ஓத இடைப்பகுதி 877
காலணி அடித்தோல். இந்தத் தோல் பெரும் பாலும் தாவரப் பதனிட்ட எருமைத்தோல்கள் தற்காலத்தில் அல்லது மாட்டுத் தோல்களாகும். இந்தத்தாவரப் பதினிடுவதற்குச் சற்றுக்கூடுதலாகவே செயற்கைப் பதனிடும் பொருள்களைப் பயன்படுத்து வதால் அதன் ஒதத்தடுப்புத்தன்மை மிகவும் குறைந்து நீரை மிகவும் உறிஞ்சுகிறது. இதைத் தடுக்க, தாவரப் பதனிட்ட தோல்களைச் சார்பு அலுமினியம் சல்ஃபேட் 30% நீரில் 24 மணி நேரம் ஊற வைத்துத் வைப்பர். தோலுக்குப் போட்டுக் காய இதனால் ஓதத்தடுப்பு மிகவும் உயரும். மேலும் தோலுக்கு இரப்பர் கரைசல், சிலிக்கான் கரைசல் போன்றவற் றைக் கொடுத்தும் ஒதத்தடுப்பை மேம்படுத்தலாம். காலணி காலணி மேல் தோல். காலணி மேல் தோல் நீர்க் காப்புத் தன்மையைப் பெற்றிருக்க வேண்டும். இதற்கு நிறமிய பதனிட்ட தோலுக்கு நீர்க்காப்புத் தன்மை தரும் எண்ணெய்க் குழம்புகளைத் தோலுக்கு ஊட்டிப் பாடம் செய்யலாம். இதனால் மேல் தோல் சிறந்த நீர்க்காப்புத் தன்மையைப் பெற் றிருக்கும். மேலும் சிலிக்கான் மற்றும் குரோம் ஸ்டிரியோட்டோ குளோரைடையும் கொடுத்து நீர்க் காப்புத் தன்மையைப் பெறலாம். தோலுக்கு எண் ணெய்க் குழம்பு கொடுத்து அமிலத்தால் அக்குழம்பை முறித்த பின்பு, இந்தக் குளோரைடைக் கொடுக் கலாம். தோலாடைகள், தோலாடைகள் குறிப்பாகச் சுயட் (suede) தோல்கள் நீரை விலக்கும் தன்மை பெற் றிருக்க வேண்டும். தோலாடைகளைப் பதப்படுத்திய பின்பு சாயம் மற்றும் எண்ணெய் கொடுத்து அமிலம் கொண்டு அப்பொருள்களைத் தோலில் சேர்த்து வைப்பர். பின்பு குரோம் ஸ்டிரியோட்டோ குளோ ரைட் கரைசலைத் தோலுக்குக் கொடுத்துப் பாடம் செய்வர். இத்தோல்கள் உலர்ந்த பின்பு நீரை எதிர்க்கும் தன்மையைப் பெற்றிருக்கும். ஓத இடைப்பகுதி - எம்.எஸ்.ஒளிவண்ணன் கடலின் நீர்மட்டம் சூரிய, சந்திரனின் ஈர்ப்பு விசை யால் ஒரு குறிப்பிட்ட காலவரைக்குட்பட்டு உயர் வதையும் தாழ்வதையும் கடல் ஓதங்கள் என்பர். இதைச் செயற்கை முறையில் தணிக்க முடியாது. ஓதங்கள் உயர்வதால் உயர் ஓதமும் (high tide) தாழ்வதால் தாழ்வோதமும் (low tide) ஏற்படு கின்றன. ஓதத்தின்போது கடல்நீர்மட்டம் உயர்ந்து கடல்நீர் வெள்ளமெனக் கரையை நோக்கிஉயர்கிறது. கரையில் இவ்வுயர் ஓதம் தொடும் பரப்பை உயர் ஓதப்பகுதி என்பர். அதேபோல் தாழ்வோதத்தின் என்பர். உயர் ஓத இடைப்பகுதி 