886 ஓம் (அலகு)
886 ஓம் (அலகு) அலகால் குறிக்கப்படும்.1 என்பது மின்னழுத்தம். மின்னோட்டம் V - க்கு ஏற்ப மின் சுற்றில் ஏற்படும் ஆம்பியர் அலகால் அளவிடப்படும். மேற்கூறிய V மின்னழுத்தம் ஓம் விதியில் வோல்ட்டாக மின்னோட்டம் [ ஆம்பியராக இருக்கும்போதும். இருக்கும்போதும் R என்பது ஓம் ஆக இருக்கும் இதிலிருந்து ஓமைப் பின்வருமாறு வரையறுக் கலாம். ஒரு மின் கடத்தியின் தடை ஓர் ஓம் என்பது அக்கடத்திக்கு, வோல்ட் மின்னழுத்தம் மின்னோட்டம் ஓர் கொடுக்கும்போது ஓர் ஆம்பியர் ஏற்படுவதாகும், ஓர் ஓம் = ஓர் வோல்ட் ஓர் ஆம்பியர் ஆகும். ஓமை ? என்னும் கிரேக்க எழுத்தால் குறிப்பிடு வர். எடுத்துக்காட்டாக 1002. 1000 என்பவை 10 ஓம்,100 ஓம் என்பவற்றைக் குறிக்கும். மின் சுற்றின் தடை மிகுதியாக இருக்கும்போது அதை K (kilo ohm), MO (mega ohm) என்று குறிப்பிடுவர். K என்பது கிலோ அதாவது 10- ஐயும், M என்பது மெகா அதாவது 106-ஐயும் குறிக்கும். இதேபோல், குறைந்த- மின் தடையை m (milli ohm). 40 (micro ohm) என்று குறிப்பிடுவர். m என்பது மில்லி அதாவது 10-2 -ஐயும் என்பது மைக்ரோ அதாவது 106 ஐயும் குறிக்கும். ஓமைக் கொண்டு அளவிடப்படும் மின் தடைக்குச் சில விதிகள் உள்ளன. அவை இவ் விதிகள் யாவும் ஆய்வு மூலம் சரி பார்க்கப்பட்டவையாகும். அவை ஒரு மின் கடத்தியின் தடை, கடத்தியின் நீளத்திற்கு நேர் விகிதத்திலும் குறுக்கு வெட்டுப் பரப்புக்குத் தலைகீழ் விகிதத்திலும் (inversely (inversely proportional) இருக்கும்; கடத்தி செய்யப்பட்ட உலோகத்தைப் பொறுத்து இருக்கும்; கடத்தியின் வெப்பநிலையைப் பொறுத்திருக்கும் என்பனவாகும். அதாவது கொடுக்கப்பட்ட வெப்பநிலையில், உலோகக் கடத்தியின் நீளம் Lமீ என்றும் அதன் குறுக்கு வெட்டுப் பரப்பு A மீ" என்றும் கொண்டால், கடத்தியின் தடை R கீழே தரப்பட்டுள்ளது. RL/A அதாவது R = (1) கடத்தியின் இங்கு p என்பது மாறிலி; இது உலோகத்தன்மையைப் பொறுத்திருக்கும். இதற்குத் எண் (specific resistance) என்று தடை பெயர். இத்தடையைக் கீழ்க்காணுமாறு விளக்கலாம். மேற் கூறிய (1) என்னும் சமன்பாட்டில் L = 1, A= 1 என மதிப்பிட p = R ஆகும். அதாவது தடை எண் என்பது ஒரு கடத்தியின் நீளமும், குறுக்கு வெட்டுப் பரப்பும் ஓரலகாக இருக்கும்போது உள்ள அதன் தடையாகும். தடை எண் p- ஐ ஓம் - மீட்டர் என்னும் அளவையால் அளக்கலாம். தடை மின் வெப்பநிலை உயர உயர மிகும். மேற்கூறிய கருத்துகளை எளிய முறையில் தெரிந்து கொள்ளக் கீழ்க்காணும் எடுத்துக்காட்டுகளைக் காணலாம். ஒரு மின் கடத்திக்கு 20 வோல்ட் மின்னழுத்தம் கொடுக்கும்போது அக்கடத்தியில் 5 ஆம்பியர் மின்னோட்டம் ஏற்படுகிறது. ஆகவே அம் மின் கடத்தியின் தடை ஓம் விதிப்படி R = 4 = 20 5 4 ஓம் 200 மீ நீளமுள்ள ஒரு செம்புக்கம்பியின் தடை 21ஓம் கம்பியின் விட்டம் (d) 0.44 மி.மீ.இக்கம்பியின் மின் தடைp= இதில் A AR ஆகும். rd* = 0.1526x10- " ச.மீ. பிறகு p = 1.6× 10- ஓம்,மீ. ஆகும். ஆகவே மின்னோட்டத்தைக் கட்டுப்படுத்த மின் தடையைப் பயன்படுத்தலாம். எந்த அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை ஓம் விதியால் அறியலாம். குறிப்பிட்ட தடையை அதன் நீளம், குறுக்கு வெட்டுப்பரப்பு முதலியவற்றைக் கொண்டு கணக்கிடலாம். அனைத்துலக ஓம் என்பது 1893 இல் அனைத் துலக மின் கருத்தரங்கில் வரையறுக்கப்பட்ட நடை முறை அலகாகும். இது ஏறத்தாழ 1 ச. மி.மீ. சீரான விட்டமுள்ள நுண்குழலால் தாங்கப்படும் 14.4521 கிராம் எடையுள்ள 106.3 செ. மீ உயரப் பாதாசத்தூண் 0°C இல் நிலையான மின்னோட்டத் துக்குத் தரும் மின்தடை ஆகும். 1 தனிநிலை ஓம்= 0.999505 அனைத்துலக ஓம்; 1 மைக்ரோ ஓம் 0.000001 அல்லது (10~5) ஓம்; 1 மெகா ஓம்=10t ஓம் ஆகும். == -ஏ. கிருஷ்ணன்