பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/879

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓடல்‌ வரைவு 855

உள்ளகத்தின் ஒரு வகைக் காந்தமாக்கல் நிலையைப் பிற வகைக் காந்தமாக்கல் நிலையாக மாற்றிவிடு கிறது. பெர்ரைட் உள்ளகங்களை வரிக்கண்ணோட்ட மிடுவதன் மூலம் (scanning) கம்பிகளில் பொறி தோன்றிய இடங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. அதே சமயத்தில் அனைத்துப் பெர்ரைட் உள்ளகங் களும் மீண்டும் பழைய காந்தமாக்கல் நிலைக்கு மீட்கப்படுகின்றன. அடுத்தடுத்த கம்பிகளின் தளங் கள் ஒன்றுக்கொன்று செங்குத்தாக இருப்பதால், பெர்ரைட் உள்ளகங்களின் தகவல்களிலிருந்து பொறி சென்ற பாதையின் ஆயங்களை முப்பரிமாணத்தில் எண் வடிவங்களாகப் பெற முடிகிறது. பொறிக்கல ஓடல் காட்டியை ஒரு கணிப்பொறி யுடன் இணைத்துப் பொறி தோன்றும்போதே அதன் பாதையைக் கணித்து விட முடிகிறது. அதில் மீண்டு வரும் நேரம் (recovery time) மிசுக் குறைவாயிருப்பது ஒரு சிறப்புப் பண்பு ஆகும். பெர்ரைட் உள்ளகத்தின் காந்தமாக்கல் நிலையை மாற்ற மிகக் குறைந்த ஆற்றலே தேவைப்படுகிறது. ஒளிப்படம் எடுக்க முடியாத அளவுக்குப் பொலிவு குறைந்த பொறி கூட பெர்ரைட் உள்ளகத்தின் காந்தமாக்கல் நிலையை மாற்றத் தேவையான மின்னோட்டத்தை உண்டாக்க முடியும். எனவே அதற்கேற்ற அளவில் அயனியாக்கம் குறைவாகவே இருக்கும். அயனியாக்கம் செய்யப் பட்ட துகள்களை நீக்க ஆகும் நேரமும் குறைவு. கருவி ஒரு மில்லி நொடி அல்லது அதற்கும் குறைவான நேரத்திலேயே மீண்டு வந்துவிடும். பெர்ரைட் உள்ளகங்களை வரிக்கண்ணோட்ட மிடவும், அவற்றைப் பழைய நிலைக்கு மீட்டு வரவும் குறைந்த நேரமே பிடிக்கிறது. இதன் காரணமாக டல் காட்டி அடுத்தடுத்து வரும் துகள்களின் பாதைகளைக் கணிக்கும் வீதம் பாதிக்கப்படுவதில்லை. மினுமினுப்பு எண்.ணி ஓடல் காட்டி. உயர் ஆற்றல் துகள்களை வைத்துச் செய்யப்படும் சில ஆய்வுகளின் மிகக் குறைவான நேர இடைவெளிகளில், இடை வினைகளைப் பதிவு செய்ய வேண்டிய தேவை ஏற்படுகிறது. பொறிக்கல ௐடல்காட்டிகளால் கூட அந்த அளவுக்கு விரைவாக மீண்டு வர முடிவதில்லை. அத்தகைய சூழ்நிலைகளில் மினுமினுப்பு எண்ணி (scintillation counter) ஓடல் காட்டிகள் பயன்படு கின்றன. இவற்றில் இடப் பிரிதிறன் (space resolution ) குறைவாயிருப்பினும் அதாவது துகள் பாதைகளின் ஆயங்களை நுணுக்கமாகக் கணிக்க முடிவதில்லை என்றாலும் வேறு வழியின்றி அவற்றின் உதவியை நாட வேண்டியுள்ளது. மினுமினுப்பு