850 ஓசோன்
850 ஓசோன் [0] + 0 + 80 ஓசோன் மூலக்கூறு ஒவ்வொன்றும் எளிதாகச் சிதைவடைவதால் உண்டாகும் தீவிர அணுநிலை ஆக்சிஜன் (nascent oxygen) ஆற்றல் மிக்கதாகும். அனைத்துப் பொருள்களையும் ஆக்சிஜனேற்றம் செய்யும் திறன் இதற்கு உள்ளது. இது பொட்டாசியம் அயோடைடை அயோடினாகவும், ஹைட்ரஜன் சல்ஃபைடை சல்ஃப்யூரிக் அமிலமாகவும், ஹாலைடு களை ஹாலஜன்களாகவும் ஆக்சிஜனேற்றம் செய் ஓசோன் பாதரசத்தை ஆக்சிஜனேற்றம் கிறது. செய்து பாதரச ஆக்சைடை உண்டாக்குகிறது. இதனால் பாதரசத்தின் பிறைத்தளம் மறைகிறது. பாதரசம் கண்ணாடியின் பரப்பில் ஒட்டுகிறது. இதற்குப் பாதரசம் திரியாதல் (tailing of mercury) என்று பெயர். ஓசோன் ஆக்சிஜனேற்றும் காரணியாக இருப் பினும் சில வினைகளில் ஒடுக்கியாகவும் (reductant) செயலாற்றுகிறது. இது பெராக்சைடுகளையும். சில்வர் ஆக்சைடையும் ஒடுக்குகிறது. சேர்க்கை வினைகள். ஓசோன் நிறைவுறாக் கரிமச் சேர்மங்களுடன் சேர்ந்து சேர்க்கைப் பொருள்களை உண்டாக்குகின்றது. இதற்கு ஓசோனைடுகள் என்று பெயர். இவை வெடிக்கும் தன்மை உடையவை. R-CH - CH - R + O3 - - R - CH - CH - R - எத்திலீன் சான்றாக எத்திலீனுடன் சேர்ந்து ஓசோனைக் கொடுக்கிறது. இதை நீராற்பகுத்தால் ஃபார்மால்டிஹைடும் ஹட்ரஜன் பெராக்சைடும் கிடைக்கின்றன. நிறம் நீக்கி, ஓசோன் ஆக்சிஜனேற்றக் காரணியாக இருப்பதால் தாவர நிறங்களை ஆக்சிஜனேற்றம் அடையச் செய்து நீக்குகிறது. போன்ற பயன். ஓசோன் ஒரு நல்ல பூச்சிக் கொல்லியாகும். எனவே, இது குடிநீரைத் தூய்மைப்படுத்தப் பயனாகிறது. நெரிசல் மிகுந்த திரைப்பட அரங்கு, சுரங்கப் பாதை ஆகிய இடங்களில் காற்றைத் தூய்மைப் படுத்தவும் ஓசோன் பயன்படு கிறது. எண்ணெய், தந்தம், மெழுகு பொருள்களை வெளுப்பாக்கவும், வேனிலின் என்னும் நறுமணப் பொருள் தயாரிக்கவும். செயற்கைக் கற்பூரம் தயாரிக்கவும், செயற்கைப் பட்டு தயாரிக்க வும் பயன்படுகிறது. மேலும் கரிம மூலக்கூறுகளில் உள்ள இரட்டைப் பிணைப்பின் எண்ணிக்கைகளையும் அவற்றின் அமைப்பிடங்களையும் தீர்மானிக்க உதவு கிறது. நீர்ம நிலையில் இது விண்வெளிக் கலங்களில் எரிபொருளாகப் பயன்படுகிறது. ஓசோனின் வாய்பாடு. ஆக்சிஜன் வழியே பொறி யற்ற மின்னூட்டத்தைச் செலுத்தி ஓசோன் பெறப் படுவதாலும், ஓசோனை வெப்பப்படுத்தினால் ஆக்சிஜன் மட்டுமே கிடைப்பதாலும், ஓசோன் என்பது ஆக்சிஜன் அணுக்களால் மட்டுமே ஆனது என்பது தெளிவாகிறது. சம் கன சோரட் ஆய்வு. நீரின் மேல் கவிழ்த்து வைக்கப் பட்ட இரு அளவுள்ள, அளவிடப்பட்ட கண்ணாடிக் குடுவைகளில், சம கன அளவு ஓசோன் எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஒரு குடுவைக்குள் சிறிது டர்பன்டைன் சேர்க்கப்படுகிறது. ஓசோன் அதில் கரைவதால் வளிமத்தின் கன அளவு குறைகிறது. மற்றொரு குடுவை சூடேற்றப்படுகிறது. இதில் உள்ள, ஓசோன் ஆக்சிஜனாகச் சிதைவு அடைவதால், வளிமத்தின் கன அளவு மிகுதியாகிறது. இரண்டாம் குடுவையின் அதிகரித்த கன அளவு, முதற் குடுவையில் குறைந்த கன அளவில் பாதியாக இருப்பதால். இரண்டு பங்கு ஓசோன் சிதைந்து 3 பங்கு ஆக்சிஜன் பெறப்பட்டிருத்தல் வேண்டும். அவோகாட்ரோ கொள்கைப்படி இரண்டு ஓசோன் மூலக்கூறுகள் சிதைந்து மூன்று ஆக்சிஜன் மூலக்கூறுகளைக் கொடுக்கின்றன. 20, 30, எனவே, ஓசோனின் வாய்பாடு 0. என்பதாகும். மேலும் ஓசோனின் ஆவி அடர்த்தி 24 என்பதாக ஆய்வு மூலம் அறியப்படுவதால், மூலக்கூற்று எடை 48 ஆகும். இது 0, என்னும் ஓசோனின் வாய்பாட்டை உறுதிப்படுத்துகிறது. ஆக்சிஜன் எண் 1.28 A 116,5 அணுக்களின் பிணை நீளம் 1.28 A.இந்நீளம் ஒற்றைப் பிணை, இரட்டைப் பிணை நீளங்களுக் கிடைப்பட்டதாக இருப்பதால், ஓசோனின் அமைப்பு கீழ்க்காணும் முக்கிய இரு உடனிசைவு அமைப்புகளின் கலப்பாக இருத்தல் வேண்டும்.
- 0
ற்கு 0:
- ọ
- 0: