பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/888

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

864 ஓடும்‌ நீர்ச்‌ சூழலமைப்புகள்‌

864 ஓடும் நீர்ச் சூழலமைப்புகள் படுகின்றன. பொதுவாகப் பாறைகளின் மேற் பக்கத்தை இருப்பிடமாகக் கொண்டு வாழும் உயிரி னங்கள் யாவும் தட்டையான உடலமைப்பு யவை. உடைய உடை தட்டையாக இல்லாத சில் உயிரினங்கள் வடிவத்தில் வேறுபட்டிருப்பினும் அவற்றின் இயக்கங் கள், செயற்பாடுகள் தட்டை உருவ அமைப்பு விலங்குகளை எடுத்துக் ஒத்திருக்கும். காட்டாகப் பாறையில் ஒட்டி வாழும் ஃபெரிசியா ferissia) எனும் ஒட்டுச்சிப்பியினைக் குறிப்பிடலாம். நீரோட்டத்தால் அடித்துச் செல்லாதவாறு அவை தங்கள் ஓட்டின் தட்டையான அடிப்புறம் முழுமை யும் பாறையின் மீது பரப்பி உறுதியாகப் பற்றிக் கொள்கின்றன. சில உயிரினங்கள் தட்டையான உடலுடன் வேறு சில தகவமைப்புகளையும் பெற்றி ருக்கும். நீரில் வாழும் பூச்சி, வண்டுகளின் இள வுயிரி (riffle beetle) ஆகியவை தட்டையாக இருப் பதோடல்லாமல் பாறைகளைப் பற்றிக் கொள்வ தற்கு ஏற்ற நகங்களையும் பெற்றுள்ளன. இவை பாறையை உறுதியாகப் பற்றிக் கொள்ளும். சில பாசியினங்கள் பாறைகளின் மேல் படர்ந்து பாறை யோடு பாறையாக உறுதியுடன் ஒட்டிக் கொள்ளும். பாறைகளின் மேற்புறத்தில் வாழும் உயிரினங்கள் யாவும், நீரோட்டத்தின் மேற்பரப்பில் மிதந்து வரும் கரிமக் மணற்கூளம் கூளங்களையே உணவாகக் கொள்கின்றன. பாறைகளுக்கிடையே உள்ள பாலானவை டைவெளிகளிலும் பல உயிரினங்கள் வசிக்கின்றன. அவற்றுள் பெரும் தட்டையானவை. மேலும், பாறை யிடுக்குகளில் பொருத்திக் கொள்வதற்கு ஏற்ற உறுப்புகளைப் பெற்றுள்ளன. நீர் ஈசல் (may fy) மற்றும் ஆற்றுக் கல்லடி ஈ (stone fly) ஆகியவற்றை இதற்கு எடுத்துக்காட்டாகக் குறிப்பிடலாம். பாறைகள், பூச்சிகளின் புழுக்கள் இவற்றுள் ஒன்றை இதற்கென்றே அமைந்துள்ள சிறப்புறுப்பால் பற்றிக்கொண்டு நீரோட்ட வேகத்தை இவை தாக்குப் பிடிக்கின்றன. இன்னும் சில பூச்சிகள் நீரின் ஓட்டத்தை எதிர்த்து எதிர்த்திசையில் செல்லும் தன்மை கொண்டவை. ஹெல்கிராமைட் (hellgram- உடல் முழுதும் mite) என்னும் பூச்சியின் பெரிய முள்களால் மூடப்பட்டுள்ளது. எனவே அது நீரோட் டத்தினால் எளிதில் அடித்துச் செல்லப்படுவதில்லை. அவற்றின் முள்கள் தளத்தை உறுதியாகப் பற்றிக் கொள்ள உதவுகின்றன. தட்டைப்புழுக்கள் (flat- worms). முள் போன்று தோல் சுணைகளுள்ள சில வளைதசைப் புழுக்கள் (annelid worms), சிலவகை நத்தைகள், சில பூச்சிகளின் கூட்டுப்புழு, இரட்டை யோடு உடைய சிப்பி வகைகள் (clams) ஆகியவை பாறைகளுக்கடியில் வாழ்கின்றன. நீரின் ஓட்டம் இவ்விடத்தில் மிகக்குறைவு. எனவே