பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/884

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

860 ஓடும்‌ நீர்ச்‌ சூழலமைப்புகள்‌

860 ஓடும் நீர்ச் சூழலமைப்புகள் ஆறு போன்ற ஓடும் நீர்ச்சூழலாகவும் அமைந்துள்ளது. உலகிலுள்ள ஆறுகள் மற்றும் ஓடும் நீர்ச்சூழலிலுள்ள நன்னீரின் அளவு ஆண்டொன்றுக்கு 3.83 × 104 கி.மீ. ஆகும். ஏரி குளங்களிலுள்ள நிலையான நீரின் என்று கணக்கிடப் 12.5 X 10' .. அளவு பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க மற்றுமொரு ஓடுநீர்ச் சூழல் அமைப்பு நதிக் கழிமுகங்களாகும். இவை கடல் ஆகிய இரண்டுக்கும் இடைப்பட்ட ஆறு. தன்மைகளைக் கொண்டவை. ஓடும்நீர் அல்லது ஓடாத நீர் ஆகிய எதுவாக இருந்தாலும் நீருக்கும் மற்றவற்றிற்கும் உள்ள தொடர்பு ஒரே மாதிரியானது பொறுத்து ஆனால் நீரின் தன்மையைப் தான். மாறு அதில் வாழும் உயிரினங்களின் பெருக்கம், வாழ்க்கை உயிரற்றவையின் அளவு ஆகியவை முறை. படுகின்றன. நீரில் ஒளி ஊடுருவல். ஒளி (light) நீரினுள் ஊடுருவிச் செல்லக் கூடியது: ஒரு பகுதி ஒளி, ஊடுருவாமல் பரவுகிறது, அல்லது சிதறுகிறது. நீரில் உள்ள வண்டல், கசண்டு, குப்பைகள், நுண் விலங்கு கள் மற்றும் தாவரங்களாலும், ஏனைய உயிரற்றவை யாலும் ஒளிக்கதிர்கள் உட்கவரப்பட்டு நீர் வெப்ப மாக்கப்படுகிறது. வெப்பமே இந்த நீர்ச்சூழல் அமைப்புகளுக்குக் கிடைக்கும் சக்தியாகும். இதன் மூலமே ஒளிச்சேர்க்கையும் நடைபெறுகிறது. காற்றை விட நீராவி ஊடகம் ஒளியை அதிக வீதத்தில் உட் கவர்கிறது. மிகவும் கலங்கலாக உள்ள நீரில் ஒளிச் சிதறல் (light, scattering and diffusion) அதிகமாக இருக்கும். இதனைப் பொறுத்தே நீரில் மேல்மட்ட உயிரினங்களின் வாழ்க்கை அமைப்பும் இருக்கும். நீரில் வளிமங்கள் உப்புகள், பல வளிமங்கள் நீரில் கரையும் தன்மை உடையன. குறிப்பாக உயிர் வாழத் தேவையான வளிமங்கள் நீரில் கரைவன. நீரில் கரையும் வளிமங்களின் அளவு, நீரின் வெப்பநிலை, உப்புத் தன்மை, வளிமண்டலத்தில் அவ்வளிமங்களின் அளவு ஆ ஆகியவற்றைப் பொறுத்தது. நீரில் கரைந் துள்ள வளிமங்களின் அளவைப் பொறுத்தே அதில் உள்ள உயிரினங்களின் அமைப்பும் வாழ்க்கைமுறையும் இருக்கும். எடுத்துக்காட்டாக விலங்குகள் வாழ வேண்டுமெனில், கார்பனேட்டால் ஆகிய அவற்றின் ஓடுகள் உடைய கால்சியம் ஓடுகளை உண்டாக்குவதற்குக்கார்பன்-டை-ஆக்சைடு தேவைப் படுகிறது. கார்பன்-டை-ஆக்சைடு மிகக் குறைவாக உள்ள நீரில் பொதுவாக ஓடுகளுடைய உயிரினங்கள் காணப்படுவதில்லை. இத்தகைய விலங்குகளின் இள வுயிரிகள் இங்கே காணப்பட்டாலும் கார்பன்-டை- ஆக்சைடு பற்றாக்குறையால் அவ்லினங்கள் அழிந்து விடும். ன் மூன்று வளிமங்களைப் பற்றிச் சிறப்பாக இங்கே குறிப்பிட வேண்டும். சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜன் எல்லா உயிரினங்களுக்கும் இன்றியமையாதது. களை 4 ஆக்சிஜன் இல்லாமல் பெரும்பாலான உயிரினங்க ளால் வாழ முடியாது. கார்பன் - டை - ஆக்ஸைடு ஒளிச்சேர்க்கைக்கு உதவுவதுடன் நீருடன் சேர்ந்து பல்வேறு வினைகளைப் புரிந்து உயிரினங்களுக்குத் தேவையான பை- கார்பனேட் மற்றும் கார்பனேட்டு உருவாக்குகிறது. நீரில் அதிகமாகக் கரைந் திருப்பது நைட்ரஜன் வளிமம் ஆகும். (இதன் கரை திறன் ஆக்ஸிஜனில் பாதியே ஆனாலும் வளி மண்டலத்தில் இதன் அளவு அதிகமாவதால் நீரிலும், அதன் அளவு அதிகம்) இவ்வளிமம் எதனுடனும் வினை புரிவதில்லை. ஆனால் சில நீலப் பச்சைப் பாசிகளும் பாக்டீரியா மற்றும் காளான் வகைகளும் தங்கள் நைட்ரஜன் தேவைக்கு தனைப் பயன்படுத்திக் கொள்கின்றன. நீரில் கரைந்துள்ள உப்புகள், நீரில் கரைந்துள்ள உப்புகளின் தன்மையும் அளவும் நீர்நிலையினைப் பொறுத்தன. பொதுவாகக் கடல்நீரில்தான் அதிக எண்ணிக்கையிலும், அளவிலும் (30% முதல் 37%) உப்புகள் கரைந்துள்ளன. சோடியம், மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், குளோரைடு, சல்ஃபேட், பை - கார்பனேட் மற்றும் புரோமைடு போன்ற அயனிகளே பெரும்பாலும் நீரில் அதிகமாக இருக்கும். ஓடும் நீரில் கரைந்துள்ள உப்புகள் மற்றும் கனிம, கரிமப் பொருள்கள் நீரோட்டத்தினால் கரைக்கப் படுபவை. தாவரங்கள் மற்றும் விலங்குகளின் கழிவு கள், பாறைத் துகள்கள். மண்ணில் படிந்துள்ள உப்புகள் ஆகியனவும் நீரோட்டத்தால் அடித்துவரப் படுகின்றன. இவற்றுள் குறிப்பிட்டுக் கூறத்தக்கது சிலிக்கா (SiO₁₂) எனப்படும் மணல். இந்தச் சிலிக்கா ல்லையெனில் அதனைத் தன்னுடைய உடலின் புறவுறையாக அல்லது ஓடாகக் கொண்டுள்ள டையாட்டம்கள் (diatoms) உயிர் வாழ முடியா. இந்த டையாட்டம்கள் நீர்ச்சூழல் அமைப்பில் மிக முக்கியமானவை. ஏனெனில் இவற்றை உணவாகக் கொண்டுதான் இவற்றைவிட மேம்பட்ட அமைப் புடைய உயிரினங்கள் வாழ்கின்றன. இவை ல்லை யென்றால் அவையும் இல்லை. அதனைத் தொடர்ந்து அவற்றிற்கு மேம்பட்ட உயிரினங்களும் இல்லை. சிலிக்கா அதிகமாகும்போது மிகுந்து காணப்படும். இயற்கையாகவே அப்பொழுது பாசிகள் குறைந்த அளவில் இருக்கும். சிலிக்கா குறை வாகக் கிடைக்கும் காலத்தில் பாசிகளின் ஆதிக்கம் அதிகமாகும். டையாட்டம்கள் நீரில் இயற்கையாகவே கரைந்து வரும் உப்பு களைத் தவிர, நகரின் விலங்குக் கழிவுகள் மற்றும் ஆலைக் கழிவுகள், ஆற்றினுள் விடப்படுவதால் வரும் பலவிதமான உப்புகள் ஆற்று நீரில் காணப்படு கின்றன. சில உப்புகள், பாசிகள் மற்றும் சிறு விலங்குகளுக்கு உணவுப் பொருளாகப் பயன்படு கின்றன. ஆனால் சில வேளைகளில் திடீரென்று இவ்வுப்புகளின் அளவு அதிகமாகிவிடும். அப்போது