பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/899

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓதத்தடுப்பு 875

கரைகடல் நிலை ஆய்வுக்குழு கண்டறிந்துள்ள கருவி மிகவும் பயனுள்ளதாகும். அதன் உதவியால், உலகின் எப்பகுதியிலும் கடந்த காலத்தில் தோன்றிய ஓதத் தின் காலத்தையும், உயரத்தையும், வருங்காலத்தில் தோன்றக்கூடிய ஓதத்தின் காலத்தையும், உயரத்தை யும் அறிந்து கூற இயலும். ஆனால் இக்கருவியைப் பயன்படுத்த வேண்டுமாயின், ஏதோ ஒரு காலத்தில் அவ்விடத்தில் நிலத்தோற்றக் கூறுகள் ஓத அசைவு களை எவ்வாறு மாற்றியமைத்தன, எவ்வாறு இயங் கச் செய்கின்றன என்பவை பற்றிய தலக்குறிப்புகள் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். இக்குறிப்புகளைக் கொண்டு எதிர்கால ஓதங்களைப் பற்றி அறிய முடியும். ஓதத்தடுப்பு சுவர் வீட்டின் சுவர், தளம் இவற்றின் மேல் படரும் ஈரம் ஓதம் (damp) எனப்படுகிறது. ஓதம் தரை, கறைகளைத் இவற்றில் விரும்பத்தகாத தோற்றுவிக்கிறது. வண்ணப்பூச்சுகள், மின் அமைப்பு கள் இவற்றில் இழப்பை விளைவிக்கிறது; மரப் பொருள்களின் மேல் பூசணம் படர்வதற்குக் காரண மாகிறது. ஓதம் மிகுந்துள்ள வீட்டில் வாழும் மக்கள் உடல் நலக்குறைவு பெறுகின்றனர். கூரையிலிருந்து மழை நீர் ஒழுகுவதாலும், மேல் கைபிடிச்சுவர்களின் விரிசல்கள் வழியாக நீர் கிடைமட்ட ஓதத்தடுப்பு அட்டி செங்குத்து ஒதத் தடுப்பு அட்டி தளம் ஓதத்தடுப்பு 875 கசிவதாலும் ஈரம் சுவர்களில் இறங்கி ஓதமாக வெளிப்படுகிறது. குளியலறை, சமையலறை இவற்றிலிருந்து நீர் ஆவியாகி வீட்டின் சுவர்களின் மேல் படிவதாலும் ஓதம் தோன்றுகிறது. கைப் பிடிச்சுவருக்குச் சரியான ஆரல் (coping) அமைத்தல். தளம் சுவர் இவை சேருமிடங்களில் ஓதத்தடுப்பு அட்டிகள் (damp-proof course) அமைத்தல் ஆகியவை ஓதத்தடுப்பு முறைகளாகும். கூரையிலிருந்து சுவரின் பக்கமாக வடியும் மழை நீர், சுவரை நேராகச் சாடும் மழை, சுவரி னூடே பதிக்கப்பட்ட வடிகுழாயின் விரிசல் நீர் ஆகியவை சுவரின் பக்கங்களில் ஓதமாகத் தோன்றும். கோம்பைக் கூரை வீடுகளில் சரியான மச்சிறக்கம் (eaves), சுவரின் இடையே முறையாகப் பொருத்தப் படும் வடிகுழாய்கள், தடிப்பு மிக்க சுவர்கள், நீர் கசியாத சுவர்ப் பூச்சுகள் இவற்றைப் பயன்படுத்தி இவ்வகை ஓதத்தைத் தடுக்கலாம். ஓதம் சரியான தளம் நிலத்திலிருந்து அடிமானம், இவற்றிலுள்ள நுண் புரைகளின் வழியே மேலெழு கிறது. வடிகால் அமைப்புப் பெறாமல் வீட்டிற்கு அருகில் நீர் தேங்கல், தாழ்வான அடித் தளம் (basement } இவற்றால் ஓதம் ஏற்படும். ஓதத்தடுப்பு அட்டிகளைத் தளங்களின் கீழே பரப்பி நிலமட்டத்திற்கு அருகில் சுவர்களில் அமைத்தும் மேல் எழும் ஓதத்தைத் தடுக்கலாம். யும் ஆரல் ஓதத்தடுப்பு அட்டி கிடைமட்ட ஓதத்தடுப்பு அட்டி கைப்பிடிச்சுவர் தம்