872 ஓதங்கள்
872 ஓதங்கள் கழிவுப்பாதை பொதுக்கழிவாய் வழியாக வெளித் திறக்கிறது. கல்லீரல் இரண்டு மடல்களாக உள்ளது. வலமடலில் பித்தப்பை புதையுண்டுள்ளது. இதனின்று தோன்றும் பித்தநாளம் நடுச்சிறுகுடலின் இறுதியில் திறக்கின்றது. கணையம் முன்சிறு குடலையொட்டி அமைந்துள்ளது இதனின்றும் வெளிவரும் நாளம் முன்சிறுகுடலில் திறக்கின்றது. கணைய நரம்பு மண்டலம் மூன்று பகுதிகளை உடையது. அவை மத்திய நரம்பு மண்டலம்: இதில் மூளையும் தண்டுவடமும் அடங்கும்; வெளி நரம்பு மண்டலம். இதில் மூளை நரம்புகளும் தண்டுவட நரம்புகளும் அடங்கும். தானியங்கு நரம்பு மண்டலம்; மூளையும் ய தண்டுவடமும் டியுராமாட்டர், பயாமாட்டர் ஆசி இரு உறைகளால் சூழப்பட்டுள்ளது. கண்ணின் விழி வெளிப்படலம் (sclerotic coat) குருத்தெலும்பாலானது. விழித்திரையில் கூம்புச்செல் களும் (cone cells) கோல் செல்களும் (rod cells) காணப்பட்டாலும் கூம்புச் செல்களின் எண்ணிக்கை மிகுந்துள்ளது. இதனால் ஓணான் ஓரளவு வண்ணப் பார்வை (colour vision) பெற்றுள்ளது. இமை உறுப்பில் உள்ளமைந்த மை உறுப்புத் தசைகள் (ciliary muscles) காணப்படுகின்றன. முதுகெலும்பு களில் ஊர்வன வகையில்தான் முதன்முறையாக இத்தசைகள் தோன்றுகின்றன. ஓணானின் செவி இருபகுதிகளையுடையது. அரை இவை உட்செவி, நடுச்செவி எனப்படும். உட்செவிச் சவ்வு சிக்கல் (memtranous labyrinth) ஆனது. இதில் யூட்ரிக்குலஸ், சாக்குலஸ், மூன்று வட்டக் கால்வாய்கள் காணப்படுகின்றன. சாக்குலஸி னின்று லகினா என்னும் நீட்சி காணப்படுகிறது. நடுச்செவியின் வெளிச்சுவர் செவிப்பறையாலானது. தனுடன் உட்புறத்தில் இணைந்துள்ள மெல்லாச் சிற்றெலும்பு, அங்கவடி எலும்புடன் (stapes) இணைந்துள்ளது. காலு உடலறையின் பிற்பகுதியில் இரு சிறுநீரகங்கள் உள்ளன. ஒவ்வொரு சிறுநீரகத்தினின்றும் ஒரு சிறு நீர்க்குழாய் தோன்றிப் பின்னோக்கிச் செல்கின்றது. இக்குழாய் ஆண் ஓணானில், பின் முனையில் பொதுக் கழிவுப்பாதையினுள் திறக்குமுன் விந்து நாளத்துடன் ஒன்று சேர்கிறது. பெண் ஓணானின் சிறுநீர்க்குழாய் அண்ட நாளத்துடன் எவ்விதத் தொடர்பும் கொள்ளாமல் பொதுக் கழிவுப்பாதையுள் திறக்கிறது. காணப் ஆண் ஓணானில் இரண்டு விந்தகங்கள் டுகின் ன்றன. இவற்றின் உள்விளிம்பில் எபிடிடைமிஸ் என்னும் சுருள் குழல் இணைந்துள்ளது. இச்சுருள் குழலே நீண்ட விந்துக் குழலாகி இறுதியில் சிறுநீர்க் குழாயுடன் இணைந்து பொதுக் கழிவறையுள் திறக் கிறது. வால் தொடக்கத்தின் அடிப்பகுதியில் ஓரிணை யான கலவியுறுப்புகள், ஆண்குறிகள் உள்ளன. இவை இரத்தச் செறிவுடைய, பிதுங்கும் தன்மையுடைய பைகள் ஆகும். விந்தணுக்கள் வரிப்பள்ளங்கள் வழியாக இப்புணர்ச்சியுறுப்புகளை வந்தடைகின்றன. பெண் ஓணானில், ஓரிணை அண்டச் சுரப்பிகள் உள்ளன. இரு அண்ட நாளங்களும் முற்பகுதியில் அண்ட நாளப் புனல் வழியாக உடற்குழியினுள் திறக்கின்றன. அண்ட நாளங்களின் மறுமுனை, வாதக் கழிவறையுள் திறக்கின்றது. அண்ட நாளத் தில் கருவுறுதல் நடைபெறும். முட்டையிடும் காலம் மே முதல் 4 மாத காலமாகும். முட்டை சுமார் அரை அங்குல நீள, வேப்பங்காய் வடிவில் இருக்கும். தரையில் 5,6 அங்குல ஆழமுள்ள வளை தோண்டி அதில் 4-20 முட்டை இடும். குஞ்சு பொரிக்க 2 மாதமாகக்கூடும். முட்டையினின்று வெளிவரும் இளம் ஓணான்கள் மூக்கின் மீது ஒரு கூர்மையான முட்டைப்பல்லைப் (egg tooth) பெற்றிருக்கும். இதன் உதவி கொண்டே இது முட்டையின் ஓட்டை உடைத்துக் கொண்டு வெளி வருகிறது. சிலநாள்களில் இம்முட்டைப்பல் உதிர்ந்து விடும். இனப்பெருக்கக் காலத்தில் ஆணின் தலையும் கழுத்தும் மிகச் சிவந்திருக்கும். சில சமயம் கன்னம். கழுத்து, தொண்டைப்பகுதிகளில் கருநிறப்பகுதிகள் இருக்கலாம். இனப்பெருக்கக் காலத்தில் ஆண் ஓரிடத்தை நாடியடைந்து அருகிலுள்ள செடி அல்லது தழை பெண்ணை மறைவிலிருக்கும் மெல்ல அணுகும். உடலின் முன்பாகத்தை நன்றாக உயர்த்தித் தலை வணங்குவது போல் மேலும் கீழும் அசைக்கும். அதே சமயத்தில் தொண்டையை உப்பிக்கொண்டு அகற்றும். வாயைத் திறந்து திறந்து மூடும். வேறோர் ஆண் அங்கு வருமாயின் அதனுடன் சண்டையிடும். சண்டையில் இவற்றின் நிறம் விரைவில் மாறும். தோற்றுப் போன ஆண் ஓடிப்போகலாம். பிடி படலாம். கொல்லவும் படலாம். தோற்றதன் தொண்டையிலுள்ள கருநிறம் மறைந்து போகும். ஜோ. எட்வின் ஓதங்கள் கடலின் நீர்மட்டம் சூரிய, சந்திரனின் ஈர்ப்பு விசை யால் ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குட்பட்டு உயர்வதையும் தாழ்வதையும் கடல் ஓதங்கள் அல்லது ஏற்ற வற்றங்கள் (tides) என்பர். சந்திரனை விட 27 மில்லியன் மடங்கு பெரியது சூரியன். ஆனால் சூரியனைவிட நிலவிற்கே ஓதங்களின் மீது மிகு