பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/895

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓணான்‌ 871

தன் உடலை, தலை. சுழுத்து, நடுவுடல், வால் எனப்பகுக்கலாம். உடல் முழுதும் செதில்களால் மூடப்பட்டுள்ளது. முதுகுப்பக்க நடுக்கோட்டில் உள்ள செதில்கள் முள்கள் போன்று காணப்படு கின்றன. இம்முள் தொடருக்கு முதுகுப்பக்க முகடு பிடரிப் (dorsal crest) என்று பெயர். இத்தொடர் பகுதியில் தொடங்கி நடுவுடலின் பிற்பகுதியில் முற்றுப்பெறுகிறது. இதன் உடல், முதுகுப்பக்கத்தில் இலேசான பழுப்பு நிறமாகவோ, சாம்பல் நிறமாகவோ. இருக்கும்; வயிற்றுப் பக்கம் அழுக்குப் படிந்த வெண்ணிறமாக இருக்கும். தலையின் முன்முனையில் வாய் இடம்பெற்றுள் ளது. வாயின் தொடக்கப்பகுதியில், அதன் வயிற்றுப் பக்கத்தில், ஒரு குறுக்குவசப் பிளவாகப் பொதுக் கழிவாய் (cloaea) அமைந்துள்ளது. தலையின் மேற் பரப்பில், முன்முனைக்குச்சற்றுப் பின்னால் ஓரிணை வெளி நாசித் துளைகள் (external nostrils) உள்ளன. தலையின் ஒவ்வொரு பக்கத்திலும் ஒரு கண் உண்டு. ஒவ்வொரு கண்ணும் மேலிமை,கீழிமை,ஊடு காண் திறன் கொண்ட நிக்டேட்டிங் சவ்வு (nictitating membrane) முதலியவற்றால் காக்கப்படுகிறது. கண்களுக்குப் பின்னால் உள்ளசெவித் துளைகள் செவிப்பறையினால் மூடப்பட்டு உள்ளன. நடுவுடலின் வயிற்றுப்புறமாக ஈரிணை ணை யுறுப்புகள் உள்ளன. முன்கால், மேற்கரம், முன் ணான் 871 கரம், கை ஆகிய பகுதிகளைக் கொண்டுள்ளது. கையின் ஐந்துவிரல்களும் களும் கூர்நகங்களைப் பெற் றுள்ளன. பின்கால், தொடை, கீழ்க்கால், பாதம் ஆகிய மூன்று பகுதிகளை உடையது. பின் காலின் ஐந்துவிரல்களும் கூர்நகங்களைப் பெற்றுள்ளன. நடுவுடலை அடுத்த வால் அடிப்பகுதி பருத்தும் பின்னோக்கிப் படிப்படியாகச் சிறுத்துக் கொண்டும் செல்லும். உள்ளன. மேல் கீழ்த்தாடைகளின் விளிம்பில் பற்கள் வை தாடையெலும்புகளின் உள்விளிம் போடு ஒருங்கிணைந்து காணப்படுகின்றன. இத் தகைய பற்களுக்குப் ப்ளுரோடாண்ட் (pleurodont) என்று பெயர். வாய்க்குழியின் அடித்தளத்தில் தசையாலான நாக்கு உள்ளது. இது பின்முனையில் ணைந்தும், முன்முனையில் ணையாமலும் இருக்கும்.நாவின் தொடக்கப் பகுதியின் பின்னால் குரல்வளைத்துளை (glottis ) காணப்படுகிறது. குரல்வளைத்துளை குரல்வளையினுள் திறக் கிறது. குரல்வளையினின்று தொடங்கும் மூச்சுக்குழல் இருகிளை மூச்சுக்குழல்களாகப் பிரிகிறது. ஒவ்வொரு கிளை மூச்சுக்குழலும் ஒரு நுரையீரலுடன் ணைந் துள்ளது. ஓணானின் விலா எலும்பிடைத் தசை களின் இயக்கத்தால் புறத்தேயிருந்து காற்று நாசித் துளை, குரல்வளை, மூச்சுக்குழல் வழியாக நுரை யீரல்களை அடைகிறது. இதனை உட்சுவாசம் என்பர். நுரையீரல்களில் காற்றுப் பரிமாற்றம் நிகழ்கிறது. அடுத்து நிகழும் வெளிச் சுவாசத்தின் போது, உள்ளிருந்து காற்று வெளிச்செலுத்தப்படும். நாகப் கூம்பு வடிவமான மூன்றறை கொண்ட இதயம் உள்ளது இது இதய உறையால் முடப்பட்டுள்ளது. இதயத்தில் வல இட மேலறைகளும், ஒரு கீழறையும். ஒரு சிரைக்குடாவும் உள்ளன. இதயக்கீழறை ஒரு முற்றுப் பெறாத் தசைத் தடுக்கினால் இரண்டா பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் இதயக்கீழறையின் இவ்விரு அறைகளும் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டுள்ளன. தமனிகள் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு இரத்தத்தைக் கொண்டு செல்லவும், சிரைகள் உடலின் பல்வேறு பகுதிகளினின்றும் இரத்தத்தை இதயத்திற்குக் கொண்டு வரவும் செய்கின்றன. இவ்விரு வகைக் குழாய்களுக்கிடையே தந்துகிகள் காணப்படுகின்றன. உணவுப்பாதையில் உணவுக்குழல், இரைப்பை, சுருளாக அமைந்த குடல், மலக்குடல்,பொதுக் கழிவறை முதலியன அடங்கும். பொதுக்கழிவறை மலப்பாதை, பொதுக்கழிவுப் பாதை, சிறுநீர்ப்பாதை என முப்பகுதிகளை உடையது. மலப்பாதை மலத்தைப் பெறுகிறது. சிறுநீர்ப் பாதையில் இனப் பெருக்கச் சிறுநீர்க் குழாய்கள் திறக்கின்றன. பொதுக்