எண்ணி ஓடல் காட்டிகளில் நீண்ட மெலிந்த செவ்வக வடிவப் பட்டைகள் வரிசையாக அமைந்துள்ளன. அப் பட்டைகள் மினுமினுப்புப் பண்பு உள்ள ஞெகிழி யாலானவை. அவை 25 செ. மீ. நீளமும் 0.5 செ. மீ. அகலமும் 0.5. செ. மீ. தடிமனும் கொண்டவையாயிருக்கும். இவை அடுத்தடுத்து ஓடல் வரைவு 855 வைக்கப்பட்டு ஓர் உணர்வு காட்டுகிற சமதளப் பரப்பாக அமைந்திருக்கும். இத்தகைய 50 பட்டைகள் 25 ச.செ.மீ. பரப்பில் பரவியிருக்கும். தேவைக் கேற்றபடி மிகுந்த நீளமும் தடிமனும் கொண்ட பட்டைகளைப் பயன்படுத்தி இப்பரப்பை உயர்த்திக் கொள்ளலாம். ஒவ்வொரு பட்டையிலும் ஓர் ஒளிமின் கலம் ணைக்கப்பட்டிருக்கும். பட்டையின் வழியாக ஒரு மின்துகள் பாயும்போது அத்துடன் இணைந்த ஒளிமின் கலத்திலிருந்து ஒரு மின்னோட்டக் குறியீடு வெளிப்படும். இதன் மூலம் துகள் பாதையின் ஓர் ஆயம் கிடைக்கும். இதே போல மற்ற இரு திசைகளிலும் பட்டைகளை அடுக்கி வைப்பதன் மூலம் அவற்றிலும் துகள் பாதையின் ஆயங்களைக் கண்டுபிடிக்க முடியும். இவ்வாறு கிடைக்கும் தகவல்களைக் கணிப்பொறியில் செலுத்திப் பகுப் பாய்வு செய்யலாம். மினுமினுப்பு எண்ணிகளின் மீண்டுவரும் நேரம் மிகக்குறைவு. எனவே அதில் மிக விரைவாக அடுத் தடுத்து வரும் துகள் பாய்வுகளைப் பதிவு செய்ய முடிகிறது. ஆனால் துகள் பாதை ஆயங்களைக் கணக்கிடுவதில் உள்ள நுட்பம் பட்டைகளின் அகலத்தைப் பொறுத்துள்ளதால் அது கட்டுப்படுத் தப்பட்டு விடுகிறது. பட்டைகளின் அகலத்தை 5 மி.மீக்கும் குறைவாக அமைப்பது நடைமுறைக் காரணங்களால் இயல்வதில்லை. எனவே ஆயங்களில் 2.5 மி. மீ வரை பிழை ஏற்படக் கூடும். இதற்கு மாறாக 1 மி. மீ இடைவெளியுடன் அமைந்த கம்பிகளைக்கொண்ட பொறிக்கலத்தில் இந்தப் பிழை 0.5 மி.மீ ஆகவே இருக்கும். -கே. என். ராமச்சந்திரன் நூலோதி. Samuel Glasstone, Source Book on Atomic Energy D. Van Nostrand, New York, 1969. ஓடல்வரைவு ஒரு பொருள் வளைவான பாதையில் பயணம் செய்யும்போது அதன் திசைவேகமும் பயணத் திசை யும் மாறுகின்றன. அதன் முடுக்கத்தையும் பாதையை யும் ஓடல்வரைவு (hodograph) என்ற வரைபட முறையில் எளிதாகக் கண்டுபிடித்து விடலாம். ஒரு பாதையில் ஓடிக்கொண்டிருக்கும் துகளின் திசை வேகத்தைக் குறிப்பிடுகிற திசையன் கோடுகளின் முனைகளை இணைப்பதன் மூலம் கிடைக்கிற வரை கோடு ஓடல்வரைவு எனப்படும். எடுத்துக்காட்டாக P என்ற புள்ளி ABC என்ற வளைபாதையில் பயணம் செய்வதாகக் கொள்ளலாம் (படம்1). A,B,C ஆகிய புள்ளிகளில் அதன் திசை வேகங்கள் முறையே