உயிரினங்கள் எளிதில் அடித்துச் செல்லப்படுவதில்லை. பொதுவாக இந்த உயிரினங்களின் உடலமைப்பு, வேகமாக ஓடும் நீரமைப்பில் வாழும் பிற உயிரினங்களை ஒத்த தாகவே இருக்கும். பாறைகளின் அடியில் வாழும் உயிரினங்களே (benthos) வேகம் மிகுந்த நீரோட்டங் களில் அதிகமாக இருக்கும். டிரவுட் (trout) மீன் வகைகளும் இச்சூழ்நிலையில் வசிக்கின்றன. சுருங்கக்கூறின் வேகமான நீரோட்டங்களின் சூழ்நிலை அமைப்பு, ஆழமான குளிர் ஏரிகளின் சூழ்நிலை அமைப்பை ஒத்துள்ளது. அவற்றின் இனப் பெருக்கம் முழுதும் நீரோட்ட வேகத்தையே பொறுத் துள்ளது. காண்க, படம்-3. குறைந்த . நீரோட்டங்களின் சூழ்நிலை . வேகம் அமைப்புகள். வேகம் நிறைந்த நீரோட்டங்களின் சூழ்நிலை அமைப்புகளிலிருந்து வேகம் குறைந்த நீரோட்டங்களின் சூழ்நிலை அமைப்புகள் பெருமளவு மாறுபட்டவை. னெனில் இந்நீரோட்டங்கள் குறைந்த வேகமும் நேரான ஓட்டமும் கொண்டவை. எனவே, நீரோட்டத்தின் அரிமானத் தன்மை குறை கிறது. அதன் விளைவாக, அடித்து வரப்படும் மின் துகள்கள் மற்றும் கரிமக் கூளங்கள் குறைவுபடு கின்றன. வேகம் நிறைந்த நீரோட்ட அமைப்புடன் ஒப்பிடுகையில், இச்சூழ்நிலை அமைப்புகளில் நீரின் அடிமட்டத்தில் வாழும் உயிரினங்கள் மிகக்குறைவு. அவற்றுள் நத்தைகள், குறிப்பிடத்தக்கவை. நீந்தும் உயிரினங்கள் இந்நீரோட்டங்களில் முதன்மையிடம் வகிக்கின்றன. வெவ்வேறு வகை மீன்களுடன் கடின ஓட்டுக்கணுக்காலி (crustacean) வகையின் பெரிய யிரினங்களும் இவற்றில் அடங்கும். கடின ஓட்டுக்கணுக்காலி உயிரினத்திற்குச் சான்றாக இறால் மீன் மற்றும் நண்டினைக் குறிப்பிடலாம். இவை தவிரப் பலவகைப் பூச்சிகளும், இந்நீரோட்டங்களில் மெல்ல இருக்கும். ஊர்ந்து செல்லும் பூச்சிகளி லிருந்து மிக வேகமாக நீந்தும் பூச்சிகள் வரை இவற்றுள் அடக்கம். இவை தவிர ஒற்றைச்செல் உயிரிகளும் வடிவத்தில் சிறிய கடினஓட்டுக் நுண் கிளேடோசெரா கணுக்காலிகளும் (cladocera) போன்ற நீர் உண்ணிகளும் மிகுந்து காணப்படும். வேகம் குறைந்த நீரோட்டங்களில் தாவர இனங்களும் மிகுதியாகக் காணப்படுகின்றன. அவற்றில் வேர்விட்டு நீர்த்தாவரங்கள் வளரும் (புல் மற்றும் புதர்ச்செடிகள்), பாறைகள் ஆகிய வற்றின் பரப்பில் இணைந்துள்ள சில பாசிகள் முக்கியமானவை. நகரக்கூடிய பாசி வகைகள், டையாட்டம்கள், கசையிழை முன்னுயிரிகள் (flagel late protozoa) ஆகியவையும் பலவாகக் காணப்படும். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து உயிரினங் களுக்கும் தேவையான உணவும் ஆற்றலும் நீரமைப்பு களிலிருந்தே கிடைக்கின்றன. மணல் கரிமக் கூளங்கள். பாக்டீரியாக்கள் துகள், ஆகியவை