பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/903

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓந்தித்‌ தூக்கு 879

ஏற்றுவதற்குப் பயன்படுகிற பொருத்தியே ஓந்தி அல்லது ஏற்றிக்கொக்கி (crane hook) எனப்படுகிறது. இதன் பருமனான குறுக்களவுப் பகுதி பாரக்கோட்டிற் குச் செங்குத்தாக உள்ளது. செங்குத்து விசை, வளை விசை இவற்றின் கூட்டுச் செயல்பாட்டை இப் பகுதியே தாங்க வேண்டியுள்ளது, கொக்கியின் ஏதே னும் ஒரு பகுதியில் உண்டாக்கப்படும் அழுத்தத்தை விங்கலர் சமன்பாடு மூலம் கணிக்கலாம். இம்முறையில் விசை சமமாகப் பகிரப்பட்டுள்ளதாக அறியப் படுகிறது. ஓரிடத்தில் செயல்படும் அழுத்தம் அவ் விடத்தில் செயல்படும் செங்குத்து விசை வளைவிசை வை இரண்டின் கூட்டுத் தொகையாகக் கொள்ளப் படுகிறது. சரியாக வடிவமைக்கப்பட்ட பகுதிகளில் இழு விசையும் அழுந்துவிசையும் பெரும்பாலும் சம அளவாகவே இருக்கும். இலேசான பொருள்களுக் கான கொக்கிகள் பெரும்பாலும் வட்டக் குறுக்குத் தோற்றமுடையவையாகவே இருக்கும். ஏனைய கொக்கிகள் நாற்சதுர வடிவுடனும் இரு முனை களிலும் உருட்டிவிடப்பட்ட தோற்றத்துடனும் அமைக்கப்படுகின்றன. வளைவிசைகள் குவிமுனை களில் உயர்கின்றன. இவ்விடங்களில் உட்புறத்தில் குறுக்களவு உயர்த்தப்படுகிறது. இக்கொக்கிகளின் குறுக்குத்தோற்றத்தைத் தோராயமான நாற்சதுர மாகக் கொண்டு விசைகளைக் கணிக்கலாம். வயி. அண்ணாமலை ஓந்தித் தூக்கு இது சுனமான பொருள்களைத் தூக்குவதற்குப் பயன் படும் ஒரு வகை ஊர்தி எந்திரமாகும். ஓந்தித்தூக்கு களில் (crane hoist) வடம் (cables) எனப்படும் உலோகக்சுயிறுகள் தூக்கிகளாகப் பயன்படுகின்றன. ஓந்தித் தூக்கு, எந்திரத்தின் அடித்தளக் கட்டமைப்பு (under carriage) ஆற்றல் உற்பத்திக் கருவிகள் (power units), கட்டுப்படுத்துங் கருவி (control units) ஆகியவற்றை உள்ளடக்கிய ஓர் அறை (cab), உலோக வடத்தை இயக்குவதற்கான வசதிகொண்ட நீண்ட மரச்சட்டம் (boom) ஆகிய மூன்று பகுதி களைக் கொண்டது. பொதுவாக அடித்தளக் கட்ட மைப்பின் தரத்தைக் கொண்டு ஓந்தித் தூக்கு பல வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது. கிராலர் ஓந்தித் தூக்கு (crawler crane) எனப் படும் ஒருவகைச் சுய அல்லது கையால் செலுத்தும் (self propelled) எந்திரம், இராணுவப் பீரங்கி வண்டி களில் பொருத்தப்படும் தொடர் இணைப்புகளில் அமைக்கப்பட்டுள்ளது. து தூக்கியின் எடையையே பரவலாக்கி விடுகிறது. எனவே இவ்வகை ஒந்தித் 879 ஓந்தித் தூக்கு தூக்குகள் மென்மையான நிலப்பரப்பில் பயன்படுத்தப் படுகின்றன. படம் 1. பாரவண்டி ஓந்தித் தூக்கு பாரவண்டி ஓந்தித் தூக்குகளில் (truck crane) கட்டுப்பாடு, ஆற்றல் உற்பத்திக் கருவிகள் பார வண்டிகளின் அடிமணையின் (chassis) மேல் அமைக் கப்பட்டுள்ளன. இவ்வகைத் தூக்குகள் சதுப்பு நிலங் படம் 2. தொடர் வண்டிப் பொறி ஓந்தித்தூக்கு