884 ஓபர்த் ஹேர்மேன் ஜூலியஸ்
884 ஓபர்த் ஹேர்மேன் ஜூலியஸ் ஓப்பியத்தின் தீய விளைவு. மூச்சு விடலில் கடினம், குமட்டல், வாந்தி, கிறுகிறுப்பு, மனக்குழப்பம், மலச் சிக்கல், தோல் பொரிவுகள் உண்டாகின்றன. கண் பாவை சுருங்கி விடுவது, மயக்க நிலை, கடின மூச்சு ஆகியவை நச்சு விளைவின் மிக முக்கிய மூன்று அறிகுறிகளாகும். நச்சு விளைவுகளை அகற்ற, முதலில் இரைப்பையினுள் குழல் செருகி, அங்குள்ளவற்றை அகற்ற வேண்டும். இதற்கு 1:10,000 பொட்டாசியம் பெர்மாங்கனட்டைப் பயன் படுத்தலாம். முதலில் நாலுக்சோன். 0.4 மி.கி. பின்னர் நான்கு நிமிடங்கள் கழித்து 0.8 மி.கி. சிரை வழியாகவும் கொடுக்கப்பட வேண்டும். தேவையிருந்தால் நாலக்சோனை மீண்டும் மீண்டும் கொடுக்க வேண்டும். மார்ஃபீன் 8,10,15,30 மி.கி. அலகிலும் கோடீன் 15,30, 60 மி.கி. அலகிலும் கிடைக்கின்றன. அ. கதிரேசன் ஓப்பியம் புரிகிறது. அகவழி உருவாகும் பொருளான எண்டார்பின் ஒப்பியத்தின் வினைபுரிதலுக்குக் அகவழி காரணமாக இருக்கிறது. உறக்கமூட்டிகள், எண்டார்பின் ஏற்பிகளைத் தூண்டி, வலிநீக்கு உணர்வை உண்டாக்குகின்றன. மார்ஃபின், வலி உணர்வில் வினை புரிந்தாலும் பார்வை, கேட்டல், தொடு உணர்வு ஆகிய யவற்றைப் பாதிப்பதில்லை. பொரும்பாலான மக்களிடம் அமைதியூட்டி, உறக்கத்தை உண்டாக்கிய போதும், சிலரிடம் கிளர்ச்சியுணர்வு உண்டாகிறது. சிலருக்குக் குமட்டல் உண்டாகிறது. இருமல் எதிர் மருந்தாகவும் பயன்படுகிறது. சிறுநீர் பிரிவது குறைகிறது, இரத்தத்தில் குளுகோசின் அளவு ஓரளவு உயர்கிறது. கண்பாவை சுருங்குகிறது. மூன்றாம் தலை நரம்பான கண் தசை இயக்க நரம்பின் எடிங்கர்வெஸ்ட்பாலின் உட்கரு பாதிப்பால் கண்பாவை சுருங்குகிறது. அட்ரபின் மருந்து கொண்டு இதைச் சீர் செய்யலாம். பான்சு, முகுளத்திலுள்ள மூச்சு விடு மையங்கள் தாக்கமடைவதால் மூச்சு விடுவது பாதிக்கப்படுகிறது. இரைப்பை.சிறுகுடல், பெருங்குடல் ஆகியவற்றில் மெல்லிய தசையிழையின் திட்பம் பெருகுவதால், குடல் அசைவுகள் குறைந்து, இரைப்பையிலுள்ளவை சிறுகுடலினுள் செல்ல நேரமாகின்றது; மலச்சிக்கலும் உண்டாகிறது. ஒப்பிய அல்கலாய்டுகள் (மார்ஃபீன், கோடீன்) பெரும்பாலும் வலி நீக்கவே பயன்படு கின்றன. சில வேளைகளில் போக்கை நிறுத்தவும் ஒப்பியம் பயன்படுகிறது. ஓபர்த் ஹெர்மேன் ஜூலியஸ் இவர் தற்கால விண்வெளி இயலை உருவாக்கிய அறிஞருள் ஒருவர். ஜெர்மனி நாட்டு அறிஞரான ஓபர்த் ஹெர்மேன் ஜூலியஸ் 1894 ஆம் ஆண்டு ஆஸ்திரியா ஹங்கேரியைச் சேர்ந்த நாகிஸ்செபன் எனும் இடத்தில் பிறந்தார். பெயர்பெற்ற உயிரியங்கியல் அறிஞரின் மகனான இவர் மூனிச்சில் மருத்துவம் பயின்றார். முதல் படம்