பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/905

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓப்பல்‌ 881

உருவில் சிறியவை. பெரியதலை நிமிர்ந்த காது கள், உறுதியான பற்கள் ஆகியவை ஓநாய்களின் சிறப்பமைப்புகள். ஓநாய்களின் நீண்ட, மெல்லிய முன்கால்களில் ஐந்து விரல்களும் பின் கால்களில் 4 விரல்களும் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை 42. தாடைகள் வலிமை பற்களின் மிக்கவை. அவை ஓநாய்களின் வாலின் மேற்புறத்திலுள்ள நறுமணச்சுரப்பி (scent gland) ஒன்றொடொன்று தொடர்பு கொள்ள உதவுகிறது. ஓநாய்கள் கூர்மை யான பார்வையுணர்வும் நுட்பமான கேட்கும் திறனும் மோப்ப உணர்வுமுடையவை. மோப்பத்திறனால் 1.6 கி.மீ. தொலைவிலுள்ள மானைக்கூட அறிந்துகொள்கின்றன இடையூறுகளுக்குட்படும்போது காதுகளை விறைப்பாக நிமிர்த்திப் பிடரிமயிரைச் சிலிர்த்துக் கொள்கின்றன. சராசரியாக மணிக்கு 25-35கி. மீ. வேகத்தில் ஓடக்கூடிய ஓநாய்கள் நன்றாக நீந்தவும் செய்கின்றன. 8 கி.கி. எடையுள்ள இறைச்சியை உண்ணும் திறம் மிக்கவை என்றாலும் தொடர்ச்சியாக 15 நாள்கள் வரை உணவின்றி வாழக்கூடிய தன்மையும் புலப்படுகின்றது. ஓநாய்களுக்கும் நாய்களுக்குமிடையே கலப்பினங் கள் (hybrids) உண்டாக்கப்படுகின்றன. இந்தக் கலப்புயிரிகளின் நடத்தை, மரபியல் பண்புகளைப் பற்றி முழுமையான குறிப்புகள் கிடைக்கவில்லை. வட அமெரிக்காவில் ஓநாய்கள் வளர்ப்பு களாக வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. இவை வளர வளர வீட்டுக்கு வரும் புதியவர்களைத் தாக்குவது, வீட்டுப் பொருள்களைப் பாழாக்குவது போன்ற வேண்டாத இயல்புகள் வளருவதால் இவை வீடுகளில் வளர்க்கத் தகுந்தவை அல்ல. விலங்க ஆனால் ஓநாய்கள்பாலூட்டிகள் வகுப்பில் ஊனுண்ணிகள் வரிசையில் (order carnivora) நாய்க்குடும்பத்தில் (canidae) வகைப்படுத்தப்பட்டுள்ளன. ஒப்பல் ஜெயக்கொடி கௌதமன் கண் இது இரத்தின வகையைச் சேர்ந்த ஒரு விலை உயர்ந்த மணியாகும். ஓப்பல் (opal) என்பது மணி எனத் தமிழில் பொருள்படும். கல் என்னும் தமிழ்ச்சொல்லே காலப்போக்கில் மருவி ஒப்பல் என்றானது என்பர். பொதுவாக, கறுப்பு நிற ஓப்பல் மிகவும் கவர்ச்சியுடன் இருக்கும். பால் போன்ற வெள்ளை ஓப்பலின் விலை மிகுதியாகும். உலகில் கிடைக்கக்கூடிய ஒப்பலில் ஏறத்தாழ 90% ஆஸ்திரேலியா கண்டத்தில் கிடைக்கிறது. ஓப்பல் 88/ மேலும் பிரேசில், ஜப்பான், அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளிலும் ஓரளவு கிடைக்கிறது. மிகவும் செல்வம் செறிந்த மேலைநாட்டார் மாதத்திற்கு ஓர் இரத்தின மணியை அணிவர். அவ்வகையில் ஓப்பல், அக்டோபர் மாதத்தில் அணியக்கூடிய யாகும். ஓப்பல் மாலை 6 மணிக்கு அணிய வேண்டிய தாகும். மணி ரோமர்களின் காலம் முதற்கொண்டு 17 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, ஓப்பல் இரத்தின வகைக் கற்களிலேயே உயர்ந்த இடத்தைப் பெற்று இருந்தது. ஆனால் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் இக்கல் உயர்நிலையை இழந்ததற்குக் காரணம் மக்களிடையே ஓப்பல் ஒவ்வாதது என்ற கருத்து காணப்பட்டதேயாகும். தன் நவரத்தினக் கற்களுக்கு மருத்துவப்பண்பு உண்டு என்னும் நம்பிக்கையின்படி ஓப்பல் கண்வலியை நீக்கக்கூடியது என மக்களுள் சிலர் கருதுவர். டாங்ஸ்டன் என்னும் 900 காரட் ஓப்பல், லண்டனில் உள்ளது. இதுவே உலகிலுள்ள பெரும் ஓப்பல் கல்லாகும். சிலிக்கா வகை நவரத்தினக் கற்களில் ஒன்றான ஒப்பல் கற்களில் காணப்படும் பல வண்ண வீச்சுப் (play of colours) பண்பே ஓப்பலின் தனிச் சிறப்பாகும். அனைத்து வகை ஓப்பல் கற்களிலுமே வ்வண்ண வீச்சு இருக்காது. இரத்தின வகை ஓப்பல். பல வகையான ஒப்பல் மணிகளில், விலை மதிப்புள்ள நான்கு வகை ஓப்பல் கற்கள் நகைகள் செய்யப் பயன்படுகின்றன. வெள்ளை ஒப்பல், வெள்ளை நிறத்துடன் கூடிய அழகிய பல வண்ண வீச்சு உடையது. பிற ஓப்பல் கற்களைவிட இதன் விலை மிகுதியாகும். கறுப்பு ஓப்பல், கரும் பச்சை கரு நீல வண்ணத்தைக் கொண்டது. தில் பல வண்ண வீச்சுக் காணப் படுவது வியப்பாகும். நெருப்பு ஒப்பல், நல்ல ஆரஞ்சு சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் ஒளிப்பண்பு ஒளி ஊடுருவும் தன்மையிலிருந்து ஒளி ஊடுருவாத் தன்மை வரை இருக்கும். ஒரு சில கற்களில் மட்டுமே பல வண்ண வீச்சுத் தென்படும். நீர் ஒப்பல், நீரைப் போன்று நிறமற்றதாக ஒளி ஊடுருவும் தன்மை கொண்டதாக இருக்கும். அழகான வண்ணக் கற்றைகள் இந்நிறமற்ற கல்லின் மூலம் வெளிப்படும். வேதி இயற்பியல் பண்பு. ஓப்பல் பிற சிலிக்கா கனிமங்களைப்போல் படிக அமைப்பின்றி இருப்ப தால், இதைக் கடின ஜெல் (hardened jelly) அல்லது அரைத் திண்மக் கரைசல் (gel) என்பர். SiO,n H,O என்பது ஒப்பலின் மூலக்கூறு வாய்பாடாகும். ஒப்பலில் நீரின் அளவு 1-21% வரை இருக்கும். இரத்தின வகை ஒப்பலில் 6-10% நீர் காணப்படும். பிற இரத்தினக் கற்களைப்போல ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் படிகமாகாமல், பாறை களில் காணப்படும் முடிச்சுப் போன்ற இடங்களையும், வரை