877 காரணமாக நீர் வடிந்து ஒரு குறிப்பிட்ட பகுதி வரை காணப்படும். இதைத் தாழ்வோதப் பகுதி ஓதப் பகுதிக்கும் பகுதிக்கும் தாழ்வோதப் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதி ஓத இடைப்பகுதி (intertidalzone) ஆகும். ஓதஇடைப்பகுதியில் நீர் நாள்முழுதும் நிலை யாகக் காணப்படுவதில்லை என்ற காரணத்தால் இப் பகுதியில் வாழும் உயிரிகள் பல்வேறு தகவமைப்பு களைக் கொண்டுள்ளன. அவற்றின் வாழ்க்கை முறை ஏனைய உயிரிகளின் வாழ்க்கை முறையினின்று சற்று மாறுபட்டுக் காணப்படுகிறது. ஓதயிடைப் பகுதியில் வாழும் உயிரிகள் எப்பொழுதும் அலையின் இயக்கத்தால் பாதிக்கப்படுகின்றன. தொடர்ச்சி யாக இப்பகுதியில் வரும் அலைகள் எண்ணற்ற உயிரிகளுக்கு நன்மையையும் அளிக்கின்றன. பொது வாகச் சில உயிரிகள் அலை அடிக்கும்போது அலை களோடு உருண்டு சென்று மீண்டும் அலை அடிக்கும் போது கரைப்பகுதியை அடைகின்றன. இத்த கைய நீரோட்ட நிலையிலும் பலவகையான குழியுடலிகள், புரையுடலிகள், பிரையோ சோவா போன்ற உயிரிகள் நன்கு வாழும் வண்ணம் தகவ மைப்புகளைப் பெற்றுள்ளன. மேலும் இவ்வுயிரி களின் வாழ்க்கை முறையை எண்ணற்ற காரணி களும் கட்டுப்படுத்துகின்றன. இயற்பியல் காரணிகள் அலை. ஓத அலைகளின் உயரம் அப்பகுதியில் நிலவும் பரப்பளவு. உயர் ஓதத்தன்மையைப் பொறுத்துக் காணப்படும். அவ்விடத்தில் காணப் படும் ஒத அகல்வு ஒட்டியே உயிரிகளின் எண்ணிக்கை அமைகிறது. அலைகளின் கடுமையான சீற்றத்தைக் கூட எதிர்த்து நின்று வாழும் திறன் படைத்த உயிரிகளும் ஏற்ற உடலமைப்புக் கொண்ட உயிரிகளும் ஓத இடைப்பகுதியில் வாழ முடியும். வெப்ப நிலை. ஓத நீரோட்டத்தைப் பொறுத் தும் கால நிலைமையைப் பொறுத்தும் ஓத்இடைப் பகுதியில் நிலவும் வெப்பநிலை மாறுபடுகிறது. எடுத் துக்காட்டாக திருவனந்தபுரம் கடற்கரைப்பகுதியில், தாழ்வோதப் பகுதியில் 29. 7-23. 1°C வரையிலும் நடுப்பகுதியில் 30.4 24.1°C வரையிலும் வெப்ப நிலை நிலவுவதாகக் கணக்கிட்டுள்ளனர். மாறுபட்ட வெப்பநிலையைத் தாங்கும் உயிரிகள் அவை வாழ் வதற்கேற்ற பகுதியைத் தேர்ந்தெடுக்கின்றன. ஒளி. ஓத இடைப்பகுதியைத் தாக்கக்கூடிய காரணிகளில் ஒளியும் ஒன்றாகும். ஒளியானது மணற் பகுதியில் சிறிது தொலைவே செல்லக் கூடிய தன்மை கொண்டது. ஓத இடைப்பகுதியில் வாழும் சில உயிரினங்கள் ஒளியுமிழும் தன்மையைக் காண்டு காணப்படுகின்றன.