ஓசோன் 849
ஓசோன் 849 பட்டுள்ளது. ஆனால் வெள்ளீய, மின் இணைப்பிற்குப் பதிலாக இக்கருவியில் நீர்த்த சல்ஃப்யூரிக் அமிலம் இடம் பெறுகிறது. சல்ஃப்யூரிக் அமிலத்தில் தொங்க விடப்பட்டிருக்கும் தாமிரக் கம்பிகள் தூண்டு சுருளுடன் படத்தில் காட்டியவாறு இணைக்கப்படும். இடைவெளியில் செலுத்தப்படும் ஆக்சிஜன், பொறி யற்ற மின்பாய்ச்சலால் 25% அளவு ஓசோனாக மாற்றப்படுகிறது. ஓசோனாக்கப்பட்ட காற்று கழிவு- அலுமினியம் உருளை காற்று மேற்புறமுள்ள குழாய் வழியே வெளியேறு கிறது. ஓசோனைப் பெருமளவில் தயாரிக்கும் ஒரு கருவி யில் ஒரு பெட்டி கண்ணாடித் தட்டுகளால் பிரிக்கப் பட்டிருக்கும். அதில் உலோக வலைகள் செங்குத் தாக வைக்கப்பட்டுள்ளன. பெட்டியின் அடிப்புறத் திலிருந்து செலுத்தப்படும் காற்று, உலோக களுக்கு இடையே ஏற்படும் பொறியற்ற மின்பாய்ச்ச லால் பகுதி அளவில் ஓசோனாக மாற்றப்படுகிறது. வலை புற ஊதாக் கதிர்கள் ஆக்சிஜன் வழியே பாய்ச் சப்படுகையில், ஆக்சிஜன் மூலக்கூறுகள் ஒளி வேதிச் சிதைவு அடைந்து, ஆக்சிஜன் அணுக்களாக மாறு கின்றன. 0, ہے 2 [O] இந்த ஆக்சிஜன் அணுக்கள், சிதைவடையா மூலக் கூறுகளுடன் மோதுகையில் ஓசோன் உண்டாகிறது. 02 O₁ நீர்- காற்று கண்ணாடி சீமன் - ஹால்ஸ்கி ஓசோனாக்கி ஓசோன் தொழில் முறைத் தயாரிப்பு. ஓசோனைப் பெருமளவில் தயாரிக்க ஸீமன் - ஹால்ஸ்கி ஓசோ னாக்கியைப் பயன்படுத்துகின்றனர். இக்கருவியில் ஓர் இரும்புத்தொட்டி மூன்று பகுதிகளாகப் பிரிக்கப் பட்டிருக்கும். இருபுறமுள்ள பகுதிகளில் கண்ணாடித் தட்டுகளின் மேல். ஆறு அலுமினியத் தண்டுகள் செங்குத்து நிலையில் வரிசையாகப் பொருத்தப் பட்டுள்ளன. அலுமினியத் தண்டுகளைச் சுற்றியிருக்குமாறு பீங்கான் குழாய்கள் வைக்கப்படுகின்றன. கருவியின் மையப் பகுதியைக் குளிர்ந்த நிலையில் வைத்திருப்ப தற்காகக் குளிர்ந்த நீர்ச் சுழற்சி இருக்கும். அலுமினி யத் தண்டுகளின் மின்னழுத்தம் 8000 - 10000 வோல்ட் அளவுக்கு உயர்த்தப்படுகிறது. இதனால் டைவெளியில் ஏற்படும் பொறியற்ற மின்பாய்ச்சல் அதன் வழியே செலுத்தப்படும் காற்றைப் பகுதி அளவில் ஓசோனாக மாற்றுகிறது. ஓசோன் கலந்த அ. க. 6-54 உயர் மின்னழுத்தம் கொண்ட மின்னோட்டத்தால், 50°C இல் உள்ள பெர்குளோரிக் அமிலக் கரைசலை மின்னாற்பகுத்தால் 20% அளவில் ஓசோன் கலந்த ஆக்சிஜன் கிடைக்கும். இயல்பு. நிறமற்ற வளிமமான இவ்வளிமம் குறிப் பிட்டதொரு நெடி உடையது. ஆக்சிஜனைவிட நீரில் பத்து மடங்கு மிகுதியாகக் கரையக் கூடியது. நீர்ம நிலையில் கரு நீலநிறம் கொண்ட இதன் கொதி நிலை - 112.4 C. நீர்ம ஓசோன் காந்த ஈர்ப்புத் தன்மை கொண்டது. திண்ம நிலையில் ஊதா நிறப் படிகங்களாக ஓசோன் அமையும். காற்றை விடச் சிறிது கனமானது. சிறிதளவில், மூச்சுக் காற்றுடன் உட்சென்றால் வாந்தியும், மயக்கமும் விளைவிக்கும் இது பேரளவில் உட்சென்றால் மரணத்தை விளை விக்கும். வேதிப் பண்புகள். ஒசோன் தீவிரமாக வினைபுரி யும் திறன் கொண்டது. இது ஓர் ஆக்சிஜனேற்றி ஆகும். இது ஒரு நிலையற்ற வளிமம். சாதாரண வெப்பநிலையில் தூய ஓசோன் வெடி ஒலியுடன் விரைந்து சிதைகிறது. ஓசோன் கலந்த ஆக்சிஜன் மெதுவாகச் சிதைகிறது. 2 O →3 0, தங்கம், பிளாட்டினம், மாங்கனீஸ் டைஆக்சைடு போன்றவை சிதைவடைதலை ஊக்குவிக்கின்றன. இது ஆக்சிஜனேற்றம் செய்யப்படாத பொருளைக் கூட சாதாரண வெப்பநிலையிலேயே ஆக்சிஜனேற்றம் செய்கிறது.