பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/897

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓதங்கள்‌ 873

சந்திரன். ஆதிக்கம் உள்ளது. சந்திரன் புவியைச் சுற்றி வலம் வருவதற்கேற்றவாறு வெவ்வேறு டங்களில் ஓதங்கள் உயர்ந்தும் தாழ்ந்தும் அமைகின்றன. பௌர்ணமி, அமாவாசை நாள்களில் சூரியனும், சந்திரனும் பூமிக்கு ஒரே நேர்கோட்டில் அமைவதால் அவையிரண்டும் சேர்ந்து ஒரே திசையில் நீரை ஈர்க்கும். அந்நேரங்களில் கடற்கரையில் நீர் உயர்ந் தெழுந்து துறைகளின் அருகேயுள்ள படகுகளை உயர்மட்டத்தில் மிதக்கச் செய்யும். இதை உவா ஏற்றம் அல்லது ஓதப்பெருக்கு (spring tides) என்பர். அஷ்டமி நாள்களில் சூரியனும் சந்திரனும் வெவ்வேறு திசையில் ஒன்றுக்கொன்று செங்குத்தான நிலையில் நீரை ஈர்ப்பதால் ஓதங்கள் குறைய ஓத வற்றம் அல்லது இடையுவா வற்றம் (neap tides) உண்டா கிறது. கடலின் மேற்பரப்பிலிருந்து கடலடி வரை நீர்ப் பிரிவில் ஏற்படும் இவ்வோத அசைவுகள், ஆழ்கடல் உயிரினங்களையும் கரைக்குக் கொண்டு வருவதால் மெஸினாவிலுள்ள (Messina) கடல் வாழ் உயிரின ஆராய்ச்சி நிலையத்திற்கு ஓதம் தொடர்பான தகவல் அறிய வாய்ப்பு அமைகிறது. சந்திரனும், சூரியனுமே நீரைக் கவர்ந்திழுக் கின்றன என்றாலும், இந்த ஓதத்தின் தன்மை, ஓதங்கள் 873 அதன் அளவு, ஆற்றல் உயரம் என்பன அந்தக் கடற்கரையின் தன்மை, அடித்தளத்தின் சரிவு, கடற் காற்றின் தன்மை, விரிகுடாவாயின் அகலம், ஆற்றின் ஆழம் இவற்றிற்கேற்ப அமைகின்றன. உலகின் பல் வேறு பகுதிகளில் ஓதங்கள் மிகவும் வேறுபடுகின்றன. உலகிலேயே மிக உயர்ந்த ஓதங்கள், பண்டி வளை குடா (bay of fundy) அருகே 16 மீட்டருக்கும் உயர்வாக எழுந்த அதே நேரத்தில் அதற்கு அருகி லுள்ள மற்றொரு தீவில் 30 செ.மீ. அல்லது 60 செ.மீ.க்கும் குறைவாகவே இருந்தது. இவ்வாறான இட வேற்றுமைகளுக்கு இன்றைய ஓத ஊசல் கொள்கை சிறந்த விளக்கமளிக்கிறது. ஓர் ஓதமற்ற மையத்தைச் சுற்றி ஒவ்வோர் இயற்கை மடுவிலும் ஓர் ஊசல் மேலும் கீழும்ஆடுகிறது என்பதை க்கொள்கை விளக்குகிறது. இந்த மையத்தைச் சுற்றி அமைந்திருக்கும் இடங்களில் அசைவுகள் குறைந்தும், அப்பாலுள்ள இடங்களில் 2,3,5,10, 13 மீட்டர் உயர்ந்தும் காணப்படுகின்றன. இந்த ஊச லின் கால அளவு (period of oscillation) ஏறத்தாழ 12 மணியாகும். இது பெருங்கடலின் ஓத கால அளவுகளுடன் ஒத்திருக்கிறது. இந்த ஓதங்களின் பெருக்கமும் வற்றமும் ஒன்றை யொன்று தொடர்கின்றன. ஒரே நாளில் கடல் கடல் ஓதங்கள் ஏற்படும் விதம் சந்திரனால் ஏற்படும் கடல் ஓதம் பிறைகள்மாறும்போது -பௌர்ணமி உவா ஏற்றம் பூமி சந்திரன். அமாவானர் வற்றம் சூரியன் சூரியனால் ஏற்படும் கடல் ஓதம் பூமி சந்திரன் இடையுவா ஏற்றம்