண்களின் அடிவயிற்றுப் பகுதியில் இவ்வுறுப்பு களில் ரெண்டு ணை மட்டுமே காணப்படுகின்றன. இவை குச்சி போன்று மாறுபட்டுள்ளன. இனச் சேர்க்கையின்போது விந்து, பெண் நண்டின் உடம் பிற்கு இடமாற்றம் அடைய இவை பயன்படுகின்றன. பக்கத்திற்கு ஒன்றாகக் காணப்படும் கண்கள் ஒவ்வொன்றும் நீளமான காம்பினால் (peduncle) ங்கப்பட்டுள்ளன. காம்பு, விழிமுள்தோலுக்கு நீண்டு திறக்கிறது. தா பொதுவாக அனைத்து நண்டுகளும் கால்களின் உதவியால் வளை தோண்டி வாழ்கின்றன. பேய் நண்டு வளை தோண்டும்போது வெளியேற்றப்படும் மண், வளையின் நுழைவாய்க்கருகில் சிறுசிறு உருளைகளாகக் குவிக்கப்படும். வளை நேராகவும், ஆழமாகவும் உள்ளது. முதிர்ந்த நண்டுகள் மணல் குன்றுகளிலும், முதிர்ச்சியடையா, பாத நண்டுகள் அலை தொடும் தரைப்பகுதியிலும் வளை தோண்டுகின்றன. ஈரத்தன்மையுடைய மணல் வரும்வரை விளை தோண்டப்படுகிறது. ஈரத்தன்மை வளையின் ஆழத்தை உறுதிப்படுத்துகின்றது. செங்கடற் கரைப்பகுதியில் காணப்படும் ஓசிப் போடோ சரட்டன் (0. saraton) எனும் இனத்தில் ஆண் நண்டுகள் தம் வளை முகப்பில் மணல் முகடு ஒன்றைக் கட்டும். இதிலிருந்து செல்லும் பாதை ஏறத்தாழ 40 செண்ட்டி மீட்டருக்கப்பால் உள்ள வளையில் முடிவடையும். பெண் நண்டுகள் இம்மணல் முகட்டால் கவரப்பட்டு வளைக்குள் செல்கின்றன. பொதுவாக ஊர்ந்து சென்றாலும் சில நண்டுகள் நீந்தியும் செல்லக்கூடியவை. இவ்வித நண்டு களுக்குப் பின் வரிசை ணைக்கால்கள் துடுப்புகள் போன்று பரந்து தட்டையாக அமைந்துள்ளன. பேய் நண்டுக்கு இவ்வித அமைப்பு இல்லை. இது மிக வேக மாக நொடிக்கு 1. 6 மீ அளலில் பக்கவாட்டிலேயே ஓடுகிறது. விரைவாக ஓடும்போது உடலைத் தரைக்கு மேலே எழுப்பிக் கொண்டு இரண்டு அல்லது மூன்று இணைக்கால்களை மட்டுமே பயன்படுத்தும். ஓடும் போது பின்னுள்ள கால்கள் இழுத்துக்கொண்டு வர நண்டு ஓடுகிறது. இந்த இருவித அசைவு களும் உடலின் சுமையைத் தாங்கிச் செல்லும்போது உடலைத் திடீரென 180' திருப்புகிறது. இந்தநிலை யில் முன் செல்லும் கால்கள் பின்னும், பின்னுள்ள கால்கள் முன்னும் திடீர் மாற்றம் பெறுகின்றன. இருப்பினும். ஓட்டத்தில் இடையூறோ திசைத் திருப்பமோ ஏற்படுவதில்லை. இம்மாற்றங்கள் உடலின் சுமையைக் கால்கள் மாறி மாறித் தாங்க உதவும். நண்டுகள் செவுள் மூலம் சுவாசிக்கின்றன. நீரில் வாழும் நண்டுகளின் செவுள்களை விடப் பேய் நண்டு களின் செவுள்கள் உருவத்திலும் எண்ணிக்கையிலும் சிறியவையாகக் காணப்படுகின்றன. நீர் செவுள்