ஓம் (அலகு) 885
உலகப்போரில் ஆஸ்திரிய-ஹங்கேரியப் படையில் சேர்ந்ததால் இவர் கல்வி தடைப்பட்டது. படையில் காயமடைந்த இவர் ஓய்வு நேரத்தில் விண்வெளி இயலைப் படிக்கத் தொடங்கினார். எடையின்மையை ஒப்புருவாக்கும் பல ஆய்வுகளை உருவாக்கினார். நீர்ம உந்து எரிபொருளால் நெடுந்தொலைவு செல்லும் ஓர் ஏவூர்தியை (rocket) வடிவமைத்தார். இதை இவரின் ஆணை அலுவலர் (commanding) போர் அமைச்சகத்துக்கு அனுப்பினார். இவ்வடிவமைப்பு மிகு கற்பனை என்பதால் ஏற்கப்படவில்லை. போர் முடிந்ததும் ஹைடெல்பர்க் பல்கலைக் கழகத்தில் ஓபர்த் தம் ஏவூர்தி வடிவமைப்புக்கான முனைவர் பட்டத்துக்கு விண்ணப்பித்தார். 1922 இல்* இது பல்கலைக் கழகத்தால் புறக்கணிக்கப்பட்டது. எனினும் இவர் கோளிடை விண்வெளிப் பயணத்துக் கான ஏவூர்தி (rocket interplanetary space) என்னும் புகழ்பெற்ற நூலைத் தம் செலவில் வெளியிட்டார். இந்நூலில் ஓபர்த் புவி ஈர்ப்பிலிருந்து தப்பும் வேகத்தை ஏவூர்தி அடையும் முறையைக் கணித இயலாக விளக்கியிருந்தார். த அமெரிக்கரான இராபெர்ட் கோத்தார்டின் என்பாரையும், ரஷ்யரான காண்டாண்டின் சாயில் கோவ்சுகி என்பாரையும் தொடர்புகொண்டு விண் வெளிப் பறப்பில் அவர்களின் பணியின் முதன்மையை (precendence) ஒப்புக்கொண்டார். 1929இல் வெளி யான விண்வெளியில் பறத்தலுக்கான வழிமுறைகள் என்னும் இவர் நூலுக்கு இராபர்ட் ஏசுநால்ட்டு பெல்டரி ஆந்திரே ஹிர்ஸ் பரிசான 10,000 ஃபிராங்கு (francs) கிடைத்தது. இதைக்கொண்டு இவர் நீர்ம உந்து எரிபொருள் ஏவூர்தி ஆய்வைத் தொடர்ந்தார். இந்நூல் முப்பதாண்டுக்கால மின்செலுத்த முறையை யும் மின்னணுச் செலுத்த முறையையும் முன் கணித்தது. 1931இல் ருமேனியப் பதிவுரிமகத்தி லிருந்து தம் நீர்ம உந்து எரிபொருள் ஏவூர்திக்கான பதிவுரிமம் பெற்றார். 1931 இல் பெர்லினில் முதல் ஏவூர்தி விண்ணிற் செலுத்தப்பட்டது. இல் 1938 இல் ஓபர்த் வியன்னா தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். 1940 ஜெர்மன் நாட்டுக் குடிமகன் ஆனார். பின்னர் 1941 இல் பீன்முந்தேயில் உள்ள ஜெர்மன் ஏவூர்தி வளர்ச்சி மையத்துக்கு (German rocket development centre) மாற்றப்பட்டார். இங்கு இவரின் முன்னாள் உதவி யாளரான வெர்னர் வான் பிரானுடன் பணி புரிந் தார். 1943 இல் இவர் திண்ம உந்து எரிபொருள் கொண்டு இயங்கும் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணை களை வடிவமைக்க வேறோர் இடத்துக்கு மாற்றப் பட்டார். இரண்டாம் உலகப்போர் முடிந்ததும் இவர் சுவிட்சர்லாந்தில் ஓராண்டு பணிபுரிந்து 1950 இல் இத்தாலிக்குச் சென்றார். இங்கு இவர் இத் ஓம் (அலகு) 885 ஆம் தாலிய வான்படைக்கான திண்ம உந்து எரிபொருள் ஏவூர்தியை வடிவமைத்துத் தந்தார். 1955 ஆண்டிற்குப் பிறகு அமெரிக்காவில் விண்வெளி இயலில் உயர் ஆராய்ச்சிகள் நிகழ்த்தி, 1958 இல் ஜெர்மனியில் ஓய்வு பெற்றார். 1962 வரை இவர் நியூரென்பர்க்கிற்கு அருகில் உள்ள ஃபென்சட் (Fencht) நகரத்தில் தம் ஓய்வுக் காலத்திலும் கோட்பாட்டியலான படிப்பைத் (theore- tical studies) தொடர்ந்தார். 1959 இல் இவர் பொருளும் வாழ்வும் என்னும் நூலை வெளியிட்டார். இதில் இவர் பொதுவுடைமையின் அடிப்படையான பொருள் முதல் வாதத்தை (materialism) எதிர்த்து, மனிதவாழ்வையும் ஆன்மாவையும் பொருளாதார முறையில் விளக்குவது அரிதென வாதிட்டுள்ளார். உலோ. செந்தமிழ்க்கோதை ஓம் (அலகு) மின்னியலிலும் மின்துகளியலிலும் மின்னோட்டத்தை வேண்டிய அளவிற்குக் கட்டுப்படுத்தலாம். இதற்கு மின் சுற்றுகளில் மின் தடையைப் பயன்படுத்துவர். இம் மின் தடை, மின்னோட்டத்தில் எலெக்ட்ரானின் வேகத்தைக் கட்டுப்படுத்தி மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. மின் தடையை அறிமுகப்படுத் தியவர் ஓம் என்னும் அறிவியலார் ஆவார். இவர் மின்னியல் துறைக்கு மிக இன்றியமையாத விதிகளில் ஒன்றான ஓம் விதியைத் தந்துள்ளார். ஓம் விதி கண்டுபிடிக்கப்பட்டபோதே மின்தடை பற்றி அறியப்பட்டது. தடையை அளவிட உதவும் அலகு ஓம் (ohm) ஆகும். பொதுவாகக் குறிப்பிட்ட உலோகங்கள், அமிலங் கள். உப்புக் கரைசல்கள் முதலியன மின்சாரத்தை நன்கு கடத்துபவையாகும். இவற்றில் தன்னிச்சை யாக இயங்கும் எலெக்ட்ரான்கள் (free electrns ) பெருமளவில் காணப்படும். மின் கடத்திகளில் மின் அழுத்தத்தைக் கொடுக்கும்போது வரையறுக்கப்பட்ட வழியில் எலெக்ட்ரான்கள் நகரும். இந்நகர்வை மின் தடை கொண்டு கட்டுப்படுத்தலாம். இவ்வாறு மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த உதவும் தடையை மேற்கூறியவாறு ஓம் என்னும் அலகைக் கொண்டு அளவிடலாம். நன்கு வரையறுக்கப்பட்ட ஒரு மின் சுற்றில், தேவைப்படும் மின்னோட்டத்தைப் பெற ஓம் விதியைப் பயன்படுத்தலாம். ஒரு மின் சுற்றில் R V I என்பது ஓம் விதி. அதாவது V என்பது மின் சுற்றுக்குள் கொடுக்கப்பட்ட மின்னழுத்தம். இம்மின்னத்தழுத்தம். வோல்ட்