பக்கம்:அறிவியல் களஞ்சியம் 6.pdf/906

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

882 ஓப்பல்‌

882 ஒப்பல் பாறை கொண்டு அந்தந்த இடத்தின் அமைப்பிற்கேற்பப் பொங்கூசிப் குமிழ் குவை பாறை வடிவமாகவோ (stalagmite), வடிவமாகவோ (boityoidel) ஓப்பல் கிடைக்கிறது. இருக்கும். இதன் கடினத் தன்மை 5.5-6.3 வரை ஒழுங்கற்ற அல்லது சங்கு முறிவு, ஒப்பலின் பிறிதோர் இயற்பியல் பண்பாகும். விரிசல்களையும் பயன்படுத்திக் வரை ஒளியியல் பண்பு ஒப்பலின் ஒளி விலகல் எண் (refractive index) 1.44-1.46 வரை இருப்பதால் ஒளிவிலகல் இதைக் குறைந்த எண் கனிமமாகப் பிரித்துள்ளனர். இதன் அடர்த்தி 1.98-2,20 இருக்கும். வெள்ளை கறுப்பு ஒப்பலின் அடர்த்தி 2.10 ஆகவும்,நெருப்பு ஒப்பலின், அடர்த்தி 2.00 ஆகவும் இருக்கும். நெருப்பு ஒப்பல், ஒளிநிறமாலை (spectrum) ஈர்ப்புப் பணியில் சிவப்பு, ஆரஞ்சு நிற வண்ணக் கதிர்களைத் தவிரப் பிற வண்ணக் கற்றை களை வடிக்கும். நீளமான அல்லது குறுகிய அலை யுள்ள புற ஊதாக் கதிர்கள், ஓப்பலில் படும்போது கருஞ் ஊதா வண்ணத்திலிருந்து நீல வண்ணம், சிவப்பு வண்ணத்திலிருந்து பச்சை வண்ணம் போன்ற பல வண்ண வீச்சுகள் காணப்படும். பொதுவாகக் கறுப்பு ஒப்பலில் செயலாற்றல் இருக்காது. சில சமயங்களில் யுரேனியம் கனிமங்கள் ஒப்பலில் சிறி தளவு இருக்கும்போது தன்னொளிர்வு (fluorescence) உள்ளதாகக் காணப்படும். இவ்வகை யுரேனிய ஓப்பல்கள் அமெரிக்காவில் மிகுதியாகக் கிடைக்கின்றன. சிலியாவில் கிடைக்கும் பச்சை ஓப்பல் (நிக்கல் சிறிதளவு கொண்ட ஓப்பல்) ஒளிப்பண்பில் செயலற்றதாகும். ஒளி ஊடுருவிச் செல்லும் பாதையில் ஒப்பலைக் காணும்போது பன்னிறம் காட்டும் பண்பின்மையைக் காணலாம். ஆனால், ஒளிமேல் வந்து விழுந்து அழுத்தும்போது மட்டுமே ஒப்பலில் அழகான வண்ணக் சுற்றை வெளிப்படுகின்றது. னெனில், ஓப்பலில் காணப் படும் வேறு பட்ட ஒளிவிலக்கப் பண்பு கொண்ட மெல்லிய தகடுபோன்ற அமைப்பில் ஒளி விலகல் ஏற் படுவதால் வண்ணக் கற்றைகள் வெளிப்படுகின்றன. செயற்கை ஓப்பல். 1964இல் ஜெர்மானிய, ஆஸ்திரேலிய அறிவியலாளர்கள் மின்னணு நுண் தொலை நோக்கி கொண்டு ஓப்பலை ஆராய்ந்த போது, சிலிக்கா அணுவின் ஒழுங்கான அமைப்பை யும், அதற்கிடையேயுள்ள இடைவெளிப் பகுதிகளை யும் கருத்துடன் கணித்தனர். இந்த அமைப்பு முப்பரிமாணக் (3D) காட்சித் திறமுடைய அணிக் கோவையாக (lattice) இருப்பதைக் கண்டனர். சிலிக்கா நுண் உருளைகளுக்கிடையே உள்ள இடை வெளியே, ஒளி எதிர்பலிப்பை அளிக்கிறது என்பதை உணர்ந்து செயற்கை ஓப்பலைச் செய்ய முனைந் தனர். 