பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/877

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓட்ஸ்‌ 853

சிற்றினங்களுண்டு. இவை பெரும்பாலும் மித வெப்ப நாடுகளிலும், வெப்ப நாடுகளின் மலைப்பகுதி யிலும் பயிராகின்றன. இந்தியாவில் 14 சிற்றினங்கள் வங்காளம் முதல் சிந்து நதி வரை வடக்கே இமய மலை வரை பரவிக் காணப்படுகின்றன. பொதுவாக வணிகத்தில் ஓட்ஸ் என்பது அவினா சடைவா (avena sativa) என்னும் சிற்றினத்தையே குறிக்கும். இது வட அமெரிக்கா, சோவியத் ஒன்றியக் குடி யரசின் குளிர் மித- வெப்பப் பகுதிகளில் பயிரிடப் படுகிறது. இந்த இனத்தில் காணப்படும் சிற்றினங்களில் சில கால்நடைகளுக்குத் தீவனமாகவும் பயிருக்குக் களையாகவும் இருக்கும். மற்றவை மனிதருக்கு உணவாகப் பயன்படுகின்றன. அ. சடைவா (A. sativa) ஓட்ஸ், அ. அபிசின்னிகா (A. abysinnica) ஓட்ஸ், அ. பைசேன்டினா (A. byzan - tina) இந்தியச் சிவப்பு ஓட்ஸ், அ. பீரவிஸ் (A. brvis) குட்டை ஓட்ஸ், அ. நீயுடா (A. nuda) நிர்வாண ஓட்ஸ், அ. ஒரிணண்டாலிஸ் (A. orientalis) ஹங்கேரி அல்லது துருக்கி ஓட்ஸ் முதலியவை தானியங்களுக் காகப் பயிரிடப்படுகின்றன. இவற்றைத் தவிர தன்னிச்சையாக வளரும் சில சிற்றினங்கள் நடைத் தீவனமாகின்றன. அவை, அ. பார் பேடா (4. barbata), அ. ஃபேடுவா (4. fatua), அ. ஸ்டெரிலிஸ் (A. sterilis), அ. ப்யூசென்ஸ் (A. bub≥cens) என்பனவாகும். கால் இந்தியாவின் ஓட்ஸ் பயிர் அ. பைஸேன்டினாவே யாகும்; அ. சடைவா அன்று என்பது போஸ் என் பவரின் கருத்து. ஆனால் சடைவா இந்தி யாவில் கால்நடைகளுக்காகப் பயன்படுத்தப்படுவதற் குக் காரணம் தானியங்கள் இங்கு மெதுவாக முதிர்ச்சி அடைவதுதான். இது ஓர் அறுமயத் (6) தானியம். இது மத்திய தரைக்கடல் பகுதியைத் தாயகமாகக் கொண்ட அ ஃபேடுவா என்னும் காட்டுச் சிற்றினத்திலிருந்து வந்திருக்கலாம் என்பது தாவரவியலாளர் கருத்தாகும். மேலும் இந்தக் களைச் செடி கோதுமை அல்லது பார்லி மூலம் பிற நாடுகளுக்குப் பரவியிருக்கக் கூடும். தோற்றம். குளிர்ச்சியான, நீர் வளம் கொண்ட கிழக்கு ஐரோப்பாவில்தான் முதலில் ஓட்ஸ் தோன்றியிருக்கக்கூடும். மனிதர்கள் பல நூற்றாண்டு களாக இதைக் களைச்செடியாகவே கருதியுள்ளனர். ஐரோப்பாவில் இரும்புக் காலத்திலேயே பயிரிடப் பட்டு வந்தமைக்குச் சான்றுகள் உள்ளன. சர்லாந்து, ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளில் அகழ்வாராய்ச்சி மூலம் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே ஓட்ஸ் பயிரிடப்பட்டதாகத் தெரிகிறது. சிவப்பு அல்லது இந்திய ஓட்ஸ் (அ. பைசேன்டினா) என்பது அ. ஸ்டெரிலிஸ்ஸிலிருந்து தோன்றியிருக்கக் ஸ்விட் ஓட்ஸ் 853 கூடும் என்று மரபியல் ஆராய்ச்சியாளர் கருது கின்றனர். புறத்தோற்றம். அ.சடைவா ஒரு பருவச் செடி யாகும். 60 முதல் 150 செ.மீ. வரை நேராக, உயரமாக, கொத்தாக வளரக்கூடியது. இலைகள் மெலிந்து, நீண்டு நீலப்பசுமையோடு இருக்கும். மஞ்சரியின் தண்டுநுனி கூட்டுப்பூத்திரளாகும் (pani- cle). அதில் மெல்லிய நீண்ட கா காம்போடு கூடிய ஸ்பைக்லெட்டுகள் தொங்கிய நிலையில் இருக்கும். க்ளும் (glume) எனப்படும் பூவடிச்செதில்கள் 7-11 வரை உண்டு. சில கீளும்கள் நீண்ட மயிர் போன்ற நீட்சியைப் பெற்றிருக்கும். அவற்றை ஆண்கள் (awns) என்பர். அவற்றின் அடிப்பகுதி முறுக்கிக் கொண்டு விதை பரவுதலுக்குப் பயன்படுகின்றன. பூக்கள் பொதுவாக இருபால் பூக்கள் ஆகும். ஆனால் மஞ்சரி நுனியில் காணப்படும் பூக்கள் ஒருபாலாக மாறக்கூடும். தானியம். இதன் நீளம் 1-2 ஈெ.மீ, சிறியதாக, குறுகலாக, தூளிகளுடனும், நெடுக்குவாட்டில் பிள வுடனும் காணப்படும். ஓட்ஸ் சூழ்நிலையும் சாகுபடியும். ஓட்ஸைப் பயிரிடத் தனி வகை மண் தேவையில்லை. மண்ணில் நீர் மிகுந்து இருக்கக்கூடாது. மண்ணில்எந்தத் தானியமும்