ஓடோனேட்டா 869
உள்ளது. இல்லை. நரம்பு மண்டலம் ன் செல்திரள்களாக இவை ஒரு பாலுயிரிகள்; தனித்தனி ஆண் பெண் பூச்சிகள் காணப்படுகின்றன. ஆண்களில் நீண்ட இரு குழல்கள் போன்ற விந்தகங்கள் உள்ளன. விந்து நாளங்கள் பொதுவான விந்துபையினுள் திறக்கும். இது சிறிய விந்து பீச்சு நாளமாக மாறி 9 ஆம் கண்டத்தின் கீழ்ப்பக்கத்தில் வெளியே திறக்கும். மேலும் ஆண் பூச்சிகளில் இரண்டாம், மூன்றாம் கீழ்ப்பக்கத்தில் வயிற்றுக் கண்டத்தின் சிக்கலான கலவியுறுப்பு ஒன்று காணப்படுகிறது. இங்கு இவ்வுறுப்புகளை மூடிப் பாதுகாக்கும் 'மூடி போன்ற ஓர் அமைப்பும் உள்ளது. மேலும் இங்கு இனப்பை மற்றும் பெண் உயிரியைப் பிடித்துக் கொள்ள உதவும் கொக்கி போன்ற அமைப்பு. இரண்டாம் கலவியுறுப்பு ஆகியனவும் காணப்படும். இனச்சேர்க்கைக்கு முன், விந்தணுக்கள் ஒன்று சேர்ந்து 'விந்தணுத் தொகுப்பு உறையாகி, 9 ஆம் கண்டத்திலிருந்து 2 ஆம் கண்டத்தில் உள்ள 2 ஆம் கலவியுறுப்புக்கு மாற்றப்படுகிறது. பெண் பூச்சிகளில் ஓர் ணையான சினைய கங்கள் உள்ளன. இவையும் நீண்ட குழாய்கள் போலவே காணப்படுகின்றன. அண்ட நாளங்கள் இரண்டும் ஒருங்கிணைந்து பொது அறையில் திறக் கும். இப்பகுதிக்குப் புணர் குழாய் என்று பெயர். இங்கு சிறிய துணைச்சுரப்பிகள் உள்ளன. இவற்றின் நாளங்களும் புணர்குழாயில் திறக்கின்றன. புணர் குழாய் பெண் உயிரியின் 8 9 அல்லது ஆம் கண்டத்தில் உள்ள புணர் புழைவழியாக வெளியே திறக்கும். தட்டாம் பூச்சிகள் பொதுவாக நீண்ட நாள்கள் உயிர் வாழக்கூடியவை. இப்பூச்சிகள் சிறந்த பறக்கும் பகற்பொழுதில் திறன் பெற்றுள்ளன. மட்டுமே நடமாடும் தன்மையுடையன. மேலும் இவை பறந்து கொண்டிருக்கும்போதே பிற பூச்சிகளைப் பிடித்து உண்ணும் திறன் பெற்றவை. கொசு, சிறிய பூச்சி, வண்டு, புழு ஆகியன தட்டாம்பூச்சிகளின் உண வாகும். சில வாழ்க்கைச்சுற்று. வளர்ந்த பூச்சிகள் குளிர் காலங்களில் இனப்பெருக்கம் செய்கின்றன. இனத்தைச் சேர்ந்த தட்டான் பூச்சிகள் கூட்டம் கூட்டமாக, வலசை செல்லும் (migration) பழக்க முடையன. இப்பூச்சிகள் உயரப் பறக்கும்போதே இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன. இனச்சேர்க்கைக்குப் பிறகு பெண் பூச்சிகள் நீரில் முட்டையிடுகின்றன. ஒரு பெண் பூச்சி ஒரு தடவை சுமார் 800 முட்டைகள் வரை இடுகிறது. முட்டை களை நீர்த்தாவரங்களில் ஒட்டவைக்கின்றன. சில தட்டாம்பூச்சிகள் நீர்த்தாவரங்களின் மேல் காணப் படும் சில துளைகளில் முட்டையிட்டு மூடிவிடுகின்றன. ஓடோனேட்டா 869 . சில நாள்களுக்குப்பின் முட்டைகள் பொரிந்து சிறிய இளவுயிரிகள் வெளிவருகின்றன. இவை சிறிது சிறிதாக வளரும். இவை பொதுவாகப்பச்சை அல்லது பழுப்பு நிறத்தில் உள்ளன. 10 வயிற்றுக்கண்டங் களையும் 5 இணை இணையுறுப்புக்களையும் பெற்றுள்ளன. நீரில் வாழும் இந்த இளவுயிரிகள் நீரில் உள்ள சிறிய உயிரிகள், கொசுவின் வளர்ச்சிப் பருவப் புழுக்கள், புழுக்கள் இவற்றை உண்டு வாழும். சில நேரங்களில் தன்னின இளவுயிரிகளையும் உண்ணும். கால் இவ்லின உயிரிகளின் தலையில் இரண்டு பெரிய கண்கள் உள்ளன. இவை கூட்டுக் கண்களாகும். மேலும் நன்கு வளர்ச்சியடைந்த, உறுதியான களும். கடித்து உண்ணும் வாயுறுப்புகளும் உள்ளன. இவற்றின் கீழுதடு மிகப்பெரியதாகி. நீண்டு வளர்ந்து பெரிய மூடி போலக் காணப்படுவது இப்பூச்சிகளின் தனிச் சிறப்பாகும். இது உணவினைப் பற்றிப் பிடிக்கப் பெரிதும் உதவியாக உள்ளது. துருவுதாடைகள் சாதரண அமைப்பைக் கொண்டுள்ளன, 4 செரிமான மண்டலம் நன்கு வளர்ச்சி அடைந் துள்ளது. இந்த இளவுயிரிகளின் மலக்குடலில் செவுள்கள் காணப்படுகின்றன. மலக்குடலின் உள்ளே நீர் தேக்கி வைக்கப்படுகிறது. இந்நீர் சுவாசத்திற்குப் பயன்படுகிறது. இந்த இளவுயிரி, செரிமான மண்டலத்தின் பின்பகுதியை அடிக்கடி முன்பின் அசைத்து மலக்குடல் சுவாசநீரை அவ்வப்போது மாற்றிக் கொள்ளும். மேலும் இச்செவுள்கள் பூச்சிகள் இடப்பெயர்ச்சி செய்யும்போது திசை திருப்ப உதவு கின்றன. கால்களினால் தரையின்மேல் ஊர்ந்துசெல்வ தாலும் நீரில் நீந்துவதாலும் மலக்குடல் நீரை விரை வாக வெளியே பீச்சுவதால் ஏற்படும் உந்து வகையி னாலும் முன்னோக்கிப்பாய்ந்து இவை இடப்பெயர்ச்சி செய்கின்றன. 10 0 இங்கு இளநிலை வளர்ச்சி நடைபெறுகிறது. வளர்ச்சிப் பருவத்தில் ஏறத்தாழப் பத்து வளர்நிலை கள் (Instars) உள்ளன. இறக்கைகள் சிறிது சிறிதாக வளர்கின்றன. இளவுயிரி நிலையில் இவற்றிற்கு எண்ணற்ற பகைகள் உள்ளன. இறுதிநிலை இளவுயிரி விட்டு வெளியே ஊர்ந்து சென்று நீர் நிலைகளின் ஓரங்களில் காணப்படும் தாவரங் களையோ இலைகளையோ பற்றிக் கொள்ளும். பிறகு இந்த இறுதி வளர்நிலை இளவுயிரியின் முதுகில் ஒரு பிளவு தோன்ற, அதிலிருந்து இறகுகளுள்ள வளர்ந்த பூச்சி வெளிவருகிறது. இவ்வளர்ச்சிப் பருவம் ஓராண்டுகாலம் வரை நடைபெறுவதாகத் தெரிகிறது. பொருளியலின் முக்கியத்துவம். தட்டாம்பூச்சிகள் மனித சமுதாயத்திற்கும், விலங்குகளுக்கும் பலவித