1973இல் பியர் கில்சன் என்னும் ஜெர்மன் நாட்டறிஞர் இதில் வெற்றிகண்டார். ஜான் சுலோகம் என்னும் அமெரிக்க அறிஞர், 1976இல் சிறப்பான ஒருவகைக் கண்ணாடிப் பொருளால் அழகான செயற்கை ஓப்பலைத் தயாரித்தார். என கில்சன் தயாரித்த செயற்கை ஓப்பல் 2.05 அடர்த்தி கொண்டதாகவும் 4.5-5.5 வரை கடினத் தன்மை கொண்டதாகவும் இருந்தது. சுலோகம் தயாரித்த செயற்கை ஓப்பல் 2.4 அடர்த்தியும், 1.52 ஒளிவிலகல் எண்ணும் பெற்றிருந்தது. சுலோகம் கண்டுபிடித்த இக்கல் சுலோகம் கல் உலகச் சந்தைகளில் குறிப்பிடப்படுகிறது. இச்செயற்கைக்கல் கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், அலுமினியம், சிலிக்கேட்டிலான கண்ணாடி ஆகிய வற்றால் உருவாக்கப்படுகிறது. சுலோகம் செயற்கை ஓப்பல் மிகவும் கடினமாகவும், எளிதில் விரிசல் ஏற் படாததாகவும் எளிதில் மெருகேறும் பண்பு கொண்டதாகவும். இயற்கையில் ஓப்பல் ஒளிரும் வண்ண ஒளி வீச்சுக்குச் சமமான பல வண்ண ஒளி வீச்சுக் கொண்டதாகவும் உள்ளமையால் உலகச் சந்தையில் சுலோகம் கற்கள் விலை மிகுந்துள்ளன. நவரத்தின மதிப்பில்லாத பிற ஓப்பல். பச்சை ஓப்பலில் சிறிதளவு நிக்கல் இருப்பதால் இதன் நிறம் பச்சையாகத் தென்படுகிறது; மர ஓப்பல் - கால மாறுபாட்டால் கல்லாக மாறும் போது மர ஓப்பல் உண்டாகிறது. இது மஞ்சள் நிறத் தில் கறுப்புக் கோடுகள் கொண்டதாக இருக்கும். வாஸ்சூ நாட்டில் நெவேலோ என்ற இடத்தில் மிகுதி யாகக் காணப்படுகிறது; சிப்பி ஒப்பல் - சில சமயங் களில் காலமாறுபாட்டால் முந்தைய ஊழ் சிப்பிகள் (பெலோ மனைட்ஸ், கடல் சிப்பிகள், ஆற்றுச் சிப்பி கள்) கடினப்பட்டுக் கல்லாக மாறிச் சிப்பி ஒப்பலாக மாறுகிறது. இவ்வகை ஓப்பல் ஜிப்சம், கால்சைட் ஆகியவற்றின் மாற்றுப் போலி உருவமாகக் கிடைக் கிறது. ஹையலைம் - ஓப்பல் நிறமற்றது. ஒளியூடுருவுந் தன்மையுள்ள கண்ணாடியை ஒத்து இவ்வகை ஒப்பல் காணப்படுகிறது; பால் ஓப்பல்-பாலைப் போன்ற நிறமுடையது; கேகோலாங் - துளையுள்ளதாகவும். பீங்கான் போன்ற மேற்பரப்பைக் கொண்டதாகவும் காணப்படுகிறது. ஹைட்ரோபேன் - இது வெளிர் நிற முடைய ஓப்பல் ஆகும். நீரில் மூழ்கி இருக்கும்போது ஒளி ஊடுருவுந் தன்மை கொண்டதாகவும், வெளியே ஒளி ஊடுருவாத்தன்மை கொண்டதாகவும் காணப் படுகிறது: மெனிலைட் - இது பச்சை அல்லது கருஞ் சிவப்பு நிறம் கொண்ட முடிச்சுப் போன்ற அமைப் புடைய ஓப்பல்; டபாசீர்- இது மூங்கில் முட்டுகள் போன்ற அமைப்பைக் கொண்ட ஓப்பல்; ஜாஸ்பர் ஓப்பல் - இது சிவப்பு அல்லது கருஞ்சிவப்பு நிறம் கொண்டது. மணி வகையுடன் தொடர்பு கொண் டது: ஊதா ஓப்பல் மெக்சிகோவில் மிகுதியாகக் கிடைக்கிறது; நீல, பச்சை கிரைசோகொல்லா ஓப